கூகுள் தேக்ககத்தினைச் சீர் செய்திட
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 டிச
2016
00:00

கூகுள் தன் வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்கும் 15 ஜி.பி. டிஸ்க் இடம் இலவசமாகத் தருகிறது. கூகுள் ட்ரைவ், ஜிமெயில் மற்றும் கூகுள் போட்டோஸ் என இந்த தேக்கக இடம் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள், தங்களின் ஜிமெயில் அக்கவுண்ட்டில் தான் அதிக இடத்தைப் பிடித்திருப்பார்கள். இந்த இடம் 99.5% இடமாக வந்தவுடன், கூகுள் ஓர் எச்சரிக்கையினை வழங்கும். “ சிறிதளவே இடமே உள்ளது. கட்டணம் செலுத்தி கூடுதலாக இடம் வாங்கிக் கொள்ளலாமே” என்று கேட்கும். இந்த நிலையை முன்கூட்டியே தவிர்க்க நாம் மேற்கொள்ளக் கூடிய சில வழிகளை இங்கு காணலாம்.
கூகுள் எச்சரிக்கை செய்தியைக் காட்டுகையில், எந்த பிரிவில் நாம் அதிக இடம் எடுத்துக் கொண்டோம் என்பதை எப்படி அறிவது? அதனை அறிந்து கொண்டு, நாம் இந்த தேக்ககத்தில் எத்தகைய பைல்களை சேமித்து வைத்திருக்கிறோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், அதன் அடிப்படையில், பைல்களை நீக்கி, நமக்கான இடத்தை காப்பாற்றிக் கொள்ளலாம். நம் டேட்டா பைல்கள், மெயில்கள், அதனுடன் இணைக்கப்பட்ட டாகுமெண்ட்கள், போட்டோக்கள் என்ற வகையில் கூகுள் நமக்காக அளிக்கப்பட்ட தேக்ககத்தில் இடம் பிடிக்கப்படுகிறது. இவற்றை எப்படி நிர்வகிப்பது? எனப் பார்க்கலாம்.
முதலில் கூகுள் தேக்ககத்தில் எந்த பிரிவில் எவ்வளவு இடம் கொண்டுள்ளீர்கள் என்பதனைப் பார்ப்போம். இதற்கு உங்கள் கம்ப்யூட்டர் பிரவுசரைத் திறந்து, https://www.google.com/settings/storage எனச் செல்லவும். இதற்கு முதலில் உங்கள் கூகுள் அக்கவுண்ட்டினை யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து நுழைந்திருக்க வேண்டும். இங்கு Google Drive, Gmail, மற்றும் Google Photos என மூன்று பிரிவுகள் காட்டப்படும். அடுத்து, https://drive.google.com/#quota என முகவரியிட்டுச் செல்லவும். இங்கு உங்களுக்கான கூகுள் ட்ரைவ் காட்டப்படும். இதில் நீங்கள் தேக்கி வைத்துள்ள பைல்களில், அதிக கொள்ளளவு கொண்ட பெரிய பைல் முதலாவதாகவும், அதனைத் தொடர்ந்து அளவில் குறைந்த பைல்களும் காட்டப்படும். இவற்றில் நீங்கள் தேக்கி வைக்கத் தேவை இல்லை எனக் கருதும் பைல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை Trash பெட்டிக்கு அனுப்பவும். பின்னர், ட்ரேஷ் பெட்டியையும் காலி செய்திடவும். அதற்கு முன் ஓர் எச்சரிக்கை. ட்ரேஷ் பெட்டிக்குக் கொண்டு சென்று அழித்த பின்னர், அந்த பைல்கள் உங்களுக்கு எளிதில் கிடைக்காது. இது குறித்து G Suite அட்மினிஸ்ட்ரேட்டர் வரை சென்று, பல தகவல்களைத் தந்த பின்னரே கிடைக்கும். அது மிக அரிது.
அடுத்ததாக, ஜிமெயில் பிரிவில், மிகப் பெரிய அளவில் இணைத்து பரிமாறிக் கொள்ளப்பட்ட பைல்களைக் காணவும். இதற்கு உங்கள் அக்கவுண்ட்டில் https://gmail.googleblog.com/2012/11/search-for-emails-by-size-and-more-in.html என்ற முகவரியிட்டு செல்லவும் இங்கு பைல் அளவில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவினை அமைக்கலாம். காலத்தினையும் அமைக்கலாம். ஓராண்டு காலத்தில் 5 எம்.பி. அளவுக்கும் மேலான பைல்களைக் கண்டறிய size 5m older_than:1y எனத் தேடல் கட்டத்தில் தரவும். இதில் size 5m என்ற இடத்தில் larger:5m என்றும் தரலாம். இப்போது கிடைக்கும் அஞ்சல்களை அழித்துவிடலாம். பின் அஞ்சல் ட்ரேஷ் பெட்டி சென்றும் அழித்துவிடலாம்.
அடுத்ததாக, “கூகுள் போட்டோஸ்”. இங்கு தேக்கி வைக்கப்பட்டுள்ள போட்டோ மற்றும் விடியோ பைல்களில் பெரிய அளவில் உள்ளவற்றைக் கண்டு நீக்கிவிடலாம். மீண்டும், உங்கள் பிரவுசரில் https://photos.google.com/settings என்று செல்லவும். இங்கு "High Quality" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம், கூகுள் நீங்கள் வைத்துள்ள போட்டோவின் அளவினைக் குறைத்து தேக்கி வைத்திட அனுமதி அளிக்கிறீர்கள்.
நீங்கள் மொபைல் சாதனம் (Android / iOS), ஒன்றில் Google Photos அப்ளிகேஷனைப் பயன்படுத்தினால், அதனைத் திறந்து, இடது புறம் மேலாக உள்ள, மூன்று கோடுகள் கொண்ட ஐகான் மீது கிளிக் செய்திடவும். பின்னர், Settings தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர், Backup & sync என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு "Upload size" என்ற செட்டிங் இருப்பதைத் தேடி அறியவும். அதில் தட்டி, அங்கு "High Quality (free unlimited storage)." என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
அடுத்ததாக, நாம் மேற்கொள்ளக் கூடிய செயல், கூகுள் தேக்ககத்தில் இடத்தினை எடுத்துக் கொள்ளாது. கூகுள் ட்ரைவில் தேக்கி வைத்துள்ள பைல்களை அதன் பார்மட்டிலிருந்து, கூகுள் டாக்ஸ் (Google Docs) பார்மட்டிற்கு மாற்றிவிட்டால், அதன் மூலம் நிறைய இடம் மிச்சம் பிடிக்கலாம். எடுத்துக் காட்டாக, நான் ஒரு பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் பைல் ஒன்றை கூகுள் ட்ரைவில் அப்லோட் செய்தபோது, அது 43 எம்.பி. இடத்தை எடுத்துக் கொண்டது. ஆனால், அதனை Google Slides பார்மட்டிற்கு மாற்றி சேவ் செய்த போது, அது 0 எம்.பி. இடமே எடுத்துக் கொன்டது. ஏனென்றால், கூகுள் பார்மட்டில் பைல்கள் சேமிக்கப்படும்போது, அவை தேக்கக அளவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. அது டாகுமெண்ட், எக்ஸெல் ஒர்க் ஷீட், படம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இந்த பார்மட் மாற்றம் செய்வதும் எளிது. இதற்கு https://drive.google.com என்ற முகவரிக்குச் செல்லவும். திரையின் வலது புறம் உள்ள உங்கள் அக்கவுண்ட் இமேஜ் கீழாகச் செல்லவும். பின்னர் "Settings" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். "Convert uploaded files to Google Docs editor format" என்றிருக்கும் இடத்தின் எதிரே உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.
மேலே சொல்லப்பட்ட வழிகளில், நமக்கு கூகுள் இலவசமாக வழங்கும் தேக்கக இடத்தினைச் சரியாக நிர்வகிக்கலாம். மிக மிக முக்கியமான பைல்களை மட்டுமே இங்கு தேக்கி வைக்க வேண்டும்.
ஜிமெயில் அக்கவுண்ட்டில் தேவையற்ற இணைப்பு பைல்கள் கொண்ட மெயில்களை நீக்கலாம். இந்த செயல்பாடுகளை அவ்வப்போது மேற்கொண்டால், கூகுள் தரும் எச்சரிக்கை செய்தி நமக்கு வராது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X