இப்படியும் சில மனிதர்கள் | புதுப்பயணம் | NewTrip | tamil weekly supplements
இப்படியும் சில மனிதர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 டிச
2016
00:00

ஏற்காடு' என்றதும் நமக்குள் எழும் பிம்பங்கள் என்னென்ன? நெடிதுயர்ந்த மரங்கள், குளிர் காற்று, அழகான ஏரி, மலர் கண்காட்சி உள்ளிட்டவை தானே! ஆனால், இவை தவிர்த்து, ஏற்காட்டின் அமைதியான பெருமையாய் நிற்கிறார் சசிகுமார். பெருநகரத்து மனிதர்களின் திறமைகளுக்கு அடுக்கடுக்காய் அங்கீகாரம் கிடைக்கும் நிலையில், மலைவாசியான சசிகுமார், தன் அடுத்தடுத்த உயர்வுக்கு வழி தெரியாமல் தேங்கி நிற்கிறார். தன் திறமைக்குரிய அங்கீகாரமும், அடுத்தகட்ட நகர்வும் கிடைக்காததால், அன்றாட பிழைப்புக்காக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
தனக்கு சோறு போடும் ஆட்டோவைத் தவிர்த்து, சசிகுமாருக்கு பிடித்தது பென்சில் மட்டுமே! ஆம், தன் பணிகளுக்கிடையில் சின்ன இடைவெளி கிடைத்தாலும், பென்சிலில் ஏதோவொன்றை செதுக்கத் துவங்கி விடுகின்றன அவரது விரல்கள். கடந்த பத்து மாதங்களில் மட்டும், 0.3 மி.மீ., முதல், ஒரு செ.மீ., அளவிலான, 50க்கும் மேற்பட்ட நுண்சிலைகளை, பென்சிலில் செதுக்கி முடித்திருக்கிறார் இந்த, 32 வயது, 'கார்விங்' கலைஞர்.
நீங்க கவனிக்கப்படாம இருக்கிறதுக்கு என்ன காரணம்?
நிச்சயமா அதிர்ஷ்டம் இல்லை. ஏன்னா, நான் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி உட்கார்ந்திருக்கிற ஆள் இல்லை! குடும்ப சூழ்நிலை காரணமா, என்னால இதை முழுவீச்சோட பண்ண முடியலை! ஆனாலும், ஏதாவதொரு அதிசயம் நடந்து, அடுத்த கட்டத்துக்கு போயிட மாட்டோமான்னு, உள்ளுக்குள்ளே நப்பாசை இருக்கு! சசிகுமாருக்கு உடன்பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர். அக்கா மற்றும் நான்கு தங்கைகள் திருமணமாகி வெளியூரில் இருக்க, ஒரு தங்கை, இரு தம்பிகள், பெற்றோர் மற்றும் தன் மனைவி, மகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். ஓவியரான இவரது சித்தப்பாவின் திறமைகளை, சிறுவயது முதல் பார்த்து வளர்ந்ததால், இவருக்குள்ளும் ஓவியர் கனவு துளிர் விட்டிருக்கிறது. ஆனால், 'இதெல்லாம் சோறு போடாது' என, அவரது பள்ளி ஆசிரியர் சொன்ன வினாடியிலேயே, அந்த கனவு கருகியும் போயிருக்கிறது.
இப்போ, என்னென்ன கனவுகள் இருக்கு?
இந்த துறையில பல சாதனைகள் பண்ணணும். 'தமிழ்நாடு' சாதனை புத்தகம், 'லிம்கா' சாதனை புத்தகம், 'கின்னஸ்' சாதனை புத்தகங்கள்ல இடம் பிடிக்கணும்னு நிறைய ஆசை! பொதுவா, இந்தமாதிரி, 'கார்விங்' பண்றவங்க, 'லென்ஸ்' போட்டுக்கிட்டு தான் செதுக்குவாங்க. ஆனா, நான்
லென்ஸ் பயன்படுத்த மாட்டேன். 20 ஆயிரம் பென்சில் வரைக்கும் சேர்த்து, அப்துல்கலாம் ஐயாவோட உருவத்தை செதுக்கணும்ங்கிறது என் வாழ்நாள் ஆசை! அதுக்காக இப்போ, 750 பென்சில் வரைக்கும் சேர்த்துட்டேன். பத்து மாதங்களுக்கு முன் தான், தன்னால் பென்சிலில், 'கார்விங்' செய்ய முடியும் என கண்டறிந்திருக்கிறார் சசிகுமார். தீவிர பயிற்சியின் ஆரம்பத்தில், நுாற்றுக்கணக்கான பென்சில்கள் வீணாக, மனம் தளராமல் முயன்றிருக்கிறார். இரண்டு வயதாகும் தன் மகளை, ஓவியத் துறையில் ஜொலிக்க வைக்க வேண்டும் என்பதே, ஒரு தந்தையாக இவரது விருப்பம்!
விலை கொடுக்காம கலை வளராதே...
உண்மை தான். நிறைய தியாகங்களை பண்ணிட்டு தான் இருக்கேன். சவாரி இல்லாத நேரங்கள்ல, ஆட்டோ ஸ்டாண்டுல இருந்து தான், பென்சில் சிற்பம் செதுக்குவேன். நண்பர்கள் யார் கூடவும் பேசிக்க மாட்டேன். தீவிரமா வேலை
பார்த்துட்டு இருக்கிற நேரத்துல சவாரி வந்துட்டா, நண்பர்களோட ஆட்டோவை கை காமிச்சிடுவேன். இது எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு, யார் தான்
சும்மா இருப்பாங்க. என் மனைவி கூட, ஆரம்பத்துல கோபப்பட்டாங்க. ஆனா இப்போ, என் ஆர்வத்தையும், நான் செஞ்ச பென்சில் சிற்பங்களையும் பார்த்து சந்தோஷப்படுறாங்க! தன் திறமைக்கான சரியான அங்கீகாரம் இல்லையென்ற போதிலும், முழு நம்பிக்கையோடு உழைத்து வரும் சசிகுமார், ஜெயிக்கும் வரை கனவை துரத்திப் பார்ப்பது எனும் முடிவில் உறுதியாக இருக்கிறார். இந்த முடிவு, அவர் மனைவி அவரிடத்தில் கொண்ட நம்பிக்கையில் பிறந்தது!
ஒருவேளை, உங்க திறமைக்கு வெளிச்சம் கிடைக்காமலே போயிட்டா...?
அய்யோ... ரொம்ப பயமா இருக்குதுங்க! செதுக்கி வைச்சிருக்கிற பென்சிலும், என் கனவும் கவனிக்கப்படாமலேயே சிதைஞ்சிடுமோன்னு கவலையா இருக்கு. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? ஆரம்பத்துல, சாதாரண ப்ளேடு வைச்சு தான், பென்சிலை செதுக்கிட்டு இருந்தேன். இப்போ தான், இதுக்கான ப்ளேடுளை வாங்கி பயன்படுத்த ஆரம்பிச்சிருக்கேன். ஆசைப்பட்டு நானா கத்துக்கிட்ட கலைங்க இது! இது என்னை கைவிடாதுன்னு முழுமையா நம்புறேன்.
'ஆட்டோ ஓட்டுனரின் மகள்' எனும் அடையாளத்தை விட, 'கார்விங் கலைஞனின் மகள்' எனும் அடையாளத்தை, தன் மகளுக்கு கொடுக்க விரும்புவதாகச் சொல்கிறார் சசிகுமார். அதற்காக, தற்சமயம் அவருக்கு தேவைப்படுவது, அவர் பயணிக்க
வேண்டிய வழியைச் சொல்லும் ஒரு திசைகாட்டி!

நாம்: கலைஞனுக்கு மிகப்பெரும் துயரம்? புறக்கணிப்பு
ப.சசிகுமார்:

Advertisement

 

‘இப்படியும் சில மனிதர்கள்’ பகுதிக்கு உங்களை வியக்க வைத்த மனிதர்களைப் பற்றி எங்களுக்கு சொல்ல...044–2854 0092, pudhupayanam@dinamalar.in
மேலும் புதுப்பயணம் செய்திகள்:We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X