அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2016
00:00

அன்புள்ள ஆன்ட்டிக்கு —
நான், எம்.ஏ., இரண்டாமாண்டு மாணவி. எனக்கு, ஒரு அக்கா மற்றும் தம்பி உள்ளனர்; அம்மா, தொலை தொடர்பு துறையிலும், அப்பா, ரயில்வே துறையிலும் பணியாற்றுகின்றனர்; வசதிக்கு பஞ்சமில்லை. அக்காவுக்கு திருமணமாகி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்; மாமா, சொந்தமாக, 'டிராவல்ஸ்' நடத்துகிறார்.
என் அப்பாவின் குணத்தையும், அம்மாவின் அழகையும் முழுமையாக கொண்டவன் தம்பி; சட்டக் கல்லூரியில் படிக்கிறான்.
என் மீது, உயிரையே வைத்திருக்கிறான். நானும், அவன் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளேன். ஆனால், என் தம்பியின் பாசம், என்னை சங்கடத்தில் ஆழ்த்தி விட்டது.
ஏனெனில், கல்லூரி முடிந்து, வீட்டிற்கு வந்தவுடன், என் கன்னத்தில் முத்தமிடுவது, இடுப்பில் கிள்ளுவது மற்றும் மடியில் படுத்துக் கொள்வது, வம்பு சண்டைகள் செய்வது, அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.
இவை எல்லாவற்றையும், சகஜமாக எடுத்துக் கொண்டாலும், நான் அணிந்திருக்கும் சுடிதாரின் துப்பட்டாவை எடுத்து, முகம் துடைப்பது, என் அறைக்கு வருவதோடு, என் பக்கத்தில் படுப்பது மற்றும் காலை என் மீது போட்டுக் கொள்வது போன்றவை, என்னை எரிச்சலூட்டியது.
இவை அனைத்திற்கும் காரணம், என் அக்கா தான். ஏனெனில், ஆரம்பத்தில் இந்த சேட்டைகளை அவன், அவளிடம் செய்த போது, கண்டிக்காமல் விட்டது அவள் தான்.
ஒருமுறை, என் மாமா, இதை தட்டி கேட்ட போது, 'என் தம்பி விஷயத்தில் தலையிட, உங்களுக்கு உரிமையில்ல...' என்று அக்கா கூற, இதனால், இருவருக்கும் பெரிய சண்டையே நடந்தது.
சமீபத்தில் தான், அப்பிரச்னை சமாதானமாக முடிந்தது. இப்படி, பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிற என் தம்பியை, பலமுறை திட்டியதுடன், அடித்தும் இருக்கிறேன். ஆனால், அவனோ, 'என் அக்கா அடித்தாலும், திட்டினாலும் எனக்கு வலிக்காது...' என்று கூறி விடுவான்.
எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து, என் அம்மாவிடம், என் தம்பியின் அத்துமீறல்களை கூறினேன். இதனால், கோபம் அடைந்த அம்மா, 'அவள், உனக்கு அக்கா என்று நினைத்தாயா இல்லை வேறு ஏதாவது நினைத்தாயா...' என்று கடும் வார்த்தைகளில் திட்டி விட்டார். விளைவு, இப்போது, எதையோ இழந்தது போல் காணப்படுகிறான். என்னை பார்த்தாலே அழுகிறான்.
அவனுடைய சில்மிஷங்கள் அனைத்தும், காணாமல் போய் விட்டன. இதை நினைத்து, என் மனம் சந்தோஷப்பட்டாலும் அவன் மனதை கஷ்டப்படுத்தி விட்டோமே என்று கவலையாகவும் இருக்கிறது.
நீங்கள் தான் என் தம்பிக்கும் சேர்த்து நல்ல பதில் அளிக்க வேண்டும். உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்.
இப்படிக்கு,
உங்கள் மருமகள்.


அன்பு மருமகளுக்கு —
அனிச்சையான இன கவர்ச்சியால் தான், உன் தம்பி, உன்னிடம் ஏடாகூடமாய் நடந்து கொள்கிறான். அதே காரணத்தால் தான், உன் அக்காவும், தம்பி செய்யும் சில்மிஷங்களுக்கு ஒத்துப் போகிறாள்.
உலக சமுதாயம், மனித உறவுகளுக்கு, பல லட்சுமண கோடுகளை போட்டுள்ளது. அம்மாவிடம், மகனும், தந்தையிடம், மகளும், சகோதரிகளிடம், சகோதரர்களும் எப்படி உறவு பாராட்ட வேண்டும் என்பதற்கு, பல வரைமுறைகளை வைத்துள்ளன. கிராமப்புறங்களில், சகோதரன், தன் சகோதரியை கேலி பேசுவது, கண்டிக்கப்படும் விஷயமாகும். நிறைய வீடுகளில், வயதுக்கு வந்த சகோதர - சகோதரிகள், ஒரே படுக்கையில் படுக்க, அனுமதி இல்லை.
ஆண் - பெண் உடலில், ஹார்மோன்கள் கலகம் செய்யும் போது, இருபாலருமே, உறவு முறை, ஏழை - பணக்காரன், ஜாதி, மத, வயது வித்தியாசம், கால நேரம் பார்ப்பதில்லை. உன் தம்பியை, உன் அக்காள் கணவரும், தாயும் கண்டித்தது தவறில்லை.
தக்க நேரத்தில், நீ செய்த அதிர்ச்சி வைத்தியம், பாராட்டத்தக்கது. பல அக்காக்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறாய். உன் தம்பிக்கு, 18 வயது அல்லது 19 வயது இருக்கக் கூடும். உன் அதிரடி, அவனுக்கு உடனடி திடுக்கிடலாய் இருக்கும்; ஆனால், சில ஆண்டுகளில், உன் தரப்பு நியாயத்தை புரிந்து, தன் வாலிப குறும்புகளின் எல்லை மீறலை உணர்ந்து கொள்வான். அப்போது, உன்னிடம் மட்டுமல்ல, உன் அக்காவிடமும் மன்னிப்பு கேட்பான்.
குறும்பு செய்யும் மகனை அடித்த பின், ஒரு தாய் வருத்தப்படுவாளே, அப்படி இருக்கிறது உன் மன வருத்தம்.
வாய்ப்பு கிடைக்கும் போது, உன் தம்பியை அழைத்து, 'இன்னென்ன காரணங்களுக்காக தான், உன்னை கண்டிக்க நேர்ந்தது. நீ, என் உயிருக்கு உயிரான தம்பி; இச்சம்பவத்தால், நம் அக்கா - தம்பி உறவில், விரிசல் விழாமல் பார்த்துக் கொள்வோம். நடந்ததை நானும் மறந்து விடுகிறேன்; நீயும் மறந்து விடு. குற்ற உணர்ச்சி கொள்ளாதே. படித்து, வேலைக்கு போய் திருமணம் செய்து கொள்ளும் வரை, அற்ப சொற்ப விஷயங்களில் தடுமாறாதே...' என அறிவுரை கூறு.
குரூப் ஒன் தேர்வு எழுதி, நல்ல வேலைக்கு போ. உனக்கு, சிறப்பான திருமண வாழ்வு அமைய, 'அட்வான்ஸ்' வாழ்த்துகள்!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்!

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ameen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
14-டிச-201609:48:58 IST Report Abuse
Ameen முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பத்து வயது வந்தவுடன் பிள்ளைகளின் படுக்கைகளை பிரிக்கச் சொல்லியிருக்கின்றார்கள். இத்தகைய பிரச்சினைகள் வரக்கூடும் என்பதால் அதை தடுப்பதற்கு இதைவிட வேறு சிறந்த வழி முறை இருக்கமுடியாது. ஏனெனில் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அதை ஆரம்பத்திலேயே தடுப்பதாகும்.
Rate this:
Share this comment
Cancel
A.Mansoor Ali - Riyadh.Athika.,சவுதி அரேபியா
11-டிச-201615:33:25 IST Report Abuse
A.Mansoor Ali பருவ வயதில் உள்ள உன் தம்பிக்கு விவரம் தெரியவில்லை.சிறு பிள்ளை தனமாக நடந்து கொள்கிறான்.பக்குவமாய் எடுத்து சொல்லி புரிய வைக்கணும்...அவனை திட்டினாள் மண உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்..அக்கா என்ற உரிமையோடு விளையாடுகிறான்...உனக்கு திருமணம் ஆகி விட்டால் அவனது இந்த விளையாட்டு தன்னால் போய் விடும்..உன் தம்பிக்கு புரியும்படி எடுத்து சொல்...உன் அம்மாவையே சொல்ல சொல்ல வயது வந்த பெண்ணிடம் இப்படியா விளையாடுவது.இது தவறு என்பதை புரிய வை எல்லாம் சரியாகும்..இல்லாவிட்டால் எனது வாட்ஸ் நம்பருக்கு00 00966 -509150390 உனது தம்பியை வர சொல் புரியும் படி எடுத்து சொல்கிறேன்.எல்லாம் சரியாகும்.வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
குரங்கு குப்பன் - chennai,இந்தியா
13-டிச-201606:50:58 IST Report Abuse
குரங்கு குப்பன் உங்க வாட்ஸ் ஆப் நம்பர் மட்டும் தான் குடுப்பிங்களா ?...
Rate this:
Share this comment
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
14-டிச-201612:07:47 IST Report Abuse
Ajaykumarமூளைச்சலவை செய்து விடாதீர்கள்....
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
11-டிச-201610:38:28 IST Report Abuse
A.George Alphonse This woman have confused herself and got tention about the behaviour of her younger brother's more love and affection towards her.This is clearly shows the true love and affection of her brother. Since the boy is born as the last child of the family might have given more love,kind and affection by all family members the boy have behaved with his elder sisters with a good and pure heart without any bad intention. The hard talk and warning of his mother and this woman might have hurt his innocent and tender heart very deeply and he was changed in this manner. Now as given in this advise the woman should call that boy and talk with him affectionately and in loving way that he should not behave in such more love and affectionate way with his sisters as it may lead a misunderstanding among themselves and also in the society. Since the boy is studying law he can very well understand her sister's advise and behave with her in a good manner in future. May God bless both the sister and the boy to understand each other and remains as a true love and affectionate brother and sister throughout their lives and live long for many many years.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X