தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளில், அதிரடியாக, 50 சதவீதம் ஒதுக்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சி. வீட்டை நிர்வகிக்கும் நம் பெண்களால், நாட்டையும் திறம்பட நிர்வகிக்க முடியும் என்பது நாம் அறிந்ததே. ஆனால், அரசியல்வாதிகளாக ஆட்சி செய்யாமல், மக்கள் மேம்பாட்டுக்காக உழைக்கும் அக்கறையாளர்களாக இருக்க வேண்டும். தலையாட்டும் பொம்மைகள் நமக்கு தேவையில்லை. தன்னலம் கருதாததலைவிகள் தான் தேவை. மேயர் புவனேஸ்வரி கூறியிருப்பதைப் போல, கஷ்டங்களையும், நஷ்டங்களையும் கடந்து தான் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் வரவேண்டும்.
நாயகி சொல்லியுள்ளது போல தன் வீட்டின், இந்த நாட்டின் தலையெழுத்தையே மாற்றும் ஒரு சக்தி தான் பெண். ஆனால், அந்த சக்தியை நல்லவற்றுக்கு பயன்படுத்து கிறாளா, தீயவற்றுக்கு பயன்படுத்துகிறாளா என்பது தான் செய்தி. மேலும், அந்த சக்தி மற்றவர்களால் வீணடிக்கப்படாமல் காப்பது மற்றுமொரு திறமை. இந்த திறமை பெண்களுக்கு கண்டிப்பாய் உண்டு. சமயமும், சூழ்நிலையும், காலமும் கூடி வந்தால், தன் திறமையால் பாரை ஆளும்
சக்தியாக மாறுவாள் பெண்!