விண்டோஸ் 10: வேகமாகச் செயல்பட
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2016
00:00

விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிய பின்னர், அந்த சிஸ்டத்தைத் தன் வயப்படுத்தி, விரைவாக அதனைச் செயல்பட வைத்திட, தேவையான வழிகளை இன்னும் பலர் அறியவில்லை. இதற்குக் காரணம், பெரும்பாலான புதிய வசதிகளும், வழிகளும் இதுவரை விண்டோஸ் இயக்கங்களில் இல்லாதவையாகும். ஆனாலும், மிக எளிதாக, அவற்றை வடிவமைத்துவிடலாம். இது போன்ற வழிகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. அவற்றில் சில முக்கிய வசதிகளை இங்கு காணலாம். இவற்றின் மூலம் நம் தேவைகளை எளிதாகப் பெற்று புதிய அனுபவத்தினை மேற்கொள்ளலாம்.

சி.பி.யு. அதிவேகச் செயல்பாடு
நீங்கள் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் பயன்படுத்துகிறீர்களா? அது எப்போதும் மின் சக்திக்கான இணைப்பிலேயே உள்ளதா? கம்ப்யூட்டருக்கான Power Options பிரிவில் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதின் மூலம், கம்ப்யூட்டரின் சி.பி.யூ. என்னும் மையச் செயலகத்தின் செயல்பாட்டினை அதிவேகப்படுத்தலாம். இதற்கு, டெஸ்க் டாப்பின் இடது கீழாக உள்ள ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மிக நீளமான மெனுவில், Power Options என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில், கம்ப்யூட்டரின் மின் சக்தியை அதிக அளவில் பயன் தரும் வகையில் வடிவமைக்கப் பல வழிகள் தரப்பட்டிருக்கும். அதில் நாம் விரும்பும் வகையில் மாற்றங்களை வடிவமைக்கலாம். குறிப்பிட்ட சில ஆப்ஷன்களில் எனக் கம்ப்யூட்டரை வடிவமைத்த நிறுவனமே குறிப்பிட்டிருக்கும். இதில் மாற்றங்களை ஏற்படுத்துவது, சில வேளைகளில், லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரி சக்தியை விரைவில் காலி செய்திடும் வகையினதாக இருக்கலாம். எனவே, கவனத்துடன் இதனை வடிவமைக்க வேண்டும். இதே விண்டோவில் Plan settings என்ற பிரிவிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

பைல் எக்ஸ்புளோரர் தேடல்கள்
விண்டோஸ் 10 இயக்கத்தில், அதன் பைல் எக்ஸ்புளோரரில் தரப்பட்டுள்ள ஓர் அருமையான வசதி அதில் மேற்கொள்ளும் தேடல்களை சேவ் செய்து பதிந்து கொள்வதாகும். இதன் மூலம் நாம் எப்போது வேண்டுமானாலும், தேடல் சார்ந்த முடிவுகளைப் பெறலாம். தரப்பட்டுள்ள படத்தில், அதிகமான .doc பைல்கள் உள்ள போல்டரில், நாம் விரும்பும் பைலைத் தேடிப் பெற்றது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேடலை, ஸ்டார்ட் மெனுவில் 'பின்' செய்து விட்டால் இன்னும் விரைவாக முடிவுகளைப் பெறலாம். இதற்கு, பைல் எக்ஸ்புளோரர் திறந்து, அதில் உங்களுடைய Users போல்டர் செல்லவும். தொடர்ந்து Searches துணை போல்டர் செல்லவும். அதில் saved search என்பதில் ரைட் கிளிக் செய்து, ஸ்டார்ட் மெனுவில் 'பின்' செய்து வைக்கவும்.

தேடல் இஞ்சின் மாற்றி அமைக்க
மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10ல், அதன் பயனாளர் மற்றும் கார்டனா, இதில் தரப்பட்டுள்ள Bing தேடல் இஞ்சினை, மாறா நிலையில் பயன்படுத்த அமைத்துள்ளது. கூகுள் அல்லது வேறு தேடல் இஞ்சினைப் பயன்படுத்துவதில் அதற்கு உடன்பாடு இல்லை. ஆனால், உங்கள் விருப்பம் வேறாக இருந்தால், கார்டனா செயலியை வேறு ஒரு சர்ச் இஞ்சின் பயன்படுத்தும்படி அமைக்கலாம். ஆனால், அதற்கு முன்னர், உங்கள் மாறா நிலை இணைய பிரவுசரை மாற்றி அமைக்க வேண்டும். உங்கள் மாறா நிலை பிரவுசர், பயர்பாக்ஸ் ஆக இருந்தால், கார்டனா 'கூகுள்' தேடல் சாதனத்தைப் பயன்படுத்தும். குரோம் உங்கள் மாறா நிலை பிரவுசராக இருந்தால், நீங்கள் Chrometana என்னும் குரோம் எக்ஸ்டன்ஷன் செயலியை முதலில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். பின்னரே, மாறா நிலை தேடல் சாதனத்தை நாம் விரும்பும் வகையில் அமைக்கலாம். இல்லை எனில், பிங் தேடல் சாதனத்தையே, கார்டனா செயலி பயன்படுத்தும்.

கார்டனா தேடலைக் கட்டுப்படுத்த
உங்கள் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10 உடன் இணைத்துத் தரப்பட்டிருக்கும் டிஜிட்டல் உதவியாளரான, கார்டனா நமக்குப் பல வழிகளில் உதவுகிறது. இதன் தேடல் இஞ்சினை மாற்றும் வழியை மேலே பார்த்தோம். இதன் செயல்பாட்டினை இன்னும் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அதனையும் மேற்கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, கார்டனா தேடுவதற்கு இணையத்தின் பக்கமே போக வேண்டாம் என்று கூட வரையறை செய்திடலாம். இதற்குக், டாஸ்க் பாரில் உள்ள, கார்டனா சர்ச் பாக்ஸில் கிளிக் செய்து, Cortana settings திரை செல்லவும். இதன் கீழாக Search Online And Include Web Results என்று இருக்கும். இதனை Off நிலையில் அமைக்கவும். அமைத்த பின்னர், கார்டனா இணையத் தேடல் முடிவு எதனையும் காட்டாது. இதற்கென மாறா நிலையில் எந்த தேடல் இஞ்சினைப் பயன்படுத்தும் வகையில் அமைத்திருந்தாலும், அதன் முடிவுகள் எதுவும் இங்கு காட்டப்பட மாட்டாது.

'ஒன் ட்ரைவ்' கூடுதல் பயன்பாடு
நாம் மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் ஒன்றை அமைக்கும்போது, நமக்குப் பல வசதிகள் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. அவற்றில் ஒன்று, 'ஒன் ட்ரைவ்' (One Drive) எனப்படும் க்ளவ்ட் தேக்ககம் பயன்படுத்தும் வசதியாகும். இதனை Fetch என்ற வசதியுடன் பயன்படுத்தினால், இன்னும் சில கூடுதல் வசதிகள் கிடைக்கும். (இது தனிநபர்களுக்கு மட்டுமே கிடைக்கும். வணிகத்திற்கென ஒன் ட்ரைவ் பயன்படுத்துவோருக்கு இல்லை)

ஒன் ட்ரைவ் ஐகான் மீது ரைட் கிளிக்
செய்திடவும். அதன் செட்டிங்ஸ் பிரிவிற்குச் செல்லவும். இதன் அடுத்த திரையில், (Microsoft One Drive) கிடைக்கும் சிறிய விண்டோவில், Settings என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Let Me Use OneDrive To Fetch Any Of My Files On This PC என்று ஒரு வரி இருக்கும். இதில் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இதன் மூலம், இந்த கம்ப்யூட்டரில் உள்ள எந்த ஒரு பைலையும், இன்னொரு கம்ப்யூட்டரில் எந்த பிரவுசர் மூலமாகவும் உங்கள் ஒன் ட்ரைவில் நுழைந்து பைலைப் பயன்படுத்தலாம்.

செயலிகள் பதியப்படும் டிஸ்க் மாற்றம்
தற்போது நமக்குக் கிடைக்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், வழக்கமான ஹார்ட் ட்ரைவ் மற்றும் சிறிய அளவில் கொள்ளளவு கொண்ட சாலிட் ஸ்டேட் டிஸ்க் (SSD) ஒன்றும் இணைத்துத் தரப்படுகிறது. வழக்கமான மெக்கானிகல் ட்ரைவ் தான் அதிகக் கொள்ளளவு கொண்டதாக இருக்கும். இதில் சாலிட் ஸ்டேட் ட்ரைவ், பூட் ட்ரைவ் ஆக, கம்ப்யூட்டரைத் தொடக்கத்தில் இயக்கும் ட்ரைவாக அமைக்கப்படுகிறது. நாம் தொடர்ந்து அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திடுகையில், இதிலேயே அப்ளிகேஷன் புரோகிராம்கள் இன்ஸ்டால் ஆகின்றன. பெரிய அளவிலான மெக்கானிகல் ட்ரைவ், டேட்டா ட்ரைவாகவே பயன்படுத்தப்படுகிறது. இதனை நிர்வகிக்க நாம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுகையில், நாம் டேட்டா ட்ரைவிலேயே இன்ஸ்டால் செய்திடவிரும்புவோம். சிறிய ஸ்டேட் ட்ரைவில் பதிந்திட விரும்பமாட்டோம்.
கம்ப்யூட்டரில் தரப்பட்டுள்ள மாறா நிலையை மாற்றி, மெக்கானிகல் ட்ரைவிலேயே, புரோகிராம்களைப் பதிக்கும் பணியையும் மேற்கொள்ளுமாறு செய்திடலாம். மாறா நிலையில் உள்ள அப்ளிகேஷன்களுக்கான ட்ரைவினை மாற்றி அமைக்க, ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், All Apps | Settings | System | Storage எனச் செல்லவும். இங்கு, அப்ளிகேஷன், டாகுமெண்ட்ஸ், மியூசிக், படங்கள், விடியோ என ஒவ்வொரு வகையையும் எந்த டிஸ்க்கில் ஸ்டோர் செய்து அமைக்க என ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். இங்கு அப்ளிகேஷன் ஸ்டோர் செய்யப்பட வேண்டிய ட்ரைவினை நாம் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். மற்றவை ஏற்கனவே, மாறா நிலையில், டேட்டா ட்ரைவில் அமைக்கும்படியாகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பழைய விண்டோஸ் சிஸ்டம் பைல் நீக்கம்
இப்போது ஹார்ட் டிஸ்க்கின் விலை எல்லாருக்கும் கட்டுபடியாகும் விலைக்கு வந்துவிட்டதால், அதனை மிகக் கவனத்துடன் பைல்களைச் சேர்த்து வைக்கப் பயன்படுத்தும் தேவை எழவில்லை. அதற்காக, நாம் ஹார்ட் டிஸ்க் இடத்தை வீணாகப் பயன்படுத்தத் தேவை இல்லை. நீங்கள், விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8.1 சிஸ்டத்திலிருந்து, விண்டோஸ் 10 சிஸடத்திற்கு அப்கிரேட் செய்திருந்தால், பழைய விண்டோஸ் சிஸ்டத்தின், சிஸ்டம் பைல்கள், உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில் ஒரு போல்டரில் வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் மீண்டும் விண்டோஸ் 7 /8.1 பக்கம் போகப்போவதில்லை என முடிவெடுத்தால், இந்த போல்டரில் இருக்கும் பைல்களை அழித்து, ஹார்ட் டிஸ்க்கில் அதிக இடம் பெறலாம். இந்த பழைய பைல்கள் உள்ள போல்டரை அழிக்க, பைல் எக்ஸ்புளோரர் திறந்து, விண்டோஸ் 10 சிஸ்டம் பைல்கள் உள்ள, 'சி' ட்ரைவிற்குச் செல்க. இதன் மீது, ரைட் கிளிக் செய்திடவும். அடுத்து, Properties என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் விண்டோவில், Disk Cleanup பட்டன் மீது கிளிக் செய்திடவும். இப்போது பைல்கள் ஸ்கேன் செய்யப்படும். தொடர்ந்து Clean Up System Files பட்டனில் கிளிக் செய்திடவும். பழைய சிஸ்டம் பைல்கள் நீக்கப்படும்.

பைல்களை அனுப்பும் இடங்களை அதிகப்படுத்த
பைல் எக்ஸ்புளோரரில் செயல்படுகையில், பைல் ஒன்றின் மீது கிளிக் செய்திட்டால், நீளமான ஒரு மெனு தரப்பட்டு, பல ஆப்ஷன்கள் தரப்படும். இதில் நீங்கள் குறிப்பிட்ட பைலை எங்கெல்லாம் அனுப்பலாம் என்பதற்கான இடங்கள் காட்டப்படும். ரைட் கிளிக் செய்கையில், ஷிப்ட் கீ அழுத்தியபடியே, ரைட் கிளிக் செய்து, Send To மெனு பட்டன் அழுத்தினால், வழக்கமாக எந்த இடங்களுக்கு பைலை அனுப்பலாம் என்று காட்டப்படுகின்ற பட்டியலில், இன்னும் கூடுதலான பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். பைலை அனுப்பும் நம் வேலை இன்னும் எளிதாக அமையும்.
மேலே தந்துள்ள குறிப்புகள், விண்டோஸ் 10 இயக்கத்தில் நாம் செயல்படுகையில், நம் கம்ப்யூட்டரின் வேலை திறனை அதிகப்படுத்தவும், எளிதாக்கவும் நமக்கு உதவும் குறிப்புகளாகும். இதே போல, இன்னும் அதிகமான வழிகளை, மைக்ரோசாப்ட் சப்போர்ட் இணையப் பக்கத்தில் காணலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X