அமேஸான் இணைய விற்பனை தளத்தில் மட்டும் கிடைக்கும் வகையில், லெனோவா நிறுவனம் தன் புதிய Phab 2 Plus ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 14,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் திரை ஆச்சரியப்படத்தக்க வகையில், 6.4 அங்குல அளவில், 1080p டிஸ்பிளே திறனுடன் உள்ளது. ஸ்மார்ட் போன் முழுவதும் உலோகத்திலான பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திரையின் பிக்ஸெல் அடர்த்தி 1920x1080. முழுமையான ஹை டெபனிஷன் திரையாக இது இயங்குகிறது. மல்ட்டி டச் வசதியும் உண்டு. திரைக்கு கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
Accelerometer, Proximity Sensor, Ambient Light Sensor, Compass, Gyro Sensor, Fingerprint Identity Sensor ஆகிய சென்சார்கள் தரப்பட்டுள்ளன. விரல் ரேகை உணர் வழி போனின் பின்புறமாகத் தரப்பட்டுள்ளது. நவீன வழியில், பின்புறமாக இரண்டு கேமராக்கள் தரப்பட்டுள்ளன. இரண்டாவது கேமரா படம் பிடிக்கும் ஆப்ஜெக்ட் குறித்து தகவல்களை அளிக்க, முதல் கேமரா அவற்றைப் பயன்படுத்தி படத்தைச் சிறப்பாக்குகிறது. இது 13 எம்.பி. திறன் கொண்டு, டூயல் டோன் ப்ளாஷ் உடன் இணைந்து செயல்படுகிறது. ஜியோ டேக்கிங், முகம் அறிதல் ஆகிய தொழில் நுட்பங்கள் செயல்படுகின்றன. டிஜிட்டல் ஸூம் வசதி உள்ளது. முன்புறக் கேமரா 8 எம்.பி. திறனுடன் இயங்குகிறது. இதன் ஸ்பீக்கர் Dolby Atmos வகையாகத் தரப்பட்டுள்ளது. JBL Hybrid Earphones இணைத்துத் தரப்படுகிறது.
இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 128 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம்.
இதன் பரிமாணம் 88.3x173.89x9.6 மிமீ. எடை 218 கிராம். இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். மைக்ரோ மற்றும் நானோ சிம்களைப் பயன்படுத்தலாம். எம்.பி.3 மற்றும் எம்.பி.4 பிளேயர்கள் உள்ளன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில் மற்றும் இன்ஸ்டன்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன.
இதில் 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஆக்டா கோர் MediaTek MT8783 Processor தரப்பட்டுள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, 3ஜி, 4ஜி, வை பி, புளுடூத், ஹாட்ஸ்பாட் இணைப்பு, யு.எஸ்.பி. சி டைப், ஆகிய தொழில் நுட்பங்கள் தரப்பட்டுள்ளன. கன் மெட்டல் கிரே மற்றும் தங்க நிறத்தில் என இரண்டு வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் லித்தியம் அயன் பேட்டரி 4050 mAh திறன் கொண்டது.