இந்த மண்ணில் இன்னும் எத்தனையோ....
எடுத்ததை தானே
கொடுக்கிறான் என்று
வியாக்கியானம் பேசி
விவரமாக பணம் வாங்குவோம்!
எவன் தான் நல்லவன் என்று
எகத்தாளம் செய்து
ஊழல் தலைவனுக்கே
ஓட்டு போடுவோம்!
தண்ணீர் வரலை
ரோடு சரியில்லை -
அதனால் என்ன...
விலையில்லா இலவசங்கள்
வீட்டில் இருக்கிறதே!
ஆண்டுதோறும் விலைவாசி உயரும்
கவலையில்லை வாக்காளர்களே...
தேர்தல்தோறும் கொள்ளையர்கள்
கூடுதலாக பணம் கொடுப்பர்!
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை
பெற்றுவிட்ட தமிழர்களே...
இன்னும் எத்தனையோ தேர்தல்
கவலையில்லை விலைபோக!
— சி.கலாதம்பி, சென்னை.