'வாழை' | விவசாய மலர் | Agrimalar | tamil weekly supplements
'வாழை'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 அக்
2016
00:00

திருமண இல்லங்கள் தோறும் வாழை மரங்கள். திருவிழா மண்டபங்களிலே வாழைத் தோரணங்கள். மனித வர்க்கத்தின் இன்ப வாழ்விலே வாழை என்பது ஓர் இணையற்ற புனித தாவரமாக அமைந்து விட்டது. அரை மீட்டர் சதுரமும், அரை மீட்டர் அகலமும் ஆழமும் உள்ள குழிகளை தோண்டி எட்டு
அடிகளுக்கு ஒன்றாக இடைவெளி விட்டு வாழை கன்றுகளை நடவு செய்தலே முறையான செயலாகும்.
கன்றுகள் நடப்பட்ட குழிகளில் செழிப்பாக மண்ணை நிரப்பி கெட்டிப்படுத்தி, அவற்றின் நிலத்தை நன்கு குத்தி வரும் பட்சம், குருத்துக்கள் குறுகிய காலத்தில் உயர்ந்து வரும். காய்ந்த எருத்தூள், நைட்ரஜன் உரமாக இட்டு வர இயற்கையான நீர் வளம், நில வளம் சார்ந்த கண் காணிப்பிலே நல்ல பலனை தரும்.

நோய் தீர்க்கும் மருந்து
காண்போருக்கு வாழை தோட்டங்கள் கண்களுக்கு குளிர்ச்சியையும், சுத்தமான காற்றையும் தருகிறது. விவசாயிகளுக்கு சிறந்த தொடர் வருமானத்தை கொடுக்கின்றன. மொந்தம், பேயன், பூவன், ரஸ்தாலி, ரோபஸ்ட்டா, நாடான், கற்பூரம், ஏலக்கி ரகங்கள் மற்றும் மலை வாழை, செவ்வாழை, தோட்ட வாழை, குடகு வாழை, சிறுமலை வாழை என வாழையின் எண்ணற்ற பெயர் வகைகளுக்கு எல்லையே இல்லை.
இவற்றில் மாவுச்சத்து, புரதம், கால்சியம், நார்ச்சத்து, உயர்ந்த உயிர் சத்துக்கள் அடங்கியுள்ளன.

வாழைப்பழம் ஜீரணத்தை
சீராக்குவதோடு உடல் நலத்தை காக்கவும் செய்கிறது. ரஸ்தாலி அதிகமான ஊட்டச்சத்தை உடம்புக்கு அளிக்கிறது. நாட்டுப்பழம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.
பச்சை நாடன் உடம்பின் அதீத உஷ்ணத்தை மட்டுப்படுத்துகிறது. மலை வாழை, நாடியை சமநிலைப்படுத்துகிறது. நேந்திரம் சரீரப் புஷ் டியை உண்டாக்குகிறது. மொந்தன் பித்தத்தை போக்குகிறது. குடலில் உள்ள கிருமிகளை அழிக்கிறது.

புனித மரமானது வாழை
வாழைப் பூவின் துவர்ப்பு சுவை ஒவ்வாமையை மாற்றுகிறது. வாழைச்சாறு பருகி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து போகும். வாழை இலையில் உண்டு வந்தால் தேகத்தில் மினு மினுப்பு உண்டாகும்.
வாழைப்பிஞ்சு நீரழிவு நோய்க்கு சிறந்ததாகும். வாழைச்சாறு உடலுக்கு பலன் தரும். வாழைத்தண்டை சமைத்து சாப்பிட்டால் குடல் பிணிகள் தொலையும் என சித்த மருத்துவ குறிப்புகள் கூறுகின்றனர். வாழை நார்கள் பூ மாலை கட்ட பயன்படுகிறது. வாழை மட்டைகளில் அழகு பொருட்கள், ஆடைகள் தயாரிக்கின்றனர். வாழை கழிவுகள் மண்ணுக்கு இயற்கை உரமாக பயன்படுகிறது.
- எஸ்.நாகரத்தினம்
முன்னோடி விவசாயி, விருதுநகர்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X