க்ளவ்ட் சேமிப்பில் ஆண்ட்ராய்ட் போன் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

24 அக்
2016
00:00

நமக்கு மொபைல் போனில் பல வகையான செய்திகள் கிடைக்கின்றன. ஒரு சில செய்திகள் தவிர்த்து பெரும்பாலானவை, ஓரிரு நாட்கள் மட்டுமே முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கும். இவற்றை சிலர் உடனுக்குடன் அழித்துவிடுவார்கள். அழித்த பின்னரே, சில நாட்கள் கழித்து, 'அவற்றை வைத்திருந்திருக்கலாமே' என எண்ணுவார்கள். “கம்ப்யூட்டராக இருந்தால் சேமித்து வைத்திருக்கலாம். போனில் அந்த அளவிற்கு சேமிக்க முடியாதே” என்றும் எண்ணுவார்கள். ஆனால், இவை எல்லாவற்றையும் க்ளவ்ட் வகை சேமிப்பில் தானாக சேவ் செய்திடும் வகையில் அமைக்கலாம் என்பது பலருக்குத் தெரியாது. இது மிகவும் எளிமையான ஒரு வசதியும் ஆகும். இந்த செயல்முறையை இங்கு காணலாம்.
இந்த செயல்பாட்டின் அடித்தளமாக இருப்பது SMS Backup & Restore என்ற ஆண்ட்ராய்ட் செயலி ஆகும். இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி, டெக்ஸ்ட் மெசேஜ்களை Dropbox, Google Drive அல்லது ஒரு மின் அஞ்சல் கணக்கிற்கு அனுப்பி வைக்கலாம். அல்லது இந்த மூன்றுக்கும் அனுப்பி வைக்கலாம். மூன்றையும் பயன்படுத்த ஒரே மாதிரியான செயல்முறைதான் பின்பற்றப்படுகிறது. ஆனால், மிக அதிக எண்ணிக்கையில் எஸ்.எம்.எஸ். செய்திகள் இருந்தால், மின் அஞ்சல் கணக்கிற்கு அனுப்புவது சிக்கலாகிவிடும். இங்கு 'கூகுள் ட்ரைவ்' க்ளவ்ட் சேமிப்பில் எப்படி இவற்றைக் கொண்டு செல்வது எனப் பார்க்கலாம்.
முதலில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று, உங்கள் ஸ்மார்ட் போனில், SMS Backup & Restore செயலியை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். இன்ஸ்டால் செய்த பின்னர், அந்த செயலியை இயக்கவும். மிக எளிய மெனு ஒன்று காட்டப்படும். அதில், “Backup” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதைத் தேர்ந்தெடுத்தவுடன் கிடைக்கும் பக்கத்தில், நாம் நம்முடைய பிற ஆப்ஷன்களை தேர்ந்தெடுத்து அமைக்க இருக்கிறோம்.
இதில் பல ஆப்ஷன்கள் கிடைக்கும். எனவே, நமக்கு என்ன தேவை என்பதை முதலில் முடிவு செய்து, பின் அவற்றைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, Call Logs மற்றும் MMS Messages ஆகியவற்றையும் நாம் சேவ் செய்திட விரும்பினால், அவற்றையும் தேர்ந்தெடுக்கலாம். அதே போல, அனைத்து எஸ்.எம்.எஸ். செய்திகளையும் சேவ் செய்திட விரும்பாமல், குறிப்பிட்ட செய்தி தகவல் பரிமாற்றத்தை மட்டும் கூட தேர்ந்தெடுக்கலாம்.
உங்கள் விருப்பப்படி தேர்வுகளை முடித்த பின்னர், கீழாக இருக்கும் “Local Backup and Upload” என்ற பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இப்போது மூன்று புதிய ஆப்ஷன் கிடைக்கும். அவை: Upload to Google Drive, Upload to Dropbox, மற்றும் Upload to Email. நாம் எதனை விரும்புகிறோமோ, அதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கு Drive அல்லது Dropbox ஐத் தேர்ந்தெடுத்தால், உடனே ஒரு லாக் இன் திரை காட்டப்படும். அங்கு இன்னும் சில ஆப்ஷன்கள் உங்கள் தேர்வுக்கென காட்டப்படும். உங்கள் அக்கவுண்ட்டைத் தேர்ந்தெடுத்து ஓகே தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கு SMS Backup & Restore செயலி உங்கள் அக்கவுண்ட்டினை அணுகிச் செயல்பட நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும்.
லாக் இன் செய்தவுடன், பேக் அப் செயல்பாட்டினை வை பி இணைப்பில் மட்டுமே மேற்கொள்ளுமாறு ஆப்ஷன் தேர்ந்தெடுக்க வேண்டும். 'எந்த போல்டரில் சேவ் செய்திட வேண்டும்' மற்றும் 'மிகப் பழைய பைல்களை அழிக்கவா வேண்டாமா?' என்பதையும் குறிப்பிட வேண்டும். இங்கு போல்டர் என்பதைத் தேர்ந்தெடுக்க, அங்கு தயாராக எதுவும் தரப்பட்டிருக்காது. நீங்களாக பேக் அப் பைல்களுக்கென போல்டர் பெயரை டைப் செய்திட வேண்டியதிருக்கும். அல்லது, எந்தப் பெயரையும் டைப் செய்திடாமலும் விட்டுவிடலாம். மாறா நிலையில் root folder சேவ் செய்யப்பட வேண்டிய போல்டராக ஏற்றுக் கொள்ளப்படும். புதிய போல்டர்களை நீங்களே உருவாக்க முடியும் என்பதால், “SMS Backups” அல்லது இது போன்ற ஒரு பெயரில் போல்டர்களை உருவாக்கலாம்.
இவ்வாறு அனைத்தையும் தேர்ந்தெடுத்து முடித்தவுடன், அங்கு கிடைக்கும் “Test” என்ற பட்டனில் டேப் செய்திடவும். இதன் மூலம், நீங்கள் அமைக்க வேண்டிய அனைத்து அமைப்புகளையும் சரியாக முடித்துவிட்டீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இதனால், பின்னால் பிரச்னைகள் எதுவும் எழாமல் இருக்கும். “டெஸ்ட்” சரியாக அமைந்துவிட்டால், சேவ் செய்து முடித்துவிடலாம். Create New Backup திரையில், ஓகே தேர்ந்தெடுத்து இதனை முடிக்கலாம். அல்லது, இன்னொரு க்ளவ்ட் சேவையையும் பயன்படுத்த எண்ணினால், இதே போல, அதனையும் அமைக்கலாம். ஓகே டேப் செய்துவிட்டால், பேக் அப் செயல்பாடு, தானாகவே தொடங்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த க்ளவ்ட் சேமிப்பில், உங்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ். மற்றும் நீங்கள் தேர்ந்தெடுத்தவை அனைத்தும் பேக் அப் செய்திகளாக சேமிக்கப்படும்.

பேக் அப் காலவரையறை அமைத்தல்மேலே சொல்லபட்ட அமைப்புகளுடன் அப்படியே விட்டுவிடலாம். உங்கள் எஸ்.எம்.எஸ். செய்திகள், நீங்கள் தேர்ந்தெடுத்த க்ளவ்ட் சேமிப்பில் பேக் அப் ஆக அமையும். ஆனால், உங்களுக்கு வந்த அண்மைக் காலத்திய மெசேஜ் அனைத்தும் பேக் அப் செய்திடப்பட வேண்டும் என நினைத்தால், அவை சென்றடைய வேண்டிய கால வரையறையை அமைத்திட வேண்டும். இதற்குக் கீழே தந்துள்ளபடி செயல்படவும்.
முதலில், மேலாக வலது பக்கத்தில் உள்ள “மூன்று பட்டன்” ஐகானில் டேப் செய்து, கிடைக்கும் மெனுவில் “Preferences” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த மெனுவில் சற்று கீழாகச் சென்றால், “Scheduled Backups.” என்ற ஓர் ஆப்ஷன் கிடைக்கும். இதில் டேப் செய்திடவும். இந்த ஸ்விட்சை வலது பக்கமாக இழுத்து வைத்தால், Scheduled Backups இயக்கப்படும். உடன், கால வரையறையை அமைக்கலாம். ஒவ்வொரு நிமிடமும் பேக் அப் செய்திட அமைக்கலாம். அல்லது, 30 நாட்களுக்கு ஒருமுறை எனவும் அமைக்கலாம். நாள் ஒன்றில் ஒரு முறை என அமைப்பது நல்லது. ஆனால், இது நமக்கு வந்து சேரும் மெசேஜ் பொறுத்து அமைக்கப்பட வேண்டும். இந்த பேக் அப் எப்போது இயக்கப்பட வேண்டும் என்பதனையும் அமைக்கலாம். நாம் அனுப்புவதற்கென
எந்த டெக்ஸ்ட்டும் அமைக்காத நேரத்தில் மற்றும் நமக்கு மெசேஜ் வராத நேரத்தில், நாம் உறங்கும் நேரத்தில் என எதனை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். அதிகாலை மூன்று மணி இவை அனைத்திற்கும் சரியாக இருக்கும் என நினைக்கிறேன். இதனையும் அமைத்துவிட்டால், சரியாக இயங்கும்போது “அனைத்தும் சரியாக இயங்குகிறது” என ஒரு அறிவிப்பு உங்களுக்குக் கிடைக்கும். 'இது எதற்கு?' என நினைத்தால், இந்த அறிவிப்பு வரும் வழியையும் நிறுத்திவிடலாம்.
இனி, அந்த நிமிடம் முதல், நீங்கள் செய்து முடித்த அமைப்பு வழிகளுக்கேற்ப டெக்ஸ்ட் மெசேஜ் முழுவதும் பேக் அப் செய்யப்படும். மாறா நிலையில், SMS Backup & Restore செயலி, மெசேஜ் பைலை XML பார்மட்டில் சேவ் செய்திடும். எனவே, XML சப்போர்ட் செய்திடும் எந்த பிரவுசரிலும், இவற்றைக் காணலாம். இங்கு இன்னொரு வசதியும் தரப்பட்டுள்ளது. “Archive Mode,” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், ஒவ்வொரு மெசேஜ் கிடைக்கும்போதும், அது முந்தையவற்றிற்கு தொடர்புடையதாக இருந்தால், அவற்றுடன் அது இணைக்கப்படும். இதனால், ஒவ்வொரு தகவல் செய்தியும் புதிய ஒன்றாக பேக் அப் செய்திட வேண்டியதில்லை. இந்த வசதியை Preferences > Backup Settings > Archive Mode எனச் சென்று காணலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X