விண்டோஸ் சிஸ்டம் தரும் சாதனங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

07 நவ
2016
00:00

நீங்கள் விண்டோஸ் 7, விண்டோஸ் 8 அல்லது பழைய, புதிய விண்டோஸ் என எந்த இயக்க முறைமையைப் பயன்படுத்தினாலும், அதில் சிஸ்டத்தைச் செம்மைப்படுத்தும் பல சாதனங்கள் உள்ளன. ஆனால், அவை யாவும் வெளிப்படையாக இல்லாமல், மறைத்தே வைக்கப்பட்டுள்ளன. சில டூல்கள், ஸ்டார்ட் மெனு உள்ள இடத்தில் ஆழமாகப் புதைக்கப்பட்டு, எளிதில் கிடைக்காதபடி வைக்கப்பட்டுள்ளன. சில டூல்களை, ஒரு சிஸ்டம் கட்டளை கொடுத்தே பெற முடியும் என்ற வகையில் உள்ளன. ஆனால், இவற்றின் பெயர்களை நீங்கள் அறிந்தால், அவற்றின் மூலம் எளிதாக இவற்றைப் பெற்றுப் பயன்படுத்தலாம்.
பெயர் தெரிந்தால், ஸ்டார்ட் மெனு திறந்து, தேடல் கட்டத்தில், பெயரை டைப் செய்து, பெற்று பயன்படுத்தலாம். விண்டோஸ் 8 எனில், செட்டிங்ஸ் பிரிவை முதலில் தேர்ந்தெடுத்துப் பின்னர் தேடல் கட்டத்தில் தேட வேண்டும். இவற்றை இங்கு காண்போம்.

நினைவகச் சோதனை (Memory Diagnostic)உங்கள் கம்ப்யூட்டரின் மெமரியில் பிழைகள் உள்ளனவா என்று அறிய வேண்டுமானால், அதற்குப் பயன்படுத்த என, விண்டோஸ் Memory Diagnostic என்ற டூல் ஒன்றை வைத்துள்ளது. இதனைப் பயன்படுத்துகையில், அது உங்கள் கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து, கம்ப்யூட்டரின் மெமரியில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து சொல்லும். இதற்கு வேறு ஒரு நிறுவனத்தின் டூலைப் பயன்படுத்த வேண்டியதில்லை.

மூலத்திறன் கண்காணிப்பு (Resource Monitor)உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பல்வேறு மூலத்திறன்களின் பயன்பாட்டினை அளந்து தெரிந்து கொள்ள, விண்டோஸ் சிஸ்டம் Resource Monitor என்ற செயலியைக் கொண்டுள்ளது. சி.பி.யு., ஹார்ட் டிஸ்க், நெட்வொர்க், மெமரி கிராபிக்ஸ் என ஒவ்வொரு செயல்பாட்டின் திறனையும், புள்ளி விபரங்களோடு இந்த டூல் எடுத்துத் தருகிறது. இதன் மூலம், எந்த செயல்பாடு, உங்கள் கம்ப்யூட்டரில் டிஸ்க் இடத்தை அதிகமாக எடுத்துக் கொள்கிறது அல்லது நெட்வொர்க் இயக்கத்தின் திறனைப் பெருமளவில் பயன்படுத்துகிறது எனத் தெரிந்து கொள்ளலாம். இணையத் தொடர்பின் போது, எந்த இணைய முகவரியுடன் எந்த செயல்பாடு இணைந்து இயங்குகிறது என்பதனைக் கூட தெரிந்து கொள்ளலாம். டாஸ்க் மானேஜர் என்ற செயலி வழியாகத்தான் நாம் இதுவரை இது போன்ற செயல் திறன்களைத் தெரிந்து கொள்ளப் பழகி வந்துள்ளோம். ஆனால், அதனைக் காட்டிலும் கூடுதல் தகவல்களை ரிசோர்ஸ் மானிட்டர் தருகிறது.
ரிசோர்ஸ் மானிட்டரை இயக்கத்திற்குக் கொண்டு வர, முதலில் டாஸ்க் மானேஜர் செயலியைத் திறக்க வேண்டும். அந்த விண்டோவில், Performance என்னும் டேப்பில் கிளிக் செய்திட வேண்டும். பின்னர், கிடைக்கும் ஆப்ஷன்களில், Resource Monitor ஐத் தேர்ந்தெடுக்க வேண்டும். அல்லது நேராக, ஸ்டார்ட் மெனுவில், தேடல் கட்டத்தில் Resource Monitor என டைப் செய்து பெற்றும் பயன்படுத்தலாம்.

செயல் திறன் கண்காணிப்புசெயல்திறன் கண்காணிப்பு (Performance Monitor) செயலி மூலம் செயல் திறன் குறித்த தகவல் அறிக்கையினைப் பெற்றுப் பார்க்கலாம். இதன் மூலம், குறிப்பிட்ட கால நேரத்தில், செயல் திறன் சார்ந்த தகவல்கள் எவ்வாறு இருந்தன என்று பார்க்கலாம். சிஸ்டம் மாறுதல் எந்த வகையில், செயல் திறனைப் பாதிக்கிறது என்று கவனிக்கலாம். நெட்வொர்க்கில் இணைந்த இன்னொரு கம்ப்யூட்டரின் செயல் திறனையும் இதன் மூலம் கண்காணிக்கலாம்.

கம்ப்யூட்டரைக் கையாளுதலும், நிர்வகித்தலும்கம்ப்யூட்டர் ஒன்றைக் கையாள்வதற்கும், அதனை அதிகப் பயன் தரும் வகையில் நிர்வாகம் செய்வதற்கும், விண்டோஸ் சிஸ்டம் பலவகை டூல்களைக் கொண்டுள்ளது. மேலே நாம் பார்த்த செயல்திறன் கண்காணிப்பு (Performance Monitor), மைக்ரோசாப்ட் தந்துள்ள நிர்வாகத் தொகுப்பில் உள்ள பல சாதனங்களில் (Microsoft Management Console (MMC) tools) ஒன்றாகும். இவற்றில் பெரும்பாலானவற்றை Administrative Tools என்னும் போல்டரில் காணலாம். ஆனால், அனைத்தையும், கம்ப்யூட்டர் மேனேஜ்மென்ட் (Computer Management) என்னும் ஒரே ஒரு செயலியை இயக்கி, ஒரே ஒரு விண்டோவிலும் காணலாம். மற்றவற்றோடு, கீழே குறிப்பிட்டுள்ள சாதனங்களைக் கொண்டுள்ளது.

செயல் நிர்வாகம் (Task Scheduler)கம்ப்யூட்டரில் திட்டமிட்ட செயல்பாடுகளைக் கவனித்து அவற்றை நம் விருப்பத்திற்கேற்ப அமைத்திட உதவுகிறது.

நிகழ்வுகள் கண்காணிப்பு (Event Viewer)சிஸ்டம் செயல்படும் நிகழ்வுகளைக் கண்காணிக்க உதவும் செயலி. இதில் குறிப்பிட்ட செயல்பாடுகளை மட்டும் காணும்படி அமைக்கலாம். இதன் மூலம், சாப்ட்வேர் இன்ஸ்டலேஷன் முதல், அப்ளிகேஷன் க்ராஷ் ஆகும் நிகழ்வு வரை அனைத்தையும் காணலாம்.

பகிரப்பட்ட போல்டர்கள் (Shared Folders)இது ஓர் இடைமுகம். நெட்வொர்க் இணைப்பில், உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எந்த போல்டர்களை எல்லாம், மற்ற கம்ப்யூட்டர்கள் பகிர்ந்து கொள்கின்றன என்பதை இதன் மூலம் அறியலாம். ஒரே பார்வையில் பகிரப்பட்ட போல்டர்கள் அனைத்தையும் காட்டுவது இதன் சிறப்பியல்புகளாகும்.

சாதனங்கள் நிர்வாகம் (Device Manager)மிக அருமையான ஒரு டூல் இது. விண்டோஸ் இயக்கத்தின் மிகச் சிறந்த சிஸ்டம் செயலி. இதன் மூலம், நம் கம்ப்யூட்டர்களில் இணைந்து செயலாற்றும் சாதனங்கள், அவற்றின் திறன், அவற்றின் அப்போதைய நிலை ஆகியவற்றைக் கண்டு கொள்ளலாம். இந்த சாதனங்களின் இயக்கத்தினை, இதன் மூலம் செயல்படாமல் முடக்கி வைக்கலாம். இவற்றை இயக்கும் ட்ரைவர் புரோகிராம்களை வகைப்படுத்தலாம்.

டிஸ்க் நிர்வாகம் (Disk Management)இது டிஸ்க் உள்ளாகவே பதிந்து தரப்படும் செயலி. இதனைக் கொண்டு, டிஸ்க் இடம் பிரித்து அமைக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். இதற்கெனத் தனியே மற்ற நிறுவனங்களின் டூல்கள் அல்லது செயலிகள் தேவையில்லை.

சேவைகள் (Services)விண்டோஸ் இயக்கத்தின் பின்னணியில் இயங்கும் சேவைகளைக் கண்காணித்து, அவற்றைக் கட்டுப்படுத்த இந்த செயலியைப் பயன்படுத்தலாம்.
மேலே சொல்லப்பட்டவை சில செயலிகளே. Administrative Tools போல்டரில் இன்னும் பல சிஸ்டம் செயலிகள் உள்ளன. எடுத்துக் காட்டாக, Windows Firewall with Advanced Security என்னும் செயலி உள்ளது. இதனைப் பயன்படுத்தி, வைரஸ் தடுப்பு வேலியில் (Firewall) பல மேம்படுத்தப்பட்ட நிலைகளை உருவாக்கலாம்.

பயனாளர் கணக்கு பயன்பாடு (Advanced User Accounts Tool)விண்டோஸ் சிஸ்டத்தில் Advanced User Accounts Tool என்னும் பயனுள்ள செயலி ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளது. வழக்கமான விண்டோஸ் இடைமுகத்தில் இல்லாத சில விருப்பங்கள் இங்கு தரப்படும். இதனைச் செயல்படுத்த, விண்டோஸ் கீ + ஆர் கீயை அழுத்த வேண்டும். இதன் மூலம் Run பாக்ஸ் திறக்கப்படும். இதில் netplwiz அல்லது control userpasswords2 என டைப் செய்திட வேண்டும். பின்னர் என்டர் செய்திடவும். இதன் மூலம், சிஸ்டம் இயங்க பாஸ்வேர்ட் வேண்டுமா என்பதனையும், பாஸ்வேர்ட் ரீ செட் செய்வதனையும் மேற்கொள்ளலாம்.

டிஸ்க் சுத்தப்படுத்தல் (Disk Cleanup)விண்டோஸ் டிஸ்க் கிளீன் அப், மற்றவற்றைப் போல மறைத்து வைக்கப்படவில்லை. இதன் செயல்பாடு மற்றும் பயன் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை. இதனை இயக்கினால், நம் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்து, கம்ப்யூட்டரில் உள்ள அழிக்க வேண்டிய பைல்களை அடையாளம் கண்டு காட்டும். தற்காலிகமாக உருவாக்கப்பட்ட பைல்கள், பழைய சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட்ஸ் பைல்கள், விண்டோஸ் அப்கிரேட் செய்திடுகையில் விடப்பட்ட வீணான பைல்கள் எனப் பலவை நீக்க வேண்டிய பைல்களைப் பட்டியலிட்டுக் காட்டிப் பின்னர் அழிக்கும். பலர் பயன்படுத்தும் 'சிகிளீனர்' செயலியைப் போல, இது செயல்படுகிறது.

சிஸ்டம் செயல் அமைப்பு (MS Config)பலர் அறிந்து அடிக்கடி பயன்படுத்தக் கூடிய, அதிக செயல் திறன் கொண்ட எளிமையான செயலி இது. சிஸ்டம் செயல் அமைப்பினைக் காட்டும் விண்டோவாகும். விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு முன்னால் நமக்குக் கிடைத்த விண்டோஸ் சிஸ்டங்களில், விண்டோஸ் சிஸ்டம் இயங்கும் போதே, இயங்கத் தொடங்கும் புரோகிராம்களின் செயல்பாட்டினை முடக்கவும், செயல்படுத்தவும் இந்த செயலி உதவியது. எந்த செயலிகளை எல்லாம் ராம் மெமரியில் ஏற்றிப் பயன்படுத்த வேண்டும் என்பதனை இதன் மூலம் முடிவு செய்திடலாம். ஸ்டார்ட் மெனு தேடல் கட்டத்தில் MSconfig என டைப் செய்து, பெற்று பயன்படுத்தலாம்.

சிஸ்டம் தகவல்கள் (System Information)உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டம் குறித்த அனைத்து ஹார்ட்வேர் சாப்ட்வேர் தகவல்களை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டரின் பெயர், மாடல் எண், அதன் சி.டி.ராம் ட்ரைவின் எண், கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட துணை சாதனங்கள், வடிவமைக்கப்பட்ட சில மாறிலிகளின் நிலை, சிஸ்டத்துடன் இயங்கும் செயலிகளின் பெயர்கள் ஆகியவற்றை இதன் மூலம் அறியலாம். ஸ்டார்ட் மெனுவில், தேடல் கட்டத்தில் System Information என டைப் செய்து, இதனைப் பெற்று, மேலே தரப்பட்ட தகவல்களைப் பெறலாம்.
மேலே தரப்பட்டுள்ள, விண்டோஸ் டூல்கள் என அறியப்படும் செயலிகள் குறித்து முதலில் அறிந்து கொள்வது நல்லது. இவை எந்த விண்டோஸ் கம்ப்யூட்டரிலும் இருக்கும், அமைப்பின் இயக்கத்திற்கு உதவும் செயலிகளாகும். இவற்றை எந்த புரோகிராமினையும் இன்ஸ்டால் செய்திடாமல், தரவிறக்கம் செய்திடாமல் பெற்றுப் பயன்படுத்தலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X