'சவ்சவ்' பந்தலில் புகும் விலங்குகள் - கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2016
00:00

நிலத்தை உழவடை செய்வதற்கு முன் தழைச்சத்து மிக்க பசுந்தாள் இயற்கை உரங்களான தக்கைப்பூண்டு, சணப்பை, கொழிஞ்சி, நெட்டி உள்ளிட்ட தாவரங்களை பயிரிட்டு பூ பூக்கும் தருணத்தில் நிலத்தில் மடக்கி உழவடை செய்வர். இதனால் இயற்கை முறையில் மண் சத்து அதிகரித்து மண் வளம் பெருகும். மலைப்பயிரான சவ்சவ் சாகுபடியில் விவசாயிகள் இம்முறையை கையாள்கின்றனர்.

காட்டுப்பன்றியும், பெருச்சாளியும்







மலை பிரதேசங்களில் பசுந்தாள் பயிர்களை உழவடை செய்ய வாய்ப்பில்லை. எனவே வாழை, காப்பி கழிவுகளை மக்கச்செய்து, அத்துடன் ஆட்டு, மாட்டு சாணத்தை பதப்படுத்தி கலந்து இயற்கை உரமாக பயன்படுத்துகின்றனர். இம்முறையில் சவ்சவ் பயிரிட்டு அதிக மகசூல் ஈட்டுகிறார் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை விவசாயி சுசீந்திரன். சவ்சவ் காயில் இருக்கும் விதையை உண்பதற்காக காட்டுப்பன்றிகள், பெருச்சாளிகள் நிலத்தில் விதைக்கப்பட்ட சவ்சவ் விதைகளை தோண்டி எடுக்கும். இதனால் விதைகள் சேதமாகும். முளைப்புத்திறன் இல்லாமல் வீணாகும். சவ்சவ் விதைகளை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள், பெருச் சாளிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பத்தை சிறுமலை விவசாயி சுசீந்திரன் உள்ளிட்ட விவசாயிகள் கையாண்டு வருகின்றனர்.

'மேராக்காய்' எனும் சவ்சவ்







சுசீந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் ஊட்டியில் குன்னூர், கிளிஞ்சடா, தூதுர்மட்டம் ஆகிய பகுதிகளில் 'மேராக்காய்' என்ற பெயரில் சவ்சவ் விளைவிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஆடலூர், பன்றிமலை, சிறுமலையில் விளைவிக்கப்படுகிறது. சிறுமலையை பொறுத்தமட்டில் சவ்சவ் சீசன் துவங்கியுள்ளது.
ஊட்டியில் இருந்து விதைக்காய்கள் வாங்கி விதைத்துள்ளோம். சவ்சவ் காய்களுக்கு சென்னை வாசிகளிடையே அதிக மவுசு உள்ளது.
சவ்சவ் பந்தல் அமைக்க இரும்பு கம்பிகள், கல் கால்கள், குழி தோண்ட என ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும். மூன்றரை ஏக்கரில் 350 குழிகள் தோண்டி சவ்சவ் விதைத்துள்ளேன்.
மூன்றாவது மாதத்தில் இருந்து மகசூல் கிடைக்கும். காட்டுப்பன்றி, பெருச்சாளிகளை கட்டுப்படுத்துவதற்காக விதைக்குழியின் பக்கவாட்டு பகுதிகளில் கற்கள்
பதிக்கப்பட்டுள்ளது.
குழியில் இருந்து மூன்றடி உயரத்திற்கு வட்ட வடிவில் உரச்சாக்கு கட்டப்பட்டுள்ளது.

'தெறி'த்து ஓடும் விலங்குகள்







குழிக்குள் இருக்கும் சவ்சவ் விதையை தோண்டி எடுப்பதற்காக காட்டுப்பன்றிகள் கொம்புகளால் மண்ணை குத்தும்போது ஏற்கனவே பதிக்கப்பட்ட கற்களில் கொம்புகள் பட்டு வலி எடுக்கும். இதனால் காட்டுப்பன்றிகள் குழி தோண்டாமல் கிளம்பி விடும். பெருச்சாளிகள் குழியை பறிக்கும்போது கற்களில் விரல்களின் நகம் பட்டு தொடர்ந்து குழி பறிக்க முடியாமல் ஓடி விடும். இந்த எளிய தொழில்நுட்பத்தை பெரும்பாலான சவ்சவ் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
தென்மேற்கு பருவக்காற்றை நம்பி சிறுமலையில் சவ்சவ் நடவு நடக்கிறது. சவ்சவ் நடவு செய்த மூன்றாவது மாதத்தில் இருந்து காய்கள் பறிக்கலாம். 40 கிலோ கொண்ட சிப்பம் ஒன்று 1500 ரூபாய் வரை விலை போகும். தொடர்ந்து ஒன்பது மாதம் வருமானம் கிடைக்கும்.

சீசன் நேரத்தில் விலை விர்ர்







ஏக்கருக்கு 500 முதல் 700 சிப்பங்கள் மகசூல் கிடைக்கும். திருமணம், சுப நிகழ்ச்சி சீசன்களில் சவ்சவ் விலை அதிகரிக்கும். வாரம் இருமுறை கால்வாய் பாசன முறையில் நீர் பாய்ச்ச வேண்டும். மழையிலும் சவ்சவ் தடையின்றி வளரும். ஊடுபயிராக காப்பி, கான மிளகாய், பீன்ஸ், வாழை என விருப்பத்திற்கு ஏற்ப பயிரிடலாம். இதன் தொழில்நுட்பம் அறிய 84890 37576 ல் ஹலோ சொல்லலாம்.
- கா.சுப்பிரமணியன், மதுரை.

Advertisement

 

மேலும் விவசாய மலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X