தன் புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை Htc Desire 828 (3 GB) என்ற பெயரில், எச்.டி.சி. நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் திரை 5.5 அங்குல அளவில் ஹை டெபனிஷன் டிஸ்பிளேயுடன், தொடு உணர்வு திரையாக உள்ளது. மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. இதன் பரிமாணம் 157.7 x 78.9 x 7.9 மிமீ. இசைப் பிரியர்களுக்காக, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் லவுட் ஸ்பீக்கர் தரப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு, 2 டெரா பைட் அளவு வரை உயர்த்திக் கொள்ளலாம்.
நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, 4ஜி, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத், யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. பின்புறக் கேமரா ஆட்டோ போகஸ் வசதியுடன் 13 எம்.பி. திறனுடன் இயங்குகிறது. வீடியோ 30fps திறனில் செயல்படுகிறது. முன்புறக் கேமரா 4 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது. இதன் சிப்செட் Mediatek MT6753. இதனுடன் Mali-T720MP3 ஜி.பி.யு. இணைந்து இயங்குகிறது. Accelerometer, proximity, compass ஆகிய சென்சார்கள் இயங்குகின்றன. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் லாலிபாப். இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத், யு.எஸ்.பி. 3ஜி மற்றும் 4ஜி தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் லித்தியம் பாலிமர் பேட்டரி 2800 mAh திறனுடன் உள்ளது.
இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 17,900.