கேள்வி-பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 ஜன
2011
00:00

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர், விண்டோஸ் எக்ஸ்பியில் பயன்படுத்துகிறேன். எப்போது ஒரு பைலை டவுண்லோட் செய்தாலும், சில நொடிகளுக்கு பிரவுசர் அப்படியே உறைந்து நிற்கிறது. பின்னர் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது. இது ஏன் ஏற்படுகிறது? பிரவுசரும் வேகம் குறைவாகச் செயல்படுவது போல் தெரிகிறது. இதனைத் தடுக்க முடியுமா? -சி. பூபேஷ் குமார், மதுரை.
பதில்: எப்போது டவுண்லோட் செய்த பின் இந்த பிரச்னை ஏற்படுகிறது என்று தெரிகிறதோ, உடனே அதனைச் சரி செய்வதில் உங்கள் கவனம் செல்லவில்லையா? டவுண்லோட் லிஸ்ட்டைத் திறக்கவும். இதற்கு கண்ட்ரோல் + ஜே கொடுக்கலாம். பின்னர், அந்தப் பட்டியலில் உள்ளதை நீக்கவும். இப்போது பாருங்கள். இனி, பயர்பாக்ஸ் மயங்காது; வேகமும் குறையாது.

கேள்வி: நான் ஆவணங்களைத் தயாரிக்கையில், இடையே மெடிகல் டெக்ஸ்ட்டினை இணைக்க வேண்டியுள்ளது. இவற்றில் உள்ள சொற்களின் ஸ்பெல்லிங் வழக்கமான டிக்ஷனரியில் அல்லது ஆங்கில மொழி வழக்கில் இருக்காது. எனவே வேர்ட் தொகுப்பு, இவற்றைத் தவறு என்று சிகப்பு கோடிட்டுக் கூறுகிறது. இது படிக்கும் போது எரிச்சலாக உள்ளது. இவ்வாறு தவறு கண்டுபிடிக்காதே என்று வேர்டுக்குச் சொல்ல முடியுமா? -சி.நரேஷ் குமார், சென்னை.
பதில்: நீங்கள் சொல்வது சரிதான். இதே பிரச்னை வேறு வழியாகவும் தெரியும். அதாவது, இது போன்ற ஸ்பெஷல் டெக்ஸ்ட் கொண்டு உங்கள் நண்பர் உருவாக்கிய டாகுமெண்ட் ஒன்றைத் திருத்துவீர்கள். அப்போது நீங்கள் திருத்தி அமைக்கும் புதிய சொற்களில், ஏதேனும் பிழை இருந்தால், அதனை வழக்கமான டெக்ஸ்ட்டில் பிழை திருத்துவது போலத் திருத்தாது. ஏனென்றால், அந்த டெக்ஸ்ட் அது போல ஸ்பெல்லிங் சோதனைகளுக்கு உள்ளாகாதவாறு பாதுகாப்பாக செட் செய்யப்பட்டிருக்கும். மேலே நீங்கள் சொன்ன பிரச்னைக்கு, இது போல டெக்ஸ்ட்டைப் பாதுகாத்துவிட்டால், இந்த ஸ்பெல்லிங் சோதனை இருக்காது. அந்த செட்டிங் அமைப்பினை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம்.
1. ஸ்பெல்லிங் சோதனை நடத்தப்படக் கூடாத டெக்ஸ்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும். 2. ரிப்பனில் “Review” டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். 3. இங்கு “Language” என்ற பிரிவில் “Language” பட்டனை அழுத்தி மெனுவினை விரிக்கவும். 4.கிடைக்கும் மெனுவில் “Set Proofing Language” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் “Do not check spelling or grammar” என்ற பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
உங்களிடம் வேர்ட் 2003 தொகுப்பு இருந்தால், Tools என்ற மெனுவில் கிளிக் செய்து, Language என்பதில் கிளிக் செய்திடவும். இனி Set Language என்பதில் கிளிக் செய்தால், மீண்டும் Language என்ற சிறிய விண்டோ ஒன்று கிடைக்கும். இதன் கீழாக, Do not Check Spelling or Grammar என்று ஒரு வரி இருக்கும். இதன் முன்னால் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தி, பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி அந்த டெக்ஸ்ட் பிரிவில் மட்டும் ஸ்பெல்லிங் செக் நடைபெறாது. நீங்கள் தவறாக ஒரு சொல்லை டைப் செய்தாலும், அந்த தவறு திருத்தப்பட மாட்டாது.

கேள்வி: என் எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பல செல்கள் இணைத்து SUMIF என்ற பங்ஷன் கொண்ட பார்முலா ஒன்றினை அமைத்தேன். ஆனால் சம்பந்தப்பட்ட செல்களில், டேட்டாவினை மாற்றுகையில், பார்முலா செயல்பட மறுக்கிறது. பார்முலா சரியாகத்தான் உள்ளது. தயவு செய்து தீர்வு ஒன்றை அளிக்கவும். -சி. எஸ். மருதநாயகம், புதுச்சேரி.
பதில்:பலருக்கு இந்த சந்தேகம் எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் செயல்படுகையில் ஏற்பட்டிருக்கும். ஏதேனும் ஒரு செல்லில் பங்சன் பயன்படுத்திய பார்முலா அமைத்திருப்பார்கள். இந்த பார்முலா சம்பந்தப்பட்ட செல்களில், டேட்டா மாற்றுகையில், இந்த பார்முலா, தன் தகவலையும் அப்டேட் செய்து, சம்பந்தப்பட்ட செல்லில் மாற்ற வேண்டும். பொதுவாக, ஒன்றிரண்டு மாற்றங்களை மேற்கொண்டு, இந்த அப்டேட்டிங் நடைபெறுகிறதா என்று கவனிப்போம். பலருக்கு இந்த அப்டேட்டிங் சரியாகவே நடைபெறும். ஆனால், ஒரு சிலர், என் ஒர்க் ஷீட்டில் நடைபெறுவதில்லயே என்று குறை கூறுவார்கள். இதற்குக் காரணம் அவர்களின் ஒர்க்ஷீட் அல்லது எக்ஸெல் தொகுப்பில் உள்ள செட்டிங்ஸ் தான். இதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலாம். முதலில், நாம், தானாகக் கணக்கிடும் செயல்பாடு இயங்கும் படி அமைக்கப்பட்டுள்ளதா என்று சோதனை செய்திட வேண்டும். நீங்கள் எக்ஸெல் 2007க்கு முந்தைய தொகுப்பினைப் பயன்படுத்து பவராக இருந்தால், கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. Tools மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
2. இங்கு கால்குலேஷன் டேப் காட்டப்படுவதனை உறுதி செய்து கொள்ளவும்.
3. இங்கு Automatic என்ற ரேடியோ பட்டன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
4.பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட் தயாரித்து முடித்த பின், ஒரு சில வரிகள் மட்டும் தனியே ஒரு பக்கத்தில் கடைசியாக இருக்கின்றன. இவற்றை முன்னால் உள்ள பக்கத்திற்குக் கொண்டு வந்து பிரிண்ட் எடுக்க, எந்த பகுதியை மாற்ற வேண்டும். மார்ஜினா, வரிகள் எண்ணிக்கையா? -சி. ஏகாம்பரம், திருப்பூர்.
பதில்: பக்க மார்ஜினை சிறிது நீட்டிக்கலாம். ஆனால் அது சில வேளைகளில் சமமாக இல்லாமல் செய்துவிடும். வேர்ட் தொகுப்பிலேயேஇதற்கு டூல் உள்ளது. ஆவணத்தைத் திறந்து, பின்னர் பிரிண்ட் பிரிவியூ செல்லவும். அந்த திரையில் “Shrink to Fit” என்று ஒரு ஐகான் பிரிண்ட் பிரிவியூ ஐகானுக்கு வலது பக்கத்தில் கிடைக்கும். இதனைக் கிளிக் செய்தால், நீங்கள் விரும்பும்படி பக்கங்கள் சுருக்கப்படும். சில வேளைகளில் சுருக்க முடியவில்லை என்றால், அதற்கான செய்தி கிடைக்கும். இந்த நிலையில் ஆவணத்தை சேவ் செய்து, மீண்டும், இதே கட்டளையைக் கொடுத்துப் பார்க்கவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் படங்கள் மற்றும் போட்டோக்களை அமைக்கையில், அவை ஆவணத்தின் பக்க எல்லையில் எங்கு அமரும் என்று தெரியவில்லை. ரூலர் இந்த வகையில் ஹெல்ப் செய்வதில்லை. இதனை அறிய என்ன செய்யலாம்? -க. அனிதா, அய்யம்பாளையம்.
பதில்: வேர்டில் மார்ஜின் இருந்தாலும், அதன் எல்லைகளை அறிய நான்கு புறமும் அல்லது இரண்டு புறங்களிலாவது கோடுகள் தரப்பட்டால் வசதியாக இருக்கும். இதனை வேர்ட் தானாகவே அமைத்துத் தருகிறது. இதற்கு முதலில் Tools மெனு சென்று அதில் Options என்னும் பிரிவைக் கிளிக் செய்து அந்த விண்டோவினைத் திறக்கவும். இதில் View என்னும் டேபைத் தேர்ந்தெடுக்கவும். அதில் ஒரு தனி விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் பல ஆப்ஷன்ஸ் பிரிவு இருக்கும். அதில் கீழாக உள்ள Print and Web Layout Options என்ற பிரிவிற்குச் செல்லவும். அங்கே Text Boundaries என்ற பிரிவின் முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இனி வேர்ட் டாகுமெண்ட் சென்றால் உங்கள் டாகுமெண்ட்டின் எல்லைக் கோடுகள் தெளிவாகத் தெரியும். நீங்கள் எளிதாக இயங்க இது கை கொடுக்கும். ஆனால் பிரிண்ட் எடுக்கையில் இந்த கோடுகள் வருமோ என்ற சந்தேகம் வேண்டாம். இவை உங்களுக்குத் திரையில் வழி நடத்தத்தான். அச்சில் வர இல்லை.


கேள்வி: இன்டர்நெட்டில் கிடைகும் ஷேர்வேர் மற்றும் பிரீவேர் அப்ளிகேஷன்களை நம்பி டவுண்லோட் செய்திடலாமா? தொடர்ந்து இவை செயல்படுமா? இரண்டில் எது சிறந்தது? -சி. உலகநாதன், போரூர்.
பதில்: இரண்டும் ஒன்றுதான். இந்த புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். தேவை இல்லை எனில் நீக்கிவிட வேண்டும். இவற்றில் சில தொடர்ந்து பயன்பாட்டிற்குக் கிடைக்கும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கை முறைகளில் பயன்படுத்த மட்டுமே கிடைக்கும். அதன்பின் தொடர்ந்து பயன்படுத்த பணம் கட்ட வேண்டும். அல்லது இந்த தொகுப்புகள் கூடுதல் வசதி தரப்படும் என செய்தி வரும். அவை நம்மைக் கவர்ந்திழுக்கும். ஆனால் அதற்குப் பணம் கட்டுமாறு செய்தி பின்னர் கிடைக்கும். சில தொகுப்புகள் எப்போதும் இலவசமாகவே கிடைக்கும். இருப்பினும் இவற்றைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கேள்வி: சென்ற வாரம் எம்.எஸ். ஆபீஸ் 2003 தொகுப்பினை மீண்டும் இன்ஸ்டால் செய்திட நேரிட்டது. இப்போது ஆபீஸ் தொகுப்பு எதனைத் திறந்தாலும், அதன் மெனு சிறியதாகவே விரிகிறது. ஒவ்வொரு முறையும், அதன் கீழ் உள்ள இரட்டை அம்புக் குறியினை அழுத்திய பின்னரே, முழு மெனுவும் கிடைக்கிறது. திறக்கும் போதே முழு மெனுவும் கிடைக்க என்ன செய்திட வேண்டும்? -கே. கண்மணி, தேவாரம்.
பதில்:ஆபீஸ் 2003 தொகுப்பில் எந்த அப்ளிகேஷனாயிருந்தாலும் (வேர்ட், எக்ஸெல், அவுட்லுக், பவர்பாயிண்ட், பப்ளிஷர்) “Tools” பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் “Customize” என்பதைக் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் பல டேப் அடங்கிய விண்டோவில் “Options” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Always show full menus” என்ற பிரிவில் கிளிக் செய்து பின் “Close” கிளிக் செய்து வெளியே வரவும். இனி அனைத்து ஆபீஸ் 2003 பிரிவுகளிலும் மெனு முழு மெனுவாகத் தோற்றமளிக்கும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL - odc,இந்தியா
28-ஜன-201108:59:34 IST Report Abuse
SENTHIL sir,i want to see tamil languge in மை மொபைல் மோடரோலா 76 ஹொவ்
Rate this:
Share this comment
Cancel
ரமேஷ் - குவைத்,குவைத்
09-ஜன-201115:12:22 IST Report Abuse
ரமேஷ் எனது கம்ப்யூட்டர் தானகவா சட்டௌன் ஆகின்றது அதை எப்படி சரி செய்வது,அதற்கு எதாவது கோடு இருகின்றதா அதை பற்றி உங்களுடைய பதிலை தயவு செய்து அடுத்த இதழில் சொல்லவும்.எதாவது எழுத்து பிழை இருந்தால் என்னை மன்னிக்கவும்.இப்படிக்கு ரமேஷ்.
Rate this:
Share this comment
Cancel
அஸ்கர் கே - பெங்களூர்,இந்தியா
07-ஜன-201111:41:45 IST Report Abuse
அஸ்கர் கே திருமுருகன் அவர்களே நீங்கள் ஜாவா சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்து எருப்பிகள் : முதலில் சாப்ட்வேர் இன்ஸ்டால் செயும் பொது அந்த சாப்ட்வேர் அதற்கு தகுததா என்று பார்க்க வேண்டும் . சரியான சாப்ட்வேர் தேர்வு செய்ய வில்லையன்றல் எப்படி பட்ட error தோன்றும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X