நீங்கள் சைவமா? அசைவமா?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2016
00:00

ஒரு குறிப்பிட்ட தினங்களில் மக்கள் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள். நீங்கள் அப்படிப்பட்டவராயின், இக்கட்டுரையை கண்டிப்பாக படியுங்கள். ஏனெனில், நாம் சைவம் என்று நினைத்து சாப்பிடும் சில உணவுகள், உண்மையில் அசைவ உணவுகளே. என்ன நம்ப முடியவில்லையா?
உண்மையிலேயே நாம் கடைகளில் சைவ உணவுகள் என்று நினைத்து சாப்பிடும் உணவுப் பொருட்களில், மிருகங்களின் கொழுப்புக்கள் அல்லது இறைச்சிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சைவ உணவுகள் என்று விற்கப்படும் அசைவ உணவுகள் சிலவற்றை பாருங்கள்.

சூப்: இந்தியர்களுக்கு சூப் என்றால் பிடிக்கும். அதிலும் உங்களுக்கு, வெஜிடேபிள் மேன்சவு சூப் பிடிக்குமானால் கவனமாக இருங்கள். ஏனெனில், அது அசைவ உணவு தான். ஓட்டல்களில் தயாரிக்கப்படும் சூப்புக்களில் சேர்க்கப்படும் சாஸ், மீனில் இருந்து தயாரிக்கப்படுபவை. எனவே அடுத்த முறை ஓட்டல்களில் சைவ உணவை, ஆர்டர் செய்யும் முன் யோசித்துக் கொள்ளுங்கள்.

நாண்: வட இந்தியாவில் நாண் மிகவும் பிரபலமான ஒன்று. தற்போது தென்னிந்தியாவிலும் பலரால் இது அதிகம் உண்ணப்படுகிறது. ஆனால், நீங்கள் சைவம் என்று நினைக்கும் இந்த நாண், உண்மையில் அசைவம் என்பது தெரியுமா? ஆம், நாண் மென்மையாக இருப்பதற்கு, அதை செய்வதற்கு தயாரிக்கப்படும் மாவில், முட்டை சேர்க்கப்படுகிறது.

சீஸ்: தற்போது பல உணவுகளில், சீஸ் சேர்க்கப்படுகிறது. ஆனால், சீஸ் உண்மையில் ஓர் அசைவப் பொருள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மையில் சீஸில் விலங்குகளின் குடலில் இருந்து பெறப்பட்ட நொதிகள் கலக்கப்பட்டுள்ளது.

எண்ணெய்: பலரும் எண்ணெய்களெல்லாம் சைவம் என்று நினைக்கிறார்கள். ஆனால் சில எண்ணெய்கள் மற்றும் ஜூஸ்களில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது என்று சொல்வார்கள். இதற்கு அந்த எண்ணெயில் மீனில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் சேர்க்கப்பட்டிருப்பது தான். அதேப் போல் சில ஜூஸ்களில் வைட்டமின் டி அதிகம் உள்ளது என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அந்த ஜூஸில் செம்மறி ஆடுகளில் இருந்து பெறப்பட்ட லினோலின் சேர்க்கப்பட்டிருக்கும்.

சர்க்கரை: சர்க்கரை எப்படி அசைவ உணவைச் சேரும் என்று யோசிக்கிறீர்களா? இது இயற்கையான கார்பன் பயன்படுத்தி சுத்திகரிக்கப்படும். சரி, இயற்கையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது? கருகிய எலும்புகளில் இருந்து தான் கார்பன் பெறப்படுகிறது. இந்த கருகிய எலும்புகள் விலங்குகளுடையது. அப்படியெனில் நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் சர்க்கரை சைவமா? அசைவமா? என்பதை நீங்களே கூறுங்கள்.

ஜெல்லி: ஜெல்லி செய்வதற்கு முக்கிய பொருள் ஜெலட்டின். இது விலங்குகளில் இருந்து பெறப்படுகிறது. எனவே, ஜெல்லி இனிப்பு பொருள் மட்டுமின்றி, அசைவப் பொருளும் கூட.

உருளைக்கிழங்கு சிப்ஸ்: உங்களால் நம்ப முடியாது தான். இருந்தாலும் உருளைக்கிழங்கு சிப்ஸ் அசைவ உணவுப் பொருள். மேலும் நிறைய சிப்ஸ்கள் குறிப்பாக, பார்பிக்யூ ப்ளேவரில் சிக்கன் கொழுப்பு சேர்க்கப்பட்டிருக்கும். எனவே, அடுத்த முறை பாக்கெட் சிப்ஸ் வாங்கி சாப்பிடும் முன், அந்த பாக்கெட்டின் பின் குறிப்பிட்டுள்ள பொருட்களை சரி பாருங்கள்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X