கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2016
00:00

கேள்வி: எனக்கு ஆறு ஆண்டுகளாக பேஸ்புக் அக்கவுண்ட் உள்ளது. அதனால், சென்ற ஆண்டில் இதே நாளில் என நான் முன்பு ஏற்படுத்திய பதிவுகள் காட்டப்படுகின்றன. இவை நாம் ஷேர் செய்தால் ஒழிய, பிறர் பார்ப்பதில்லை. ஆனால், நாம் மீண்டும் எண்ணிப் பார்க்க விரும்பாத பதிவுகள் காட்டப்படுகையில், “இவை வேண்டுமா?” என்ற எண்ணம் ஏற்படுகிறது? எனக்கு இது காட்டப்பட வேண்டாம் என்று பேஸ்புக் நிறுவனத்திற்குத் தெரிவிக்க முடியுமா? அதற்கான வழிகள் என்ன?
கா. நிர்மலா, கோவை.
பதில்:
நீங்கள் குறிப்பிடும் உணர்வுடன் பலர் இருக்கின்றனர். நாம் இது குறித்து பேஸ்புக் நிறுவனத்திற்கு எழுத வேண்டாம். நம் பக்கத்திலேயே இதனை அமைக்கலாம். குறைந்தது ஓராண்டு காலத்திற்கு வேண்டாம் என செட் செய்திடலாம். அந்த வழிமுறைகளை இங்கு தருகிறேன்.
இது போன்ற பழைய நிகழ்வுகளின் பதிவுகள் தரப்பட்டால், அதன் வலது மூலைக்குச் சென்று, அம்புக்குறி மீது கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் “Hide post” என்பதில் கிளிக் செய்திடலாம். உடனே பேஸ்புக் தான் வருத்தப்படுவதனைத் தெரிவிக்கும். அதன் பின்னர், உடனே, “On This Day Preferences”. என்ற பிரிவைப் பெற ஒரு லிங்க் தரப்படும்.
இங்கு தரப்படும் விருப்ப தேர்வுகளில், நீங்கள் யாருக்கெல்லாம் இந்த நிகழ்வு நினைவூட்டல் வேண்டாம் என விருப்பப் படுகிறீர்கள் என்பதனைத் தெரிவிக்கலாம். அல்லது, குறிப்பிட்ட இரு தேதிகளுக்கிடையே நடந்த நிகழ்வுகளைக் காட்ட வேண்டாம் என அமைக்கலாம். தேதிகளுக்கு அருகே இருக்கும் “edit” என்னும் லிங்க்கில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம். கிளிக் செய்தவுடன் “Select Dates” என்ற ஆப்ஷன் கிடைக்கும். தொடக்க நாள், முடிக்கும் நாள் என இரண்டையும் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இதில் எதிர்கால தேதியையும் (எ.கா. 2003 முதல் 2017 வரை) தரலாம். தேர்ந்தெடுத்த பின்னர், “Done” என்பதைக் கிளிக் செய்திட வேண்டும். இவ்வாறு தேர்ந்தெடுத்ததனை நீக்க வேண்டும் எனில், அதன் அருகே தரப்பட்டிருக்கும் சிறிய “X” அடையாளத்தில் கிளிக் செய்திட வேண்டும். அனைத்தையும் முடித்த பின்னர், On This Day preferences பிரிவை விட்டு செல்ல, “Done” என்பதில் கிளிக் செய்து வெளியேற வேண்டும்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தில் குரோம் பிரவுசர் பயன்படுத்துகிறேன். இதில் மிக அதிகமாக புக்மார்க் வைத்துள்ளேன். இவை ஏற்படுத்திய நாள் வரிசையில் உள்ளன. இவற்றை ஆங்கில அகர வரிசைப்படி அமைக்க முடியுமா? அப்படி அமைக்கப்பட்டால், புக்மார்க்குகளைத் தேடி இயக்குவது
எளிதாக இருக்கும்.
என். ஈஸ்வரி முருகேசன், தாராபுரம்.
பதில்
: எளிதாக இவற்றை நீங்கள் விரும்பும் வகையில் மாற்றி அமைக்கலாம். முதலில், பிரவுசரைத் திறந்து கொண்டு, பின்னர், வலது மேலாக உள்ள மூன்று புள்ளிகளில் கிளிக் செய்திடவும். (பிரவுசர் இயக்கத்தில் எந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றாலும், இங்கிருந்துதான் தொடங்க வேண்டும்) கிளிக் செய்து கிடைக்கும் பட்டியலில், “Bookmarks” என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து கிடைக்கும் பிரிவுகளில் Bookmark manager என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது புதிய பக்கம் ஒன்று கிடைக்கும். இதன் மேலாக, Organize என்ற ஆப்ஷன் இருக்கும். இதில் உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் பட்டியலில், Reorder by Title என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும் இனி, உங்களின் புக் மார்க்குகள் அகரவரிசைப்படி இருக்கும். தொடக்கத்தில் எண்களில் பெயர்கள் கொண்ட புக்மார்க்குகள் இருக்கும்.

கேள்வி: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிய பின்னர், ஆல்ட் கீ இணைந்த குறியீடுகள் சரியாக வேலை செய்திடவில்லை. ஆல்ட் குறியீடு என்பது, கீ போர்டில் இடது பக்கம் உள்ள ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, Num Lock அழுத்தப்பட்டு இயக்கப்பட்ட நிலையில், எண்களை இணைத்து அழுத்தினால், திரையில் தோன்றும் சில குறியீடுகள். இவை சரியாக இப்போது கிடைப்பதில்லை. இது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினால் ஏற்படும் பிரச்னையா? அல்லது வேறு புரோகிராம்களினால் ஏற்படும் பிரச்னையா? என்று தெரியவில்லை. சரியான வழி காட்டவும்.
எம். சுகுமாறன், படாளம்.
பதில்:
இந்த பிரச்னை குறித்து தீர்வுக்காய், இணையத்தைத் தேடும் முன், ஒதுக்கி வைத்திருந்த வாசகர் கடிதங்களைப் படித்தேன். அதில் மேலும் சில வாசகர்கள் இதே போல் எழுதி இருந்தது தெரியவந்தது. இந்தப் பிரச்னை, நீங்கள் பயன்படுத்தும் சில புரோகிராம்களினால் இருக்கலாம். அவை, சில கீ செயல்பாடுகளை முடக்கி வைக்கும். அந்த முடக்கி வைக்கும் புரோகிராம்களை நிறுத்தி விட்டால், இந்த குறைபாடு இருக்காது. இருப்பினும், விண்டோஸ் தளம் சென்று ஆய்வு செய்கையில் வேறு ஒரு தீர்வு, மிக எளிமையான, கிடைத்தது. அதன்படி, முதலில் Settings அழுத்தி செட்டிங்ஸ் விண்டோ பெறவும். இங்கு Ease Of Access பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் பல பிரிவுகளில், Mouse தேர்ந்தெடுக்கவும். இது காட்டும் சில பிரிவுகளில், கீழாக “Use mouse keys when Num Lock is on” என்று ஒரு பிரிவு இருக்கும். இதனை Off நிலைக்கு பட்டனைத் தள்ளவும். இனி, ஆல்ட் குறியீட்டுடன் நம்லாக் இயங்கிய நிலையில், எண்களை இயக்கி, குறியீடுகளைப் பெறலாம்.

கேள்வி: மொபைல் போன்களில், Discoverability factor என்று எதனைக் குறிப்பிடுகின்றனர்? அண்மையில் மொபைல் குறித்த ஒரு கருத்தரங்கில் இதனைப் பேசியவர் குறிப்பிட்டார். ஆனால், தெளிவாக இதனை விளக்கவில்லை.
ஆர். பரமேஸ்வரன், திண்டுக்கல்.
பதில்:
மொபைல் சாதனங்கள் (போன்கள் உட்பட) தங்கள் அருகில் உள்ள இன்னொரு மொபைல் சாதனத்துடன் இணைந்து கொள்ளக் கூடிய திறன், அல்லது மற்ற மொபைல் சாதனங்களால், அறியப்படக்கூடிய திறனையே Discoverability எனக் கூறுகிறோம். இந்த பண்பியலைக் கொண்டிருப்பதை, Discoverable Mode எனவும் கூறலாம். இவ்வாறு அறிவதும், அறியப்படுவதும், இரண்டு சாதனங்களுக்கிடையே இணைப்பினை (புளுடூத் போன்றவற்றால்) ஏற்படுத்துவதற்காக இருக்க வேண்டும்.

கேள்வி: என் லேப்டாப் கம்ப்யூட்டரில் இன்னும் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். இதுவே எனக்கு விருப்பமானதாக உள்ளது. இதில் பவர் பட்டனில், பவர் நிறுத்தும் இயக்கம் மட்டுமே உள்ளது. ஸ்லீப், யூசர் மாற்றம் போன்ற பிற பிரிவுகள் காட்டப்படுவதில்லை. இது கடந்த ஒரு மாதமாக உள்ளது. மீண்டும் கூடுதல் வசதிகள் கொண்ட மெனுவினைப் பெறுவது எப்படி?
என். சந்தியா ரமேஷ், சிதம்பரம்.
பதில்:
ஏற்கனவே, இந்த கூடுதல் ஆப்ஷன்கள் காட்டப்பட்டனவா? நீங்கள் பயன்படுத்தி வந்தீர்களா என்று சொல்லவில்லை. அப்படி இருந்தால், யாரோ ஒருவர் இதனை மாற்றி இருக்க வேண்டும். பரவாயில்லை. உங்கள் விருப்பப்படியே, மீண்டும் கூடுதல் வசதிகளைக் கொண்டு வரலாம். ஷட் டவுண் பட்டனில், மாறா நிலையில் இருப்பது, பவர் நிறுத்தம் மட்டுமே. இப்போது, ஸ்டார்ட் பட்டன் அழுத்தவும். பின்னர் கிடைக்கும் பவர் பட்டனில், ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில் switching users / going to sleep / Hybernate போன்றவை காட்டப்படும். நீங்கள் விரும்புபவற்றைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்தால், அடுத்து நீங்கள் பவர் பட்டனைக் கிளிக் செய்கையில், ஆப்ஷன்கள் அனைத்தும் காட்டப்படும். இதிலிருந்து நீங்கள் மேற்கொள்ள விரும்பும் முடிவை எடுக்கலாம்.

கேள்வி: விண்டோஸ் 10 பயன்படுத்துகிறேன். இதில் ஸ்டார்ட் மெனு கிளிக் செய்தால், பைல் எக்ஸ்புளோரர் உட்பட, நான்கு ஆப்ஷன் காட்டப்படுகின்றன. அதற்கான ஐகான்கள் கிடைக்கின்றன. ஆனால், அலுவலகத்தில் உள்ள விண் 10 கம்ப்யூட்டரில், இதில் இன்னும் பல போல்டர்கள் உள்ளன. இவற்றை எப்படி இதில் இணைப்பது?
ஆர். பைந்தமிழன், திருச்சி.
பதில்
: உங்களுக்கு விருப்பமான போல்டர்களைப் பெற எளிதான வழி ஒன்று நாடுகிறீர்கள், இல்லையா? நீங்கள் எந்த போல்டரையும், ஸ்டார்ட் மெனுவில் இணைக்கலாம். இதற்கு பைல் எக்ஸ்புளோரர் விண்டோவில், அந்த போல்டரின் பெயரில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Pin To Start என்பதில் கிளிக் செய்திட வேண்டும். அல்லது, பைல் எக்ஸ்புளோரர் விண்டோவில், அந்த போல்டரை மவுஸால் பிடித்து இழுத்து வந்து டாஸ்க் பாரில் உள்ள பைல் எக்ஸ்புளோரர் ஐகானில் விட வேண்டும். இதனால், அந்த போல்டர் Jump Listல் இடம் பெறும்.
இதற்கு இன்னும் ஒரு எளிய நுண்ணிய வழி உள்ளது. நீங்கள் குறிப்பிட்ட ஸ்டார்ட் பட்டன் அழுத்திக் கிடைக்கும் மெனுவிலேயே இவற்றை அமைக்கலாம். அதற்கு, Settings > Personalization > Start என முதலில் செல்லவும். பின்னர், இந்தப் பக்கத்தில், கீழாக ஸ்குரோல் செய்து செல்லவும். இங்கு Choose which folders appear on Start என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது பத்து போல்டர்கள் காட்டப்படும். File Explorer மற்றும் Settings என்பவற்றுடன், Documents, Downloads, Music, Pictures, மற்றும் Video ஆகியவை உட்பட மேலும் சில காட்டப்படும். இந்தப் பட்டியலில், Personal Folder கிடைக்கும். இதில், உங்கள் user profile கிடைக்கும். அதில் அதனுடன் இணைந்த அனைத்து போல்டர்களும் கிடைக்கும்.

கேள்வி: சாம்சங் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறேன். இதில் எனக்கு வேண்டியதைத் தேட, குரோம் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். இது அதிக இடம் எடுத்துக் கொள்கிறது என்றும் வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்துமாறும் என் நண்பர் கூறுகிறார். இது உண்மையா? வேறு பிரவுசரை எப்படித் தேர்ந்தெடுத்து அமைப்பது?
சி.டி. ஷரான் மேரி, சென்னை.
பதில்
: பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இயங்கும் குரோம் பிரவுசர் தான், அதிக டிஸ்க் பயன்பாட்டினை எடுத்துக் கொள்கிறது என்ற பரவலான குற்றச் சாட்டு இருந்து வருகிறது. அது உண்மையும் கூட. ஸ்மார்ட் போனில், குரோம் அதிக இடம் எடுத்துக் கொள்வதாக இருந்தால், நிச்சயமாக வேறு பிரவுசருக்கு மாறிக் கொள்ளுங்கள்.
1. முதலில் பிரவுசரைத் திறக்க குரோம் ஐகானில் தட்டவும்.
2. உங்கள் பிரவுசரில், அட்ரஸ் பாரினைஅடுத்து வலது மேல் பக்கம், மூன்று புள்ளிகள் கொண்ட ஐகான் ஒன்று இருக்கும்.
3. அதில் டேப் செய்திடவும். கிடைக்கும் கீழ்விரி பட்டியலில் Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு யாஹூ அல்லது பிங் சர்ச் இஞ்சின் தேர்ந்தெடுக்க வழி கிடைக்கும். உங்கள் போன் மாடலைப் பொறுத்து, வேறு சில சர்ச் இஞ்சின்களும் பட்டியலிடப்படலாம். நீங்கள் பயன்படுத்த விரும்பும் சர்ச் இஞ்சினுக்கான ஐகானில் தட்டி, அதனை உங்கள் மாறா நிலை தேடல் சாதனமாக மாற்றிக் கொள்ளலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X