ஏழைகளின் 20 ரூபாய் டாக்டர்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2016
00:00

சாதாரண தலைவலி என்றால் கூட, தலையை கழற்றிப் பார்க்கும் அளவிற்கு இன்றைய மருத்துவ உலகம் உள்ளது. உடம்புக்கு முடியவில்லை என்று டாக்டரிடம் சென்றாலோ, ரமணா பட பாணியில், சொத்தையே இழக்க வேண்டிய நிலையே உள்ளது.
இப்படி, சாதாரண காய்ச்சலுக்கே ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளுக்கு மத்தியில், வெறும், 20 ரூபாய் மட்டுமே பெற்று வைத்தியம் பார்த்தவர், டாக்டர் பாலசுப்ரமணியம்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே பிறந்து வளர்ந்த இவர், மருத்துவம் படித்து முடித்ததும், அரசு இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் எட்டு ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றினார். பின், சென்னிமலை, ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் தன் பணியை தொடர்ந்தவர், பத்து ஆண்டுகளுக்கு முன், கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், சிவில் சர்ஜெனாக சேர்ந்தார்.
அப்போது, சாமானிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில், கோவை, ஆவாரம் பாளையம் அருகே கிளினிக் துவங்கினார். பத்து மாடி மருத்துவ மனைகளுக்கு நடுவே, பத்துக்கு பத்து அடி இருக்கும் இவரது கிளினிக்கிற்கு, சைக்கிளில் மட்டுமல்ல, கார்களிலும் வந்து இறங்குவர், மக்கள். அந்தளவிற்கு, கைராசிக்காரராக மட்டுமல்ல, மக்களின் அபிமான டாக்டராகவும் திகழ்ந்தார்.
என்ன வியாதியாக இருந்தாலும், தகுந்த ஆலோசனை வழங்கி, குறைந்த விலையுள்ள மருந்துகளையே எப்போதும் எழுதிக் கொடுப்பார். தேவைப்பட்டால் மட்டுமே ஊசி போடுவார். இதற்காக, துவக்கத்தில் இவர் வாங்கிய கட்டணம், இரண்டு ரூபாய் மட்டுமே! பின், 20 ரூபாயாக உயர்ந்தாலும், இயலாதவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை இவரே வாங்கிக் கொடுப்பார்.
இவ்வாறு, தினமும், காலை, 8:30 மணி முதல் இரவு, 11:00 மணி வரை, 500 பேருக்கும் குறையாமல், இவரிடம் சிகிச்சை பெற வருவர். தன்னை நம்பி வரும் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவர் என்பதற்காகவே, ஒருநாள் கூட இவர் விடுப்பு எடுத்ததில்லை. அவசர காலத்தில், மொபைல் போன் மூலமே, சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்குவார்.
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இவரை அழைத்து ஆலோசனை பெறும் அளவிற்கு, ஓர் நடமாடும் மருத்துவராகவே செயல்பட்டார். குறைந்த கட்டணம் வசூலிப்பதற்காக, மருத்துவர்கள் மத்தியில், பல எதிர்ப்புகள் கிளம்பிய போதும், எதற்கும் மசியாமல் கடைசி வரை, 20 ரூபாய் மட்டுமே சிகிச்சை கட்டணமாக வாங்கினார். இதனாலேயே இவருக்கு, 'மக்கள் டாக்டர்' என்ற பெயரும் உண்டு.
சிங்காநல்லூர், ராஜகணபதி நகரில் மனைவி பவானியுடன் வசிந்து வந்த 67 வயதான பாலசுப்ரமணியம், நவ., 18ம் தேதி காலை, 6:50 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.
வழக்கம் போல், மருத்துவம் பார்க்க வந்த பலர், பாலசுப்ரமணியம் இறந்த செய்தியை கேட்டு, கதறி அழுதனர்.
மக்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து, நவ.,20ம் தேதி, கிளினிக் முன், இவரது உடலுக்கு, இறுதியஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, இவரால் பயனடைந்த ஆயிரக்கணக்கான மக்கள், திரளாக பங்கேற்று, தங்கள் இரங்கலை தெரிவித்தனர். மேலும், கிளினிக் முன், மெழுகுவத்தி ஏந்தி, கண்ணீர் அஞ்சலி செலுத்திய காட்சியை பார்க்கையில், இப்படி ஒரு டாக்டர், இனி பிறப்பாரா என்றே தோன்றியது.
இவரைப் போல் ஊருக்கு ஒரு டாக்டர் இருந்தால் போதும்; மக்கள் நோயின்றி வாழலாம்!

எஸ்.சரண்யா

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sujitha Eswaran - THENI,இந்தியா
09-டிச-201620:44:11 IST Report Abuse
Sujitha Eswaran avaradhu aathma santhi adaiya prarthikiren
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
05-டிச-201612:20:14 IST Report Abuse
pattikkaattaan மருத்துவர் பாலசுப்ரமணியம் அவர்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். இவரைப்போன்று இதே கோவையில் இன்னொரு மருத்துவரும் சேவை புரிந்து வருகிறார். கோவைப்புதூரில் பாவா பாக்ருத்தீன் என்ற பெயருடைய , சென்னை மருத்துவக்கல்லாரியில் டீனாக இருந்து ஒய்வு பெற்றவர். எப்போது போனாலும் கூட்டம் நிரம்பி வழியும், பெரும்பாலும் ஏழைகள். அருகிலுள்ள பகுதிகளிலிருந்து வந்து காத்து கிடப்பார்கள். பத்துக்கு பத்து அறைதான். கூட்டம் இருக்கிறதே என்பதற்காக எனோ தானோ என சோதித்து மருந்து எழுதி கொடுக்கமாட்டார். கனிவாக பொறுமையுடன் நோயாளிகளின் பிரச்சினைகளை கூர்ந்து கேட்டு, பரிசோதித்து பின்னர் தேவைப்பட்டால் ஊசி போடுவார்(அவர் சொந்த மருந்து மற்றும் டிஸ்போஸபிள் ஊசி) மற்றும் சில மாத்திரைகளையும் கொடுப்பார். ஏழை மக்கள் எவ்வளவு குறைவா காசு கொடுத்தாலும் பரவாயில்லை என்று வாங்கிக்கொள்வார். குழந்தைகளுக்கு மிக கவனமுடன், சரியான அளவுடன் மருந்துகளை பரிந்துரை செய்வார். இரவு 12 மணியானாலும் நோயாளிகளை கவனித்தபின்தான் உறங்க செல்லுவார். அவரிடம் ஒருமுறை சென்று வந்தாலே போதும், மருந்துகூட வேண்டாம், அவரின் கனிவான பேச்சே, நோயை குணப்படுத்திவிடும் என்று மக்கள் சொல்வார்கள். வெளியூரில் இருந்து போனில் அழைத்து அவசர மருந்து உதவி கேட்டால்கூட, தட்டிக்கழிக்காமல் பொறுமையாக விசாரித்து மருத்துவ உதவி செய்வார். ரம்ஜான் நோன்பு சமயத்தில், ஒய்வு இல்லாமல், சரியான நேரத்தில் நோன்பை முடித்து, உணவு உண்ணாமலேகூட இந்த வயதிலும் அவர் சேவை செய்வது, மிக நெஞ்சை நெருடும் விஷயம் ... இன்னும் அவரைப்பற்றி நிறைய சொல்லலாம்.. மனிதரில் மாணிக்கங்களாக ஒரு சிலரே இருக்கின்றனர் ....
Rate this:
Cancel
G natarajan - coimbatore,இந்தியா
04-டிச-201616:18:21 IST Report Abuse
G natarajan குடும்பத்தில் ஒருவர் போல் பேசுவார் மிகவும் தன்னம்பிக்கை கொடுப்பார் நோயாளிகளுக்கு ,மிகவும் அருமையான மருத்துவர் வாழ்க அவரது தொண்டுள்ளம் . கே .ஜி.நட்ராஜ் கோவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X