இரண்டு விளையாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2016
00:00

கெட்டதை ஒழிச்சு. இருடள விரட்டி, வௌிச்சத்தோடு நல்லதை வரவேற்கிற நாள் தான் இந்த தீபாவளி. சரி... நம்ம பார்வைக்கு புலப்படுகிற இருட்டை. விளக்கொளியும், மாத்தாப்பு சிதறல்களும் போக்கிடும். ஆனா, மனசு, உணர்ற இருட்டை எப்படி போக்குறது? இரண்டு விளையாட்டு எனும் தீபங்களோடு வழிகாட்டுகிறார் கவிஞர் பா.விஜய்

வாழ்க்கை இரண்டு விதமான விளையாட்டுகளால் நிரம்பியது. சேப் சைடு கேம் - SAFE SIDE GAME; ரிஸ்கி கேம் - RISKY GAME. பாதுகாப்பாக ஒரு இடத்துக்குள் நின்று விளையாடுவது; பறந்து, விழுந்து, உடைந்து, எழுந்து விளையாடுவது! இவ்விரு விளையாட்டில், சேப் சைடில் தான், 98 சதவீதம் பேர்; ரிஸ்கி கேமில், 2 சதவீதம் தான்! 'சேப் மோடு' விளையாட்டு எப்போதுமே பெரிய பிரச்னைகளை சந்திக்காது. நிதானமாக தேவையான
போது விளையாட்டை ஆடலாம்; நிறுத்திக் கொள்ளலாம். அடி, வலி படாது. தலைக்கு மேல் கூரை; வளம் பூத்த நாட்கள்; கோவில், காதுகுத்து, பிறந்த நாள்; அடுக்கு மாடி, வாகனம், இடம் வாங்குவது; கிரஹ பரிகார பூஜைகள்; திருமண வரவேற்புக்கு பந்துக்களோடு சென்று நிதானமாய் உணவு ருசித்து, திரைப்படம் பார்த்து, இரவு கேளிக்கை கொண்டு, மருத்துவ காப்பீடு பெற்று, கார் கண்ணாடிக்கும் இன்சூரன்ஸ் செய்து என இப்படிப் போகும்.
ரிஸ்கி மோடு; நீண்ட பிரசங்கமெல்லாம் இதில் ஒன்றுமில்லை. இதில் கிடைப்பது சில தான். பிரச்னை, போராட்டம், தோல்வி, அவமதிப்பு. மறுபடியும் பிரச்னை, போராட்டம், தோல்வி, அவமதிப்பு. அதனால் தான், பெரும்பான்மை சேப் மோடு ப்ளே, 98 சதவீதமாகவும், ரிஸ்கி மோடு,
2 சதவீதமாகவும் உள்ளது.சரி, நாம் இப்போது எந்த விளையாட்டை விளையாட? யாருக்கு நிரந்தர வசதி வேண்டும்; யாருக்கு நீண்ட நிழல் வேண்டும்; எவருக்கு அமைதி வேண்டும்; இவர்களுக்கானது, சேப் மோடு ப்ளே. யாருக்கு நெடிய சாம்ராஜ்யம் வேண்டும்; யாருக்கு கனத்த கிரீடம் வேண்டும்; எவருக்கு சதா சவால்கள் வேண்டும்; இவர்களுக்கானது, ரிஸ்கி மோடு ப்ளே.உற்சாகமாய் வாருங்கள், ரிஸ்கி மோடுக்கு! இந்த விளையாட்டை விளையாட ஒரு ஊக்க மருந்து தேவை. விளையாட்டில் ஊக்க மருந்து தடை செய்யப்பட்டாலும், தடைகளை உடைக்கும் இந்த விளையாட்டை விளையாட இந்த ஊக்க மருந்து தேவை! ஏனென்றால்...
ஏக்கத்தோடு வாழ்பவனுக்குஎல்லா நாளும் மின்வெட்டு;ஊக்கத்தோடு வாழ்பவனுடைய ஒவ்வொரு செயலும் கல்வெட்டு! ஊக்க மருந்து அவசியம்; இந்த ஊக்க மருந்தை உட்கொள்ள நேரம்/கணக்கு ஏதும் கிடையாது.ரிஸ்கி கேம் விளையாடும் எல்லாரும், முடியும் போதெல்லாம் முடிந்தவரை அருந்த வேண்டிய ஊக்க மருந்து இது; அது தான் கற்பனை! ஆம், கற்பனை தான் அந்த ஊக்க மருந்து. கற்பனை என்றால் எப்படி? திரும்பத் திரும்ப ஒரு லட்சம் அல்லது கோடி முறை ஒன்றை பற்றிய கற்பனை தான், இந்த ரிஸ்கி கேம் ஆடுவதற்கான ஊக்க மருந்து! எத்தனையோ லட்சம் முறை கற்பனைக்கு பின்னர் நிஜமானது தான், பல சாம்ராஜ்யங்களின் அஸ்திவாரங்கள்! ரிஸ்கி கேம் விளையாட ஆரம்பிப்பவர்கள் மட்டுமே சாதிக்கின்றனர்; சராசரிகளை தாண்டுகின்றனர்; சவால்களால் செதுக்கப்படுகின்றனர்; போராட்டங்களால் வலிமை அடைகின்றனர்; தோல்விகளால் தெளிகின்றனர்; பிரச்னைகளால் தொலைநோக்கு பார்வை பெறுகின்றனர்.
சேப் சைடு கேமில் இருப்பவர்கள், 'ஏசி' காரில் வருகின்றனர். 'ஏசி' அரங்கில், வி.ஐ.பி., வரிசையில் அமர்கின்றனர். ரிஸ்கி மோடு ப்ளே ஆட்டக்காரர்கள், அந்த அரங்கின் மேடை மீது ஆரோகணித்து இருக்கின்றனர். இதனால், ரிஸ்கி கேம் ஆட ஆரம்பிப்பவர்கள் அனைவர் மனதிலும், ஆரம்பத்தில் ஒரு குழப்பம் ஏற்படும். ஒரு தவிப்பு நிலவும்.
'எப்படி ஜெயித்தோம்?' என்று புரியாதவன் எல்லாம் ராஜபாட்டையில் நடந்து வருவான். உலகம் பூங்கொத்து நீட்டி வரவேற்கும்; போட்டோக்கள் ஒளி மழையடிக்கும்; அவன் தான் வெற்றியின் நாயகன் என வாழ்வியல் கொண்டாடும்; 'எட்டு திசையும் இவன் பக்கம்' என இலக்கணம் கொக்கரிக்கும்! முறையான முயற்சி, வலி தாங்கிய போராட்டம், நெடுந்தொலைவு முட்பயணம் உடையவன் மனம், சமயத்தில் இதை கண்டு உடைந்து நொறுங்கும்.
உடையாதே மனமே! உலகில் எவர் பெறும் வெற்றி கண்டும் உடையாதே. அந்த எண்ணம் ஒரு அணு ஆயுதம். ஒரு துறையில் சக வெற்றியாளனோ அல்லது சந்தர்ப்பவசத்தால் வெற்றி பெறுபவனோ அடையும் வெற்றிகளை கண்டு ஸ்தம்பித்து விடாமல், அடுத்து ஒரு அடியை எடுத்து வைத்து விட்டால் போதும்; ரிஸ்கி கேம் விளையாடுபவன், அந்த பின்னடைவு எண்ணத்தில் இருந்து மீண்டு விடுவான்.
முன்பை விட பன்மடங்கு புத்தி கூர்மை படும்; தெளிவு பிறக்கும்; ஞானம் கசியும்; முழு ஆற்றலோடு மூளையும், உடம்பும் ஒரு கோட்டில் நின்று போராட ஆயத்தமாகும்! இந்தப் புள்ளி தான் தேவை. மூளையும், உடம்பும் ஒரு கோட்டில் நின்று கைகோர்க்கும் பயணத்தில் தான் ரிஸ்கி கேம் மோடு உச்சம் அடையும். பிரபஞ்சம் உன்னை கவனிக்கும். ஆம், பைபிளில் ஒரு வாசகம் ஈர்த்தது...
'குதிரை யுத்தத்திற்கு தயாராகி விட்டால் கிரீடம் மேல் இருந்து வரும்' தொடர்ந்து சுறுசுறுப்பாய் இருக்க முயற்சிக்கிறேன்; ஆனாலும், கஷ்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது, ரிஸ்கி கேமின் இரண்டாம் கட்டம். இதற்கோர் வாழ்வியல் உதாரணம். ஒரு அலுவலகத்தில் பத்து பேர் வேலை செய்கிறார்கள். அதில் சுறுசுறுப்பாய் இருப்பவன் ஒருவன் கவனிக்கப்படுவான். பலன்... அவன் பலரால், பல வேலைகளுக்கு தன் பலன் தாண்டிய வேலைகளுக்காக அழைக்கப்படுவான். ஊதியம் பத்து பேருக்கும் ஒன்றாகத் தான் இருக்கும். ஒரு தனித்துவத்தோடு பணிபுரிபவன், மற்றவர்களை விட இப்படி பல கஷ்டங்களை சந்திப்பான். ஆனால், அதே அலுவலகத்தில் ஐந்தாண்டு கழித்து சென்று பாருங்கள். ஒன்பது பேரும், அமர்ந்த இடத்திலேயே அமர்ந்து இருப்பார்கள்; அந்த தனித்துவ மனிதன், அந்த அலுவலகத்தின் புதியதோர் உயர் பதவியை அடைந்திருப்பான்!
ஆதலால், வலிகளை வரவேற்கப் பழகு; நிறைய வலிகளை உள் வாங்கு! வலிமையான காற்றின் மோதுதலால் செதுக்கப்படுகின்றன சிகரங்கள்; இது புவியியல் நிஜம்! வலியான வாழ்வியலால் செதுக்கப்படுகிறார்கள் சிகரங்களை போல் மனிதர்கள். முட்களில் மோதி விரல் கிழியாதவனுக்கு, பூக்களை தடவும் தகுதி கிடையாது. ரிஸ்கி கேமில்... எத்தனை பின்னடைவு, எத்தனை வீழ்ச்சிகள், எத்தனை அவமானம், எத்தனை தோல்விகள் வந்தாலும், பிடிவாதமாய் இலக்கின் மீது மட்டும் கவனம் பிசகாது, இலக்கை மட்டும் துரத்திக் கொண்டே எவன் ஓடுகிறானோ அவனை பிரபஞ்ச ஆற்றல் கவனிக்கிறது. அதைத் தான் எமர்சன் எழுதுகிறார்... 'ஒருமுறை நீ ஏதாவது ஒரு இலக்கை இதயப்பூர்வமாக தீர்மானித்து விட்டால், இந்த பிரபஞ்சமே திட்டமிட்டு அந்த இலக்கை அடைய துணை புரியும்'. இதோ, இலக்கை அடைய இதயத்தில் நிறுத்த வேண்டிய, 7 சூத்திரங்கள்...
M ஆழமாக வலிகளை அனுபவித்தல்
M போராட்டங்களை மிக வலிமையாய் சந்தித்தல்
M இலக்குகளை தெளிவாய் வைத்திருத்தல்
M எண்ணங்களால் கனத்த மலை போல் தன்னை கட்டமைத்தல்
M பாதுகாப்பை அடைய வேண்டுமென பதைபதைக்காது காத்திருத்தல்
M மூளையையும், உடம்பையும் நேர்கோட்டில் நிறுத்தல்
M தன் குறைகளை தானே தேடி வேட்டையாடல்
உலகம் அண்ணாந்து பார்க்கும் உயரம் சாத்தியம்.
மெய் வருத்த கூலி தரும்; இதுவே சத்தியம்!
நம்பிக்கையுடன்,
பா.விஜய்.

Advertisement

 

‘இப்படியும் சில மனிதர்கள்’ பகுதிக்கு உங்களை வியக்க வைத்த மனிதர்களைப் பற்றி எங்களுக்கு சொல்ல...044–2854 0092, pudhupayanam@dinamalar.in
மேலும் புதுப்பயணம் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X