கந்தகம், நவச்சார படிகம், வெங்காரம், ஒவ்வொன்றிலும், ஐந்து கிராம் எடுத்து, 30 கிராம் வெண்ணெயில் சேர்த்து அரைத்து, காலையிலும், மாலையிலும் படர்தாமரை மீது நன்றாக தேய்த்து வந்தால், மூன்று நாட்களில் தாக்கம் முற்றிலும் குறையும். சீமை அகத்தி இலை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, அரைத்து தேங்காய் எண்ணெயில் குழப்பி, தினசரி இருமுறை அழுத்தி தேய்த்து வந்தால், மூன்றே நாட்களில் படர்தாமரை முற்றிலும் குறைந்து விடும். அதே போல், பப்பாளி இலைகளை கசக்கி சாறு எடுத்து, படர்தாமரை, வெண்புள்ளிகள் படர்ந்த இடங்களில் பூசி வந்தால் குணமாகும். வெள்ளைப் பூண்டை நவச்சாரத்துடன் சேர்த்து அரைத்து, வெண்குஷ்டத்தின் மீது தடவினால் வெண்மை மறையும்.