இப்படியும் சில மனிதர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2016
00:00

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள கண்ணார் தெருவில் இருக்கிறதுகோகிலாவின் வீடு. இயேசு, வினாயகர்,லட்சுமி படங்கள் உயரத்தில் இருக்க,அந்த சுவற்றின் கீழ், வெறும் தரையில்இளைப்பாறிக் கொண்டிருந்தார் கோகிலா. நம் வருகையை உணர்ந்ததும், அவர் முகத்தில் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி. 'ம்மா... ம்மா...' என்று வாய் குறியபடி, வீட்டினுள் இருக்கும் தன் தாயை அழைத்தார். 'கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நீங்க வரப்போற விஷயத்தை சொல்லிட்டு இருந்தேன்; அதான் நீங்க வந்ததும் என்னை கூப்பிட்டு காட்டுறா' தாய் ராஜேஸ்வரி சொல்ல, கோகிலா முகத்தில் குழந்தை சிரிப்பு!

கோகிலாவுக்கு வயது, 19 என்றாலும், அவர் மனதளவில் இன்னும் குழந்தை தான்! நம் வார்த்தைகளை ஓரளவுக்கு அவரால் புரிந்து கொள்ள முடியுமே தவிர, அவரால் தெளிவாக பேச முடியாது; பசித்தாலோ, உடல் உபாதைகள் என்றாலோ, அதை அவருக்கு வெளிப்படுத்தத் தெரியாது. காரணம், பிறக்கும் போதே தடைபட்டுப் போன மனவளர்ச்சி! அன்றிலிருந்து இன்று வரை, அவரின் நிழலாக இருக்கிறார் தாய் ராஜேஸ்வரி.
இந்த மாதிரியான சூழல், பெரிய சுமை இல்லையா?
ச்சே... ச்சே... என் பொண்ணை என்னைக்கும் நான் சுமையா நினைச்சது கிடையாது. ஆனா, ஒரு
வருஷத்துக்கு முன்னாடி, எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. என் வயித்துல இருந்து, பத்து
கிலோ கட்டிகளை வெளியே எடுத்தாங்க. அதுக்கப்புறம்,
என் பொண்ணை தூக்கி உட்கார வைக்க கூட என்
உடம்புல தெம்பு இல்லாம போயிடுச்சு. அவளை நல்ல முறையில பார்த்துக்கவும் முடியாம, காப்பகங்கள்ல கொண்டு போய் விடவும் மனசில்லாம
தவிச்சிட்டு இருக்கேன். மனசு ரணமா கிடக்கு. என் நிலைமை எந்த தாய்க்கும் வரக்கூடாது!
இரண்டு ஆண்டுகளுக்கு முன், ராஜேஸ்வரியின்
கணவர் மாரடைப்பில் காலமாகி விட, உயர் கல்விக்காக காத்திருக்கும் மகன், மனவளர்ச்சி இல்லா மகள் என, தன் இரு பிள்ளைகளுடன் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டார் ராஜேஸ்வரி. உடல் சார்ந்த பிரச்னைகள், பொருளாதார சிக்கல் என, அடுத்தடுத்து சுமைகள் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை. தற்போது, பாலிடெக்னிக் படித்து முடித்திருக்கும் மகன் சிவக்குமாரின் மாத வருமானம், 8,500 ரூபாயில் தான் குடும்பம் இயங்குகிறது.
கோகிலா ரொம்ப சிரமப்படுறாங்களா?
அய்யோ... அவளுக்கு வந்திருக்கிற நிலைமை, எதிரிக்கு கூட வரக்கூடாது தம்பி. சிலநேரங்கள்ல, ராத்திரி முழுக்க தூங்காம சத்தமா கத்திக்கிட்டே இருப்பா; தலையை, தரையில பலமா மோதிக்குவா; குடிக்க ஏதாவது கொடுத்தா கீழே தட்டி விட்ருவா; அந்தமாதிரி நேரங்கள்ல, தூக்க மாத்திரை கொடுத்து தான் தூங்க வைப்பேன். இப்படியொரு வாழ்க்கையை அந்த கடவுள் என் பொண்ணுக்கு தந்துட்டானேன்னு மனசு ரொம்ப வலிக்கும். அதுவும்,
அவ பெரிய மனுஷி ஆனதுக்கப்புறம் ரொம்பவே சிரமப்படுறா! ஏதோ, பொண்ணா இருக்கப் போய்,
அவளோட தேவைகளை முன்கூட்டியே புரிஞ்சுக்குறேன்!
வயதிற்கேற்ற உடல் வளர்ச்சியை
கோகிலாவுக்கு தந்திருக்கும் இயற்கை, மனவளர்ச்சி தருவதில் மட்டும் வஞ்சம் செய்துவிட்டது. தன் உடலில் நிகழும் அடிப்படை மாற்றங்களை கூட அறிந்து கொள்ள முடியாமல், தனக்கு என்ன வேண்டும் என்பதை வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கும் கோகிலா, எந்நேரமும் படுத்தே தான் இருப்பாராம்! அதனால், அவரின் முதுகுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார் ராஜேஸ்வரி.
கோகிலாவின் எதிர்காலம்...?
என் உடம்பு இருக்கிற நிலைமையில, என்னால இவளை ரொம்ப நாளைக்கு பார்த்துக்க முடியாது. அவளை காலம் முழுக்க நல்ல முறையில கவனிச்சுக்க, காப்பகம் தான் சரியான இடம். இதை, என் மனசை கல்லாக்கிட்டு தான் சொல்றேன். அப்படி ஒரு காப்பகத்துல, என் மகளுக்கு பாதுகாப்பான இடத்தை இந்த அரசு ஏற்படுத்தி தரணும். இது சம்பந்தமா, நானும் என் மகனும் கலெக்டர் ஆபிஸ்லேயும், முதலமைச்சர் தனிப்பிரிவுலேயும் மனு கொடுத்தோம். ஆனா, இதுவரைக்கும் எந்த பதிலும் இல்லை!
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையாக அரசு தரும், 1,500 ரூபாய் மாதம் தவறாமல் வந்தாலும், அந்த தொகை மருந்துப் பொருட்கள் வாங்கவே போதவில்லை என்கிறார் ராஜேஸ்வரி.
சரி! ஆனாலும், காப்பகத்துல சேர்க்கிறதுன்னு நீங்க எடுத்திருக்கிற முடிவு...
தப்பு தான். என்ன பண்றது தம்பி? எனக்கப்புறமா, என் பொண்ணு வாழ்க்கையை நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு. அவளுக்கு இன்னும் வயசு இருக்கு; ஆனா, எனக்கு இல்லையே!
பொங்கி வரும் அழுகையை, முந்தானையால் முகம் மூடி அடக்கிக் கொள்கிறார் ராஜேஸ்வரி. தாயின் கண்ணீருக்கான காரணத்தை அறிந்தோ, அறியாமலோ அவரையே உற்றுப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறார் கோகிலா.

ஒரே ஒரு வார்த்தையில்...நாம்: இன்னும் யார் மீது நம்பிக்கை இருக்கிறது?
ம.ராஜேஸ்வரி: கடவுள்

90430 64748

Advertisement

 

‘இப்படியும் சில மனிதர்கள்’ பகுதிக்கு உங்களை வியக்க வைத்த மனிதர்களைப் பற்றி எங்களுக்கு சொல்ல...044–2854 0092, pudhupayanam@dinamalar.in
மேலும் புதுப்பயணம் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X