படத்திலுள்ளவர் பெயர், அம்பிகா பிள்ளை; புகழ்பெற்ற சிகை அலங்கார கலைஞர் மற்றும் 'மேக் -அப்' நிபுணரான இவர், ஆரம்பத்தில், 2,000 ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலை பார்த்தவர், இன்று, 200 பேருக்கு, சம்பளம் கொடுக்கும் அளவிற்கு, முன்னேறியுள்ளார்.
படிப்பு மேல் இருந்த வெறுப்பின் காரணமாக, படிப்புக்கு முழுக்கு போட்டு, 17வது வயதில், திருமணம் செய்தார். ஒரு மகள் பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக, கணவனை பிரிந்தார். இந்நிலையில், தன் மகளுடன், டில்லிக்கு சென்ற அம்பிகா, அங்கே சிகை அலங்காரம் கற்று, மற்றொரு பெண்ணுடன் இணைந்து, அழகு நிலையம் ஆரம்பித்தார். நல்ல வருமானம் கிடைத்து வந்த நிலையில், பார்ட்னர் பெண் ஏமாற்றியதால், பெரும் தொகையை இழந்தார். அதன்பின், தனியாக அழகு நிலையம் ஆரம்பித்தார். தற்போது, இந்தியா முழுவதும் இவரது அழகு நிலையத்தின் கிளைகள் உள்ளன.
'கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம்...' என்று கூறும் இவருக்கு, ஐஸ்வர்யாராய் போன்ற பல வி.ஐ.பி.,கள், வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
— ஜோல்னாபையன்