ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால? (34)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2016
00:00

ஹாய்... ஹாய்... ஹவ் ஆர் யு... ஆர்வம் குறையாமல் ஆங்கிலம் கற்கும் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். சரி, இன்றைக்கு நாம படிக்கப் போறது Future Continuous tense.
எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்த செயல் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருப்பதை குறிப்பிட Future Continuous tense பயன்படுகிறது.
Sub + will be / shall be + ing from of the verb

உதாரணம்:
1. Tomorrow I will be writing a letter - நாளை நான் ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருப்பேன்.
2. They will be having breakfast at 8 AM - அவர்கள் காலை 8 மணிக்கு காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருப்பர்.
3. He will be waiting for me on the way - அவன் எனக்காக வழியில் காத்துக் கொண்டிருப்பான்.
4. Tomorrow by this time, rani will be cursing me - நாளை இதே நேரத்தில், ராணி என்னை சபித்துக் கொண்டிருப்பாள்,
5. Mary will be dancing by this time tomorrow - மேரி நாளை இதே நேரத்தில் நடனம் ஆடி கொண்டிருப்பாள்.
6. I shall be dancing - நான் நடனம் ஆடிக் கொண்டிருப்பேன்.
7. She will be studying at 6 clock - அவள் 6 மணிக்கு படித்துக் கொண்டிருப்பாள்.
8. We shall be talking at that time - நாங்கள் அந்த நேரத்தில் பேசிக் கொண்டிருப்போம்.
9. Kannan will be acting - கண்ணன் நடித்துக் கொண்டிருப்பான்.
10. we shall be drinking tea at that time - நாங்கள் அந்த நேரத்தில் டீ குடித்துக் கொண்டிருப்போம்.
இதே போன்ற வாக்கியங்களை நீங்களும் எழுதிப் பழகுங்களேன்.

இங்கே தமிழ் வாக்கியங்கள் சிலவற்றை கொடுக்கிறேன். இவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து Practice பண்ணுங்க சரியா?
1. அம்மா இப்போது எனக்காக காத்துக் கொண்டிருப்பாள்.
2. அவர்கள் எனக்காக உணவு சமைத்துக் கொண்டிருப்பார்கள்.
3. தீபா பரீட்சை எழுதிக் கொண்டிருப்பாள்.
4. நாங்கள் ஊருக்கு போய் கொண்டிருப்போம்.
5. நான் பத்திரிகை வசித்துக் கொண்டிருப்பேன்.
6. அவர்கள் என்னை கேலி செய்து கொண்டிருப்பர்.
7. ரேணு நாளை இந்த நேரம் விமானத்தில் பறந்து கொண்டிருப்பாள்.
8. ரேவதி பணத்தை எண்ணிக் கொண்டிருப்பாள்.
9. நாங்கள் அப்போது பார்க்கில் விளையாடிக் கொண்டிருப்போம்.
10. அவர்கள் சினிமாவுக்கு போய் கொண்டிருப்பர்.

இதுபோதும் என்று நினைக்கிறேன். மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கலாம் ஓ.கே!
Until then bye bye...
Varshitha.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X