வாரம் ஒரு ப(ா)டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2016
00:00

தன் வளர்ப்பு பிராணிகளுடன் தான், ஆச்சியின் எல்லா நாட்களும் துவங்கும்; முடியும். கீற்று வேயப்பட்ட வீட்டின் முன் வாசலில், கயிற்றுக் கட்டிலில் தான் ஆச்சி உறங்குவார்.ர் அவரின் கால்மாட்டில் பூனை, கட்டிலுக்கு நேர் கீழாக நாய், வாசலை ஒட்டியிருக்கும் மரத்தில் கோழிகள் என, ஆச்சியை சுற்றி தான் சகலமும் இளைப்பாறும். அதிகாலையில் சேவல் கூவியதும், முதல் வேலையாக வாசல் பெருக்கி, சாணம் தெளிப்பது தான், 62 ஆண்டு காலமாய் ஆச்சியின் வழக்கம். அவரின் காலடிச் சத்தம் கேட்டதுமே, கொட்டகையில் படுத்திருக்கும் மாடுகள் எழுந்து கொள்ளும். 'கொஞ்சம் பொறு; வாசல் தெளிச்சதும் பால் குடிக்க அவிழ்த்து விடுறேன்' ஆச்சியின் பேச்சை புரிந்து கொண்டது போல், தன் காது மடல்களை அசைக்கும் கன்றுகுட்டி!
ஆறு மகன்கள், மூன்று மகள்கள் என, ஆச்சிக்கு ஒன்பது பிள்ளைகள். அவர்களில் மூன்று பேர் உள்ளூரில் இருந்தாலும், எப்போதாவது தான் ஆச்சியை பார்க்க வருவார்கள். மற்றவர்கள், ஆண்டுக்கு இரண்டு முறை வந்தாலே ஆச்சரியம் தான்! பிள்ளைகள் மீதிருக்கும் வருத்தம், ஊர் நடப்பு என அனைத்தையும், பால் கறக்கையில், மாடுகளிடம் தான் பகிர்ந்து கொள்வார் ஆச்சி.
நெய் வாங்கி வரச் சொன்ன அம்மாவை திட்டியபடி, அன்று ஆச்சி வீட்டிற்கு சென்றேன். என்னை கண்டதும் அவர் வீட்டு நாய் குரைத்தது. 'இந்தா வெள்ளையா... சும்மா இரு' ஆச்சி அதட்டினார். அந்நேரம், மாட்டுக் கொட்டகையில் கட்டியிருந்த பசு மாடு, வலியால் கத்தியபடி அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அதன் முகமெங்கும் பிரசவ நேரத்திற்கான பதற்றம். நான் கேட்ட நெய்யை கிண்ணத்தில் கொண்டு வந்த ஆச்சியிடம், 'என்ன ஆச்சி, மாடு அரற்றிக்கிட்டு கிடக்கு' என்றேன்.'அவளுக்கு இது தலச்ச கன்னுய்யா; அதான், இப்படி அவதிப்படுறா' ஆச்சியின் குரல் தழுதழுத்தது. 'அழாதீங்க ஆச்சி' அவரை ஆறுதல்படுத்த முயன்றேன். 'ஒன்பது பிள்ளைகளை பெத்தவப்பா நான். எனக்கு தெரியாதா அதோட வலி. நான் பெத்ததுக எந்த திசையில இருக்குன்னு கூட எனக்குத் தெரியாது. இந்த ஆடு, மாடு, நாய், பூனை, கோழிங்க தான் எனக்கு உலகம். இப்போ, இதுகதான்ப்பா என் புள்ளைங்க; இதுக மட்டும் இல்லைன்னா, அரளி விதையை அரைச்சு குடிச்சுட்டு என்னைக்கோ போய்ச் சேர்ந்திருப்பேன்' ஆச்சியின் கடைசி வார்த்தைகள், என் மனதை உலுக்கின.ஆச்சி அந்த மாட்டை நெருங்க, நான் அங்கேயே அமர்ந்தேன். சிறிது நேரத்தில், அந்த பசு கன்று ஈன்றது. ஆச்சியிடம் தன் கன்றை நக்கியபடி காட்டி, பெருமைபட்டுக் கொண்டது. ஆச்சியின் கண்களில் வருத்தம் மறைந்து, சந்தோஷம் கண்ணீராய் பெருக்கெடுத்தது. 'பிராணிகளிடம் உயிர்ப்போடு இருக்கும் மனிதத்தை, மனிதன் எந்த இடத்தில் இழந்தான்' என்ற எண்ணம் எனக்குள் சுழலத் துவங்கியது. கையிலிருந்த நெய் மணத்தில், சில நிமிடங்களுக்கு முன் அம்மாவை கடிந்து கொண்டது நினைவிற்கு வந்தது.

ஒரு பேராசிரியருக்கும், ஒரு நாய்க்கும் இடையிலான உறவை வைத்து, அன்பின் உன்னதத்தை, நன்றியுணர்வின் எல்லையைச் சொல்லும் ஆங்கில படம்... ஹாச்சி எ டாக்'ஸ் டேல்

வழி தவறிய நாய் குட்டி ஒன்று, ரயில் நிலையத்தில் பேராசிரியர் வில்சனுக்கு கிடைக்கிறது. அதை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று, 'ஹாச்சி' என பெயரிட்டு வளர்க்கிறார் அவர். தினசரி ரயில் நிலையம் வரை வந்து, பணிக்கு செல்லும் வில்சனை வழியனுப்பி வைக்கும் ஹாச்சி, மாலையில் தவறாது ரயில் நிலையம் சென்று அவரை வரவேற்கும் பழக்கத்தை மேற்கொள்கிறது.
ஒருநாள் பணிக்கு சென்ற வில்சன் வீடு திரும்பவில்லை. காரணம், அவர் பணியின் போதே மரணித்துப் போகிறார். 'அவர் வருவார்' என, ரயில் நிலையத்திலேயே காத்திருக்கிறது ஹாச்சி. மாலை இரவாகிறது. இரவு பகலாகிறது. நாட்கள் மாதங்களாகின்றன. மாதங்கள் ஆண்டுகள் ஆகின்றன. ஹாச்சியின் காத்திருப்பு நீண்டு கொண்டே இருக்கிறது. பத்திரிகைகளில், ஹாச்சியின் செயல் புகழ்ந்து பேசப்படுகிறது. அதன் விசுவாச குணம், எல்லாராலும் பாராட்டப்படுகிறது. ஒன்பது ஆண்டுகள் கடந்த நிலையில், கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில், வில்சனுக்காக ரயில்நிலையத்தில் காத்திருக்கிறது ஹாச்சி. அந்த கொடும் சூழலில், அதன் உயிர் பிரிகிறது. அதன் ஆன்மா வில்சனை சந்திக்கும் அந்த நெகிழ்வான தருணத்தில், ஹாச்சிக்காக நம் கண்கள் கண்ணீர் சிந்தும்.

Advertisement

 

‘வாரம் ஒரு ப(பா)டம்)’ பகுதி உங்களுக்கான டைரி. எழுதுங்கள்...உங்களின் அனுபவங்கள் மற்றவர்களுக்கு பாடம் ஆகட்டும். எங்கள் முகவரி...புதுப்பயணம், தினமலர், 39, ஒயிட்ஸ் ரோடு, சென்னை 600 014. pudhupayanam@dinamalar.in
மேலும் புதுப்பயணம் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X