'ஆப் சீசனிலும்' காய்கறி, பழங்கள் அசத்துகிறார் திண்டுக்கல் 'லியோ'
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2016
00:00

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மெட்டூர் கேட் அருகே விவசாய தோட்டம் உள்ளது. இங்கு பயிர்களுக்கு இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
'ஆர்கானிக் பவர் பிளஸ்' என்ற நுண்ணுாட்ட ஊக்கியை கண்டுபிடித்து பயிர் சாகுபடியில் பயன்படுத்துகின்றனர். இது பயிர்களை தாக்கும் பூச்சிகளை விரட்டும் மருந்தாகவும், 'சீசன்' இல்லாத நேரத்திலும் மகசூல் பெறும் வகையில் பயிர்களுக்கான 'ஊக்கி'யாகவும் பயன்படுகிறது.
வேர் அழுகல், தண்டு அழுகல் நோய்களை கட்டுப்படுத்துகிறது. பயிர்களை பாதிக்கும் பூஞ்சான நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. நாவல் பழத்தைப் பொறுத்தவரை, பிப்ரவரியில் துவங்கி ஜூலையில் சீசன் முடிந்து விடும். மல்லிகைப்பூ பனிக் காலத்தில் பூக்காது. குறிப்பாக டிசம்பர், பிப்ரவரி மாதங்களில் மல்லிகைப்பூ விலை ஆயிரம் ரூபாயை தாண்டும். சீசன் அல்லாத நேரங்களிலும் இந்த நுண்ணூட்ட ஊக்கியை பயன்படுத்தி, மல்லிகையை விளைவிக்க முடியும் என நிரூபித்துள்ளனர்.

நுண்ணூட்ட ஊக்கி
இந்த ஊக்கி, சாணம், கோமியம், தயிர், நெய், பால் ஆகிய பஞ்ச கவ்யத்துடன் சப்போட்டா, நெல்லி, அன்னாசி, எலுமிச்சம், சாத்துக்குடி ஆரஞ்சு பழத்தின் தோல், மீன் கழிவுகள், நிலக்கரி படிமம் ஆகியவை கலந்து தயாரிக்கப்படுகிறது.
இறுதியில் அசோஸ்பைரில்லம், ரைஸ்சோபியம், சூடோமோனாஸ் ஆகியவையும் கலக்கப்படுகிறது. இது முழுக்க, முழுக்க இயற்கை நுண்ணூட்ட ஊக்கியாக உள்ளது.
மல்லிகைப்பூ, ரோஜா, நாவல், திராட்சை உட்பட பல பயிர்களுக்கும் 10 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி., கலந்து 20 நாட்களுக்கு ஒரு முறை என ஏக்கருக்கு ஒரு லிட்டர் தெளிக்க வேண்டும். இதன் மூலம் சீசன் இல்லாத நேரங்களிலும் பூக்கள், காய்கள் காய்க்கும்.

இதனை தயாரித்து பயன்படுத்தும் விவசாயி சி.லியோ கூறியதாவது: பொறியியல் படித்துள்ளேன். இயற்கை விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. இதனால் இந்த நுண்ணூட்ட ஊக்கியை கண்டுபிடிக்க முடிந்தது.
இது முழுவதும் இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இந்த ஊக்கி குறித்து விவசாயிகளுக்கு இலவச பயிற்சியும் அளிக்க உள்ளேன். ஒரு லிட்டர் ரூ.250க்கு விற்பனை செய்கிறேன். இதனை பயன்படுத்துவதால் பிஞ்சுகள் அதிகரிக்கும். பூக்கள் அடர்த்தியாக, காய்கள் பளபளப்பாக இருக்கும், என்றார். தொடர்புக்கு 98659 25193ல் தொடர்பு கொள்ளலாம்.
- எஸ்.அரியநாயகம், திண்டுக்கல்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
24-நவ-201605:03:56 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே நல்ல விஷயம் நன்றி
Rate this:
Share this comment
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
23-நவ-201618:04:08 IST Report Abuse
SENTHIL NATHAN மற்ற விவசாயிகள் வாங்கி உபயோகிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X