இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2016
00:00

மறதியா... ஓவியம் வரையுங்கள்!
அரசு உதவி பெறும் பள்ளியில், ஓவிய ஆசிரியராக பணியாற்றுகிறேன். கடந்த சில ஆண்டுகளாகவே, நான் வரைந்து காட்டும் படங்களை, மாணவர்களை வரைய வைப்பதில், நிறைய நடைமுறை சிக்கல்களை எதிர் கொண்டேன்.
அதனால், கடந்த சில மாதங்களுக்கு முன், 'நீங்கள் தூங்கச் செல்லும் முன், ஏதாவது ஒரு ஓவியத்தை வரைந்து பழகிய பின், தூங்கச் செல்லுங்கள்; அது, உங்கள் ஞாபக சக்தியை மேம்படுத்துவதோடு, கல்வியிலும் ஜொலிக்கலாம்...' என்று, விஞ்ஞான ரீதியாக, நிரூபணமான உண்மையை, அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன்.
மிகுந்த ஆச்சர்யம் என்னவென்றால், படிப்பில் மிகவும் பின்தங்கிய மாணவ - மாணவியர் கூட, இன்று, ஆர்வத்துடன் படிப்பதுடன், நான் வரையும் படங்களை எளிதாக வரைந்து விடுகின்றனர்.
ஆசிரியர்களே... கலைகளின் வழியாக, கல்வியை எளிமையாக கற்றுக் கொடுங்கள்; நிச்சயம் உங்கள் மாணவர்கள் அனைவரும் கல்வியில் ஜொலிப்பர்!
நா.உண்ணிகிருஷ்ணன், கோவை.

இளைஞர்கள் தெருக்களில் சுற்றினால்...
எங்கள் பகுதியில், எப்போதும் நாலு பசங்க சுற்றிக் கொண்டிருப்பர். காலை, மாலை என்றில்லாமல், சில சமயம் இரவு நேரத்தில் கூட, ஏதாவது ஒரு தெருவில், இவர்களை மொத்தமாக பார்க்க முடியும்.
ஏதோ தலை போகிற பிரச்னையை, பேசி தீர்க்க முயல்கிறவர்கள் போல, விவாதித்தபடியே செல்வர்.
'என்றைக்காவது ஒருநாள், சந்தேக கேசில், மொத்தமாக உள்ளே போக போகின்றனர்...' என்று, எரிச்சல்படுவேன்.
இந்நிலையில், சமீபத்தில், என் நண்பர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கு, இந்த நால்வர் அணி இருப்பதை பார்த்து, 'இவனுங்கள ஏன் உள்ளே விட்டீங்க; வெட்டிப் பசங்க...' என்றேன்.
'இவங்க தான், இந்த பங்ஷனுக்கு புகைப்படம் மற்றும் வீடியோ கவரேஜ் எடுக்கறவங்க. முதல்ல இந்த வேலைய, வேறு ஒருத்தருக்கு தான் கொடுக்கறதா இருந்தேன். இவங்க வந்து, 'எங்களுக்கு நல்லா படம் எடுக்கத் தெரியும். வேலை இல்லாம இருக்கோம்; வாய்ப்பு கொடுங்க'ன்னு கேட்டு, அவங்க எடுத்த படங்களை காட்டினாங்க; படம் நல்லா இருந்துச்சு. கேமரா, ஸ்டாண்டு உட்பட, எல்லா பொருளுமே, வாடகைக்கு தான் கொண்டு வந்திருந்தாங்க. ஆர்வமா இருக்கிறதோட, உள்ளூர் பசங்களாவும் இருக்கிறதாலே இவங்களுக்கே, 'ஆர்டர்' கொடுத்தேன்...' என்றார்.
அவர்களை தவறாக நினைத்து விட்டோமே என்று வெட்கப்பட்டேன்.
நண்பர்களே... நாலு பேர் ஒன்றாக பேசித் திரிவதை கண்டால், உருப்படாததுகள் என்று முணுமுணுக்காதீர்கள்; அவர்கள், தங்கள் எதிர்காலம் பற்றி திட்டமிடுவோராகவும் இருக்கலாம்!
எஸ்.சந்திரன், சென்னை.

சொந்த தொழில் செய்பவருக்கு ஓய்வு பெற விழா!
சமீபத்தில், என் நண்பரின் மகன், எனக்கு, 'இன்விடேஷன்' தந்து, 'அங்கிள்... அப்பாவுக்கு, 'ரிடையர்மென்ட்' விழா ஏற்பாடு செய்திருக்கேன்; கண்டிப்பாக வரணும்...' என்றான்.
'உங்கப்பா மெக்கானிக் ஷாப் தானே வச்சிருக்கார்; இதுல எங்க, 'ரிடையர்மென்ட்' விழா...' என்று கேட்க, 'என்ன அங்கிள் இப்படி கேட்டுட்டீங்க... அரசு ஊழியர்களுக்கும், தனியார் துறையில வேலை செய்யறவங்களுக்கு மட்டும் தான், பணி நிறைவு ஓய்வு கொடுக்கணுமா... எங்க அப்பா போல, சின்ன வயசுல இருந்து கஷ்டப்பட்டு உழைச்சு, தன் சொந்த முயற்சியால முன்னுக்கு வந்தவங்களுக்கும் பாராட்டு விழா நடத்தி கவுரவிச்சா, அவங்க மனசு, எவ்வளவு சந்தோஷப்படும். அதனால தான், என் குடும்பத்துல உள்ள எல்லாருமா சேர்ந்து, இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கோம். அப்பாவோட பிறந்த நாளன்று பணி நிறைவு விழாவையும் கொண்டாடப் போறோம். விழாவுக்கு பின், தொழிலை நான் கவனிச்சுக்கப் போறேன்...' என்றான்.
இவரைப் போல், மற்ற பிள்ளைகளும், சொந்த தொழில் செய்யும் தன் தந்தைக்கு, இப்படி ஒரு மகிழ்ச்சியை அளிக்கலாமே!
பி.பிரேம்குமார், பெரம்பூர்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Annamalai Subramaniyan - Chidambaram,இந்தியா
14-டிச-201609:24:18 IST Report Abuse
Annamalai Subramaniyan முதலில் ஓவியம் வரைவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பது நல்ல யோசனை. நான் கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். இரண்டாவது ஊரில் சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞர்களை கேவலமாக பார்க்கும் செயல். இதை நானும் அன்பவித்து இருக்கிறேன். வயதில் பெரியோர்களே வெளியில் சென்று படித்த படிப்புக்கு வேலை தேடி பாருங்கள். இன்றைய சூழ்நிலையில் வேலை கிடைப்பதே பெரிய விஷயம். இன்றைய இளைஞர்களிடம் திறமை நிறைய இருக்கிறது. அதற்கான திறமைக்கான வாய்ப்புகள் தான் காலம் கடந்து கிடைக்கிறது. நான் இன்று பல முயற்சிகளுக்கு பிறகு என் சொந்த காலில் நிற்கிறேன் . நாளை அவர்களும் நிற்பார்கள். முடிந்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பில் உதவி செய்யுங்கள். குறை கூறாதீர்கள். மூன்றாவது ஒவ்வொரு மகனும்/மகளும் தன் தாய் தந்தையரை முடிந்த அளவு மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள் . நமக்காக அவர்கள் இழந்ததை எண்ணி அவர்களுக்கு உதவிடுங்கள். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தால் நாம் நன்றாக இருப்போம்.
Rate this:
Share this comment
Cancel
Madurai Ravi - Tamilnadu,இந்தியா
12-டிச-201608:05:30 IST Report Abuse
Madurai Ravi சொந்த தொழில் செய்பவர்க்கு ஓய்வு கொடுக்கும் அந்த பிள்ளையை நினைத்து பெருமையாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
wee -  ( Posted via: Dinamalar Android App )
11-டிச-201612:31:18 IST Report Abuse
wee Mr.Moses worked as a Headmaster in Rosary church school Town Hall Road Madras before 30 years.Vijayajanth,Pandian were student of the school. He always teaches with stories so student cannot forget.Helped lot of poor students.Those kind of teachers are rare now adays. He is no more.He even visit the jails and talked to the uni shed people during festival times to make them happy . But we could not forget him. Teaching for them is their life. Not for money.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X