ஆணாதிக்க சமூகம், தனக்கு ஒத்துவராத பெண்களை, எந்தெந்த வகைகளில் பழிவாங்கும் என்பதை யும், அரசு, அரசியல், அதிகாரம் இந்த மூன்றும், எந்தெந்த வகைகளில் சூழ்ச்சி வலைகளை பின்னும் என்பதையும், விலாவாரியாக பதிவு செய்திருந்தது, ஹிந்தியில் வெளிவந்த, பிங்க் திரைப்படம். அமிதாப் பச்சன், டாப்சி பன்னு ஆகியோர் நடித்த இப்படம், பெண்களால் மட்டுமின்றி, விமர்சகர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டது. காலத்துக்கேற்ற பிரச்னைகளை கையாளும் திரைப்படம் என, புகழ்ந்து தள்ளப்பட்டது. கூடிய விரைவில், இப்படம், ஐ.நா., சபையில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் பேசப்பட்டுள்ள பிரச்னைகள், பெரிய அளவில் கவனம் பெறும் என்ற ஆவலில் உள்ளனர் பெண்கள்.