பெண்களுக்கு எப்போதும் உடன் இருக்கும் பொருட்களில் ஒன்று, கைப்பை. கைப்பைக்குள் அடங்கும் வகையில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு கருவி தான், குத்துவாள். பார்க்க, தலை சீவும் சீப்பு போலத் தான் இருக்கும்.
ஆனால், அதன் ஒவ்வொரு இழையிலும் கூர்மையான குத்துவாள் இருக்கும். பைபர் கிளாசில் செய்யப்பட்டது; எட்டு அங்குலம் கொண்டது. எதிராளி உங்களை நெருங்கும் போது, இதை வைத்து பிராண்டினால், விதி வீணை வாசிக்க ஆரம்பித்து விடும். இதை எப்போதும், உங்கள் கைப்பையில் வைத்திருக்கலாம். யாருக்கும், எந்த சந்தேகமும் ஏற்படாது.