ஒரு கிராமத்து கதை | புதுப்பயணம் | NewTrip | tamil weekly supplements
ஒரு கிராமத்து கதை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 டிச
2016
00:00

இந்த வார கிராமம்,திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் இருக்கும்ஓலையூர்
திருச்சியிலிருந்து, 5 கி.மீ., தொலைவில் இருக்கிறது,கே.கே. நகர்; அங்கிருந்து, 5 கி.மீ., தொலைவில் இருக்கிறது இக்கிராமம்.
ரும் மழைக்காக மேகங்கள் தயாராகிக் கொண்டிருக்க, 'எரு'க்குழியை கிளறி இரைப்பையை நிரப்பிக் கொண்டிருந்தன கோழிகள். உல்லாச குளியலுக்காக ஒய்யார நடை போட்டு, தண்ணீர் குட்டைக்குள் இறங்கிக் கொண்டிருந்தன, இடை பெருத்த வாத்துகள். மழைநீருக்கு அணை கட்ட, தெருவோரத்து மணலை சிறுவர்கள் தோண்டியதால், புற்கள் கிளப்பிய பச்சை வாசத்தில் ஈர்க்கப்பட்டு, அடித் தொண்டையிலிருந்து கத்தி, தன் பசியை சொல்லிக் கொண்டிருந்தது இளங்கன்று. 'கலப்பையை கொஞ்சம் அழுத்தி போடுப்பா; அப்போ தான், மண்ணு பிரண்டு வெளியே வரும்' வயல்வெளியில்
உழுது கொண்டிருந்த டிராக்டரின் இரைச்சலை மீறி, ஏரோட்டிக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார் உள்ளூர் விவசாயி. பூமியை மழை நனைக்கும் என்ற நம்பிக்கையோடு, மழையை வரவேற்க மகிழ்ச்சியாய் தயாராகிக் கொண்டிருந்தனர், ஓலையூர் கிராமத்தினர்.

சீரும் சிறப்பும்: 'குழந்தைகள் விதைக்கும் மாற்றம் பசுமையாய் இருக்கும்' என, உரக்கச் சொல்லி சிரிக்கின்றன, ஓலையூர் கிராம சாலையின் இருமருங்கிலும் இருக்கும் மரக்கன்றுகள். பள்ளி தந்த மரக்கன்றுகளை, குழந்தைகள் வீட்டில் வளர்க்க, அவர்களை பின்பற்றும்
கிராம மக்கள், சாலையெங்கும் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கின்றனர். 'மேட்டு வாய்க்கால்' பாசனத்தால் விவசாயம் செழித்திருக்கும் கிராமத்தில், வீடுதோறும் கால்நடைகளும், வைக்கோல் படப்பும் இருக்கின்றன. ஊரில் பனை மரங்கள் அதிகம் இருந்த காலத்தில், அது
சார்ந்த தொழில் செய்த பெண்கள், இன்று, விவசாயப் பணியின் இடைவெளியில், கைத்தொழில் செய்து வருமானம் ஈட்டுகின்றனர். ஊரைச் சுற்றி, பல ஆங்கில வழிப் பள்ளிகள் வந்த பின்பும், தங்கள் கிராமத்திலிருக்கும் அரசுப் பள்ளியை கை விடாதது இம்மக்களின் சிறப்பு!

இது விதியா?
ஊருக்குள்ளே இருக்குற நடுநிலைப் பள்ளிக்கூடம், மூணு கட்டடமா பிரிஞ்சு கிடக்கு. இதனால, பிள்ளைங்க ரொம்ப சிரமப்படுதுங்கய்யா!

ஓலையூரில்:
பேருந்து வசதி குடிநீர் வசதி இல்லை

ஓலையூரில்:
பிளாஸ்டிக் பை ஓலையூரில்: பிளாஸ்டிக் பை

இருக்கு

ஊர் மந்தையில்... நாம் : இனி திராவிட அரசியலோட எதிர்காலம்?
சீமியோன் (42) : மழையில்லை; பண புழக்கமில்லை; முதல்ல நமக்கு எதிர்காலம் இருக்கா?

Advertisement

 

மேலும் புதுப்பயணம் செய்திகள்:



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X