இப்படியும் சில மனிதர்கள் | புதுப்பயணம் | NewTrip | tamil weekly supplements
இப்படியும் சில மனிதர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 டிச
2016
00:00

காலை, 6:00 மணி அளவிலேயே, அந்த தெருமுனை பரபரப்பாக இருந்தது. யாரையோ எதிர்பார்த்து அங்கே சிறு கூட்டம் காத்திருக்க, துாரத்தில், பெரிய துாக்கு வாளியுடன் சைக்கிளில் வருகிறார் அந்த நபர். 'ஏன் சார் உங்களுக்கு இந்த வேண்டாத வேலை; தெருவை ஏன் அசிங்கப்படுத்துறீங்க?' கடந்து சென்றவர், சைக்கிள்காரரைப் பார்த்து எரிச்சலடைய, 'கவலைப்படாதீங்க சார்; குப்பையை நானே எடுத்துடுறேன்' பதில் சொல்லிவிட்டு, தான் கொண்டு வந்திருந்த உணவை எடுத்து, காத்திருந்த கூட்டத்திற்கு பரிமாறுகிறார். வாலாட்டியபடியே பசியாறத் துவங்குகிறது கூட்டம்.

கடும் பசியோடு தலை நிமிராமல் சாப்பிடும் அந்த நன்றியுள்ள ஜீவன்களை, கண் இமைக்காமல் பார்த்து ரசிக்கும் அருணாச்சலத்திற்கு வயது, 70. இவர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர். சென்னை, பெரியார் நகரைச் சேர்ந்தவர்.மனிதர்களிடம் மனிதத் தன்மை குறைஞ்சுட்டே வருதே...அதை குறைய விடாம பார்த்துக்கத் தான், 'ஜீவகாருண்யம்'னு ஒரு நல்ல வழியை வள்ளலார் காட்டியிருக்கார்; யாரு தங்களைச் சுற்றி உள்ள ஜீவன்களுக்கும் தீங்கு செய்யாம, அவைகளையும் அரவணைச்சுட்டுப் போறாங்களோ, அவங்க தான் மனுஷங்க! ஆனா, இப்போ இருக்கிற வாழ்க்கை சூழல்ல, யாரும் அப்படி நடந்துக்கிறது இல்லை. அதுக்காக, யாரையும் நாம குறை சொல்ல முடியாது!
நாய்கள் பசியாறியபடி கலைய, அவைகளை பார்த்தபடியே பதில் சொல்கிறார் அருணாச்சலம். பரபரப்பான அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர், காலை நடைபயிற்சியின் போது, தன் காலைச் சுற்றிய தெரு நாய்களுக்கு பிஸ்கட் போட்டிருக்கிறார். அந்த நிகழ்வே, இவரது இச்சேவையின் துவக்கம். 'பிஸ்கட், நாய்களுக்கு தாகத்தை அதிகமாக்கும்; அதுக்கு பதிலா, உங்க வீட்டுல மீதமாகுற சாப்பாட்டை வைக்கலாமே' என, இவரின் கால்நடை மருத்துவ நண்பர் ஆலோசனை சொல்ல, தற்போது, நாள் ஒன்றுக்கு, 120 நாய்களுக்கு சாப்பாடு பரிமாறி வருகிறார்.
சிரமப்படுற மனிதர்கள் நிறைய பேர் இருக்குறப்போ...நாய்களுக்கு ஏன் இந்த சேவைன்னு கேட்குறீங்களா?
இங்கே, மனுஷங்களுக்கு உதவ நிறைய பேர் இருக்காங்க. ஆனா, இவங்களுக்கு உதவ யாருக்கும் மனசில்லை! நான் அதை செய்றேன். இவங்களுக்கு
கருத்தடை ஆப்பரேஷன் பண்ணணும்னு சொல்லி, மாநகராட்சியில பிடிச்சுட்டுப் போறாங்க. ஆனா, ஆப்பரேஷன் முடிஞ்ச அன்னைக்கே, இதுகளை திறந்து விட்டுடறாங்க. இதனால, தையல் பிரிஞ்சு நிறைய உயிர்கள் போகுது. இந்த நிலைமை, ஒரு மனுஷனுக்கு வர்றது அரிது! அதனால தான், நான் இவங்களை கவனிச்சுக்கிறேன்.வார்த்தைகளில் கூட, 'நாய்கள்' என சொல்லி விடாமல், அவைகளை சக மனிதனாக மதித்துப் பேசுகிறார் அருணாச்சலம். இச்சேவையில், தன் மனைவியையும் ஈடுபடுத்தி வரும் இவர், தினமும் அதிகாலை, 5:00 மணிக்கே எழுந்து விடுகிறார். கோழிக்கறியில் மனிதர்கள் தவிர்க்கும் கால், கழுத்து, ஈரல் போன்ற பாகங்களை வாங்கி, 'சூப்' தயார் செய்து, அதனுடன் சாதம், பால், நெய் கலந்து, அந்த ஜீவன்களுக்கு ராஜவிருந்து வைக்கிறார். தன் ஓய்வூதியத்தின் பெரும் பகுதியை, இதற்காகவே செலவிடுகிறார்.மிருகங்களால மனித உணர்வுகளை புரிஞ்சுக்க
முடியுமா?கண்டிப்பா! மிருகங்கள் மனுஷனை நல்லா புரிஞ்சுக்கும். அதுவும், இவங்க ரொம்ப நல்லா புரிஞ்சுக்குவாங்க. இதுல யாராவது ஒருத்தருக்கு, நீங்க சாப்பாடு வாங்கிப் போட்டு பாருங்களேன்; நீங்க எத்தனை வருஷம் கழிச்சு இந்தப் பக்கம் வந்தாலும், உங்களை அடையாளம் கண்டுபிடிச்சு,உங்க பக்கத்துல வந்து அன்பை வெளிப்படுத்துவாங்க.அது வெறும் நன்றி மட்டும் இல்லை; உங்க மேல உள்ள புரிதல்! இவங்களுக்கு சூதுவாது தெரியாது. இவங்ககிட்டே வஞ்சம் கிடையாது. மனசுல கள்ளம் இல்லைன்னாலே, அடுத்த மனசை சுலபமா புரிஞ்சுக்கலாம். வாயில்லா ஜீவன்களுக்கும், இந்த உண்மை பொருந்தும்!
முதுகலை தத்துவம் முடித்திருக்கும் இவர், கடந்த, 12 ஆண்டுகளாக இச்சேவையை செய்து வருகிறார். 'இதற்கு முக்கிய காரணம் என் மனைவி; அவ இல்லேன்னா, இந்த சேவை சாத்தியமே இல்லை' என, தன் மனைவி செல்வபாய்க்கும் நன்றி சொல்கிறார்.பணி நிமித்தமாய் வெளிநாட்டில் வாழும் மகனும், மகளும் தந்தையின் இச்செயலுக்கு அதிக ஒத்துழைப்பு தருவதால், யாரிடமும் எந்தவித பொருளாதார உதவியையும் எதிர்பார்க்காமல், இச்சேவையைதொடர்கிறார். சாப்பாடு போடுவதோடு மட்டுமல்லாமல்,நாய்களின் அவசர மருத்துவ உதவிகளுக்கென, எப்போதும் தன்னுடன் ஒரு முதலுதவி பெட்டியையும் வைத்திருக்கிறார்.'பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ முடியலையே'ங்கிற வருத்தம் இருக்கா?
ஆரம்பத்துல இருந்தது. அந்த தனிமை கூட, என்னைஇந்த சேவைக்கு துாண்டியிருக்கலாம். ஆனா, இப்போஅந்த எண்ணம் இல்லை. என் அம்மா, அப்பாவை விட்டுட்டு நான் நகரத்துக்கு வந்த மாதிரி, அவங்க வாழ்க்கையை வாழ அவங்க போயிருக்காங்க. எனக்குதான் இவங்க இருக்காங்களே. என் வீட்டுல, இவங்களைமாதிரியே இன்னும் ஆறு பேர் இருக்காங்க. நான் திருப்தியா இருக்குறேன்!

Advertisement

 

‘இப்படியும் சில மனிதர்கள்’ பகுதிக்கு உங்களை வியக்க வைத்த மனிதர்களைப் பற்றி எங்களுக்கு சொல்ல...044–2854 0092, pudhupayanam@dinamalar.in
மேலும் புதுப்பயணம் செய்திகள்:



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X