# கர்ப்பமாக இருந்தால், குழந்தை பிறக்கும் வரை பாலுறவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது
# அப்பெண்ணுக்கு உரிமையானவர் மட்டுமே, பாலுறவு கொள்ள வேண்டும்; மற்றவர்களை அனுமதிக்கக் கூடாது
# மாதவிடாய் காலத்தில், உறவு கொள்ள தடை விதிக்கப்படுகிறது
# பெண்ணுக்கு மகள் இருந்தால், யாராவது ஒருவருடன் தான் பாலுறவுக்கு அனுமதி
# இரு சகோதரிகளுக்கு உரிமையாளராக இருந்தாலும், யாராவது ஒருவருடன் தான் அனுமதி; மற்றவரை விற்று விட வேண்டும்# அந்த பெண்ணுக்கு உரிமையாளராக தந்தை இருந்தால், அவருடன் உறவு கொள்ள மகனுக்கு அனுமதி கிடையாது
# அதே வேளையில், அந்த பெண்ணை மகனுக்கு விற்று விடலாம். அந்த பெண் கர்ப்பம் தரித்து விட்டால், அந்த பெண்ணின் இறப்பு வரைக்கும் பாதுகாக்க வேண்டும்; அவரை விற்க அனுமதி கிடையாது
# ஒருமுறை ஒரு பெண்ணை விற்று விட்டால், அதற்கு பின், எந்த விதத்திலும் அந்த பெண்ணை விற்பனை செய்தவர் நெருங்கக் கூடாது
# இரண்டு மூன்று பேர் சேர்ந்து, ஒரு பெண்ணை வாங்க அனுமதியில்லை. பெண்ணின் உரிமையாளர்கள், அவரிடம் அன்புடனும், கருணையுடனும் நடந்து கொள்ள வேண்டும் இது எப்போதோ நடந்த சம்பவம் என நினைக்காதீர். சதாம் உசேன் அதிபராக இருந்த பகுதியில், பல பெண்களை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்வதுடன், அவர்களை சந்தையில், 'செக்ஸ்' அடிமையாக சிலர் விற்கின்றனர். அதற்கான கட்டுப்பாடுகள் தான் மேற்கண்டவை.
இந்த வினாடி வரை, இந்த கொடுமைகள் நடந்து வருவது கொடூரமானது.