லிமா
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2016
00:00

தென் அமெரிக்க கண்டத்திலுள்ள பெரு நாட்டின் தலைநகரமும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் தான் லிமா.
அந்நகர மக்கள் பயப்படுவது பூகம்பத்துக்கோ, தீ விபத்துக்கோ அல்ல. அவர்கள் பயப்படுவது மழைக்குத்தான்!
மழைக்கா என்று வியப்படைகிறீர்களா... வியப்படைய வேண்டாம்; உண்மை தான். ஒரு பெருமழை பெய்தால், லிமா நகரத்து வீடுகள் அனைத்தும் மழை நீரில் கரைந்து காணாமல் போய்விடும்!
வெயிலில் காய்ந்த களிமண் கற்களால் எழுப்பப்பட்ட சுவர்களையுடையது லிமா நகர மக்களின் வீடுகள். சுட்ட செங்கற்களால் அல்ல; சுடப்படாத களிமண் கற்களால் ஆனது. அக்கற்களுக்கு, 'அடோபி' என்று பெயர். இக்கற்கள் நெருப்பால் பாதிக்கப்படாதவை. நில நடுக்கம் ஏற்பட்டால் வீடுகள் இடிந்து விழுந்து நொறுங்கும் தான்; பேரிழப்பு எதும் ஏற்படாது. ஆனால், பேய் மழை பெய்தால், களிமண் கல்லால் ஆன சுவர்கள் கரைந்து, சேற்றுக் கடலாகி ஓடிப்போகும்!
லிமா நகர மக்கள் அதிர்ஷ்டசாலிகள்; இங்கு மழையே பெய்வதில்லை!
ஸ்பானிஷ்காரர்களின் குடியேற்ற நாடான பெரு நாட்டில், வறண்ட கடற்கரைச் சமவெளியில் உள்ள நகரான லிமாவில், ஸ்பானியர் தங்கள் நாகரிகப்படி கட்டடங்களை உருவாக்கியுள்ளனர்.
லிமா பகுதியில் மழை என்பது எப்போதாவது பெய்யும் அதிசயம். மழையையும், பனிப் பொழிவையும் அடுத்த அதிசயம், குளிர்ச்சி மிக்க ஈரப்பதமான மூடுபனி வந்துவிடும். ஆண்டஸ் மலைப் பகுதியிலிருந்து வரும் மூடுபனி, நகரை மூடிக்கொள்ளும்.
பழமையான இந்நகரம், 1535ல் உருவானது. புகழ் பெற்ற ஸ்பானிஷ் சேனாதிபதியான, பிரான்சிங்கோ பிஸாரோ இந்நகரை ஸ்பெயின் நாட்டு சதுக்க முறையில் வடிவமைத்தார். தேவாலயத்துக்கான வரைப்படத்தை உருவாக்கி, அதற்கு அஸ்திவாரமும் இட்டார். இந்த தேவாலயத்திலேயே இவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவை வெற்றி கொண்ட ஸ்பானிஷ்காரர்களின் உல்லாச புரியாக, லிமா விளங்கியது. இங்கு, ஸ்பானியர்களின் அரசப் பிரதிநிதிகளின் அரண்மனைகள் உள்ளன. ஸ்பானிஷ் சாம்ராஜ்ய பிரதிநிதிகளான இவர்கள், இந்நாட்டுப் பழங்குடிகளை நசுக்கிப் பிழிந்து கொடுமைப்படுத்தி, மதிப்பற்ற ஏராளமான தாதுப்பொருள்களை கொள்ளையிட்டு தங்கள் நாட்டுக்கு எடுத்து சென்றனர்.
காலாவ் என்னும் துறைமுகம், ஏழு மைல்களுக்கு அப்பாலுள்ள லிமா நகருடன், ரயில் பாதையால் இணைக்கப்பட்டுள்ளது. காலாவ் துறைமுகத்திலிருந்து, சரக்குக் கப்பலின் மூலம் ஸ்பெயினுக்கு கொள்ளைப் பொருட்களை ஏற்றிச் செல்கின்றனர்.
கடந்த, 1746ல் ஏற்பட்ட நில அதிர்வால் கட்டடங்கள் அனைத்தும் தகர்ந்து தரைமட்டமாயிற்று. பெரிய தேவாலயமும், புராதன சர்வகலா சாலையும் மீண்டும் உருவாக்கப்பட்டு எழுந்தன. பின், புதிய வீடுகளை உருவாக்கினர். உள் முற்றங்களோடும், பூந்தோட்டங்களோடும் ஜன்னல்களும், பால்கனிகளோடு உருவாக்கினர். 8,000 மக்கள் அமரக்கூடிய மிகப் பெரிய கட்டடமும் எழுப்பப்பட்டது.
பழைய நகரின் சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு, நிழல் தரும் நெடுஞ்சாலைகள், உருவாக்கப் பட்டன. நகர மக்கள் மாலை வேளையில் இச்சாலைகளில் நடைபயணம் மேற்கொண்டு மகிழ்ந்தனர். கான்கிரீட்களும் இரும்பினாலான கட்டட அமைப்புகளும், மழை, பூமி அதிர்வு, தீ விபத்துகளிலிருந்து பாதுகாப்பளித்து, பழைய வீடுகளுக்கு விடையளித்தன. தொழிற்சாலைகள், உர உற்பத்தி மையங்கள், சர்க்கரை ஆலைகள், ஜவுளி ஆலைகள் தோன்றின.
உலகிலேயே மிக உயரமான ரயில்பாதை; பொறியாளர்களின் சாதனைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. ஹுவான்சாயோ மலையின் சரிவில், 15 ஆயிரத்து 806 அடிவாரத்திலுள்ள வெள்ளிச்சுரங்கத்தையும், லிமா நகரையும் இந்த ரயில்பாதை இணைக்கிறது.
'மன்னர்களின் நகரம்' என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட லிமா நகரம், இன்றும், ஸ்பானிய வீடுகளையும், தேவாலயங்களையும், வானுயர்ந்த கட்டடங்களையும், மிகப்பெரிய தொழிற்சாலைகள், சர்வதேச விமானநிலையம், துறைமுகம் மற்றும் மெட்ரோ ரயில் உள்ளிட்ட அருமையன போக்குவரத்து வசதிகளையும் கொண்ட நகரமாக காட்சியளிக்கிறது. நகர மக்களின் வாழ்க்கை அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X