இளஸ்... மனஸ்... (34)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2016
00:00

மதிப்பிற்குரிய ஜெனிபர் ஆன்டி... நான் கல்லூரியில் படிக்கும் மாணவி. எனக்கு ஒரு தம்பியும் உண்டு. எங்கள் பெற்றோர், சண்டை போடாத நாட்களை எண்ணி விடலாம். தேவையற்ற விஷயத்திற்கெல்லாம் சண்டை போடுவர்.
இதனால், படிப்பில் பலசமயம் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. என் தந்தைக்கு எதிராக தாயாரும் சரிக்கு சரி சண்டை போடுவார். யாராவது ஒருவர் தாழ்ந்து போக வேண்டும் என்று நினைக்காமல் இருவருமே, 'ஈகோ' பார்ப்பர்.
அடக்க முடியாத கோபத்தில் அப்பா, அம்மாவை அடித்து விட்டால், அறைக்குள் போய் கதவை சாத்திக் கொள்வார் அம்மா. பள்ளிக்கூடம் போகும் நேரத்தில் எங்களுக்கு எப்படி இருக்கும்னு யோசித்துப் பாருங்க ஆன்டி... இந்த சூழ்நிலையில் எங்களால் எப்படி படிக்க முடியும்?
'அம்மாவிடம், பொறுத்து சகித்துப் போங்க' என்றால் கேட்க மாட்டார். அப்பாவும் ஆணாதிக்க மனப்பான்மை உள்ளவர். இதனால், எங்கள் மனநிலையும், படிப்பும்தான் பாதிக்கப்படுகிறது. அருள் கூர்ந்து எங்கள் பெற்றோர் திருந்த ஒரு யோசனை கூறுங்கள் ஆன்டி!

ஓ டியர்! இன்று, 90 சதவீதத்தினர் வீட்டில் நடக்கிற விஷயம் இது தான். இந்த காலத்து பிள்ளைகள் விரும்பும் டாய்ஸ், டிரஸ், செல்போன், வீடியோ கேம்ஸ் என, எல்லாமே அதிகப்படியாகவே கிடைக்கிறது. அதே சமயம், பெற்றோர் போடும் சண்டைகள், பிள்ளைகள் மனதை மிகவும் பாதிக்கிறது.
சரி! இந்த, 'அட்வைஸ்' உன் பெற்றோருக்கு...
மற்றவர்களை விட மிகவும் வசதியாக வாழ வைக்க வேண்டும் என்பதற்காவே, இருவரும் உழைக்கிறீர்கள். ஆனால், என்ன பயன்... இப்படி விட்டுக் கொடுக்காமல் சண்டை போட்டு, குழந்தைகளின் நிம்மதியை கெடுக்குறீர்கள்... அவர்களது பிஞ்சு மனது எவ்வளவு பாதிக்கப்படும், என்பதை சற்று யோசித்துப் பாருங்க.
வாழ்க்கையில் எத்தனையோ பேரை சந்திக்கிறோம், அவங்க கிட்ட, 'அட்ஜஸ்ட்' பண்ணி போறோம்... கட்டிய கணவரிடம் எதற்காக, 'ஈகோ' பார்க்க வேண்டும். அவர் உங்கள் கணவர் தானே... உங்களுடைய சரீரத்தில் ஒரு பாதி அவர்.
உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும், சரிசமமாக நின்று போராடாமல், அமைதியாக, அவரது கோபம் தணிந்த பின், நல்ல மூடில் இருக்கும்போது, 'என்னங்க நீங்க சொல்வது சரிதான்... ஆனாலும் இப்படிச் செய்தால் நன்றாக இருக்குமா' என்று பொறுமையாக சொல்லிப் பாருங்களேன்; அவரும் புரிந்து கொள்வர். அப்படியும் ஒத்துக்கவில்லை என்றால், பிள்ளைகள் மூலம் சொல்லச் சொல்லுங்கள். எல்லா தகப்பன்களும் குழந்தைகள் சொன்னா உடனே, கேட்டுக்குவாங்க.
கணவர்களே... நீங்களும், உங்கள் மனைவியை நேசியுங்கள். அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்துப் பாருங்களேன்... அப்படியே உங்கள் காலடியில் விழுந்து கிடப்பர். இதைப் பார்க்கும் உங்கள் பிள்ளைகளும் உங்களை மதிப்பர்.
என்னோட மகளுக்கு ஆறு வயது இருக்கும்போது, என் மகன் ஒரு அழகான தீவின் படத்தை காட்டி, ' ஹனி நாம பெரியவங்களானதும் இந்த இடத்துக்கு போகலாமா?' என்றான்; அவன் வயது ஏழு.
உடனே என் மகள், 'சாரி அண்ணா... இப்பவே நான் ஓ.கே., சொல்ல முடியாது... நான் பெரியவளானதும் என், 'ஹஸ்பென்ட்' கிட்ட கேட்கணும். 'மம்மி' எப்படி, 'டாடி' சொல்றத கேட்கிறாங்களோ அப்படித்தானே நானும் என், 'ஹஸ்பென்ட்' சொல்ற தான் கேட்கணும்...' என்றாளே பார்க்கலாம்.
நானும், என் கணவரும், 'ஷாக்' ஆகிட்டோம். சின்ன குழந்தை மனதில் எந்த அளவுக்கு பெற்றோர் பாதிப்பை உண்டு பண்றோம் பார்த்தீர்களா...
தயவு செய்து உங்கள் செல்லங்களின் மகிழ்ச்சி, சந்தோஷம், எதிர்காலத்தை நினைத்தாவது நீங்கள் இருவரும் சண்டை போடுவதை விட்டுவிட்டு, அன்பாக இருக்கப் பழகுங்க பெற்றோரே...
உங்கள் செல்லங்கள் விரும்பும் பொருட்களை வாங்கிக் கொடுப்பது பெரிதல்ல; அதை விட சந்தோஷம், நீங்கள் இருவரும் ஒற்றுமையாக, விட்டுக் கொடுத்து அன்பாக இருந்து காட்டுவதுதான்.
யாராவது தன்னுடைய சொந்த உடலையே வெறுப்பாங்களா... அப்படினா உங்களது சரீரத்தில் பாதியான, உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ எப்படி நீங்கள் வெறுக்க முடியும்... ஒரு பாதி சரீரம் கெட்டுப் போயிருந்தாலும், உங்களது அன்பான மருந்தால், அந்த பாகத்தை சரி செய்யுங்கள்; இல்லையென்றால் பாதிப்பு உங்கள் முழு குடும்பத்திற்குதான். இதுதான் உங்க பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்கும் மிகப் பெரிய பரிசு!
உங்கள் நலனில், அக்கறை கொள்ளும்,
- ஜெனிபர் பிரேம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X