Advertisement
வேண்டாமே போதை நமக்கு...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2016
00:00

போதை சாக்லேட், எதிர்கால மாணவர்களின் இக்கால ஈர்ப்பு இது தான். எதற்காக பள்ளிக்கூடம் வருகிறோம் என்ற சின்ன கவனம் கூட இல்லாமல், பொழுது போக்குக்காகவும், போதைக்காகவுமாக மாறி இருக்கிறது பள்ளி வாழ்க்கை என்பதை நினைக்கும் போது, வேதனையாக இருக்கிறது. மாணவர்கள் தான் இப்படி எனில், மாணவியரும், மதுவுக்கு மெல்ல அடிமையாகின்றனர் என்பது, கூடுதல் வேதனை. ஏதோ ஒரு சிலர் அப்படி செய்கின்றனர் என்றாலும், புற்று போல பெருகி விடுமோ என்று அஞ்ச வேண்டியுள்ளதால், மாணவர்களின் மனநிலை பொதுவாக எப்படி உள்ளது என்பதை அறிய எடுக்கப்பட்ட பேட்டி இது. கொஞ்சம் மன ஆறுதல் தருகிறது இது... உங்களுக்காக:

போதை சாக்லேட் என தெரிந்தும், மாணவர்கள் அதைச் சாப்பிடுவது தவறு. போதை பொருட்களால், நரம்புத் தளர்ச்சி போன்ற உபாதைகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க, தமிழக அரசு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து, நடைமுறைப்படுத்த வேண்டும். போதை பொருட்களை சாப்பிடக் கூடாது என, ஆசிரியர்கள் கூறினால், மாணவர்கள் ஏற்கமாட்டர். அவர்களிடம் தேவைக்கு அதிகமாக பணம் கொடுப்பதை, பெற்றோர் நிறுத்த வேண்டும். அப்போது தான், இது போன்ற போதை பழக்கத்திற்கு, மாணவர்கள் அடிமையாக மாட்டர்.

மாலா சுந்தரமூர்த்தி, எம்.பில்., வரலாறு. கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி, விருத்தாசலம்.

பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகளில், போதை சாக்லேட் விற்பனை செய்வது கண்டிக்கத்தக்கது. போதை சாக்லேட்டுகள் விற்பனையை தடுக்க, தமிழக அரசு தனிக்குழு அமைக்க வேண்டும். அவ்வகை சாக்லேட் தயாரிக்கும் இடத்தையும் கண்டறிந்து, முழுமையாக அழிக்க வேண்டும். விற்பனையாளர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் என, பாரபட்சம் காட்டக் கூடாது. தண்டனை கடுமையானால் தான், தவறுகள் குறையும்.
சரண்யா பழனிவேல், எம்.ஏ., வரலாறு, இரண்டாமாண்டு, கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி, விருத்தாசலம்.

பள்ளி, கல்லூரி பகுதியில், போதை பொருட்கள் விற்பதால், மாணவர்கள் பாதிக்கப்படுவது உண்மையென்றால், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும். எங்கள் கல்லூரி அருகில், அது போன்று போதை பொருட்கள் விற்பனை இல்லை. கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை பொருட்கள் விற்பனையை ஒடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை அடியோடு ஒழிக்க வேண்டும்.
வித்யா, அரசு கலைக் கல்லூரி, சி.முட்லூர்.

இந்தியா வல்லரசாவது, இளைஞர்களின் கையில் என, அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தவர், அப்துல் கலாம். அப்படிப்பட்ட இளைஞர்களின் மத்தியில், சமூக விரோதிகள் போதை பழக்கத்தை உருவாக்கி, அவர்களது வாழ்க்கையை அழிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் வளர்ச்சியையும் சீர்குலைக்கின்றனர். இத்த கைய செயல்களில் ஈடுபடும் கொடூர சமூக விரோதிகளை, பாரபட்ச மின்றி கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, தமிழக அரசு ஒடுக்க வேண்டும்.
பிரியதர்ஷினி, அண்ணாமலை பல்கலைக் கழக உடற்கல்வி துறை மாணவி.

விளையாட்டாக சிகரெட் பிடிக்க துவங்கிய பலர், பின், பெட்டி பெட்டியாக ஊதி தள்ளிக் கொண்டிருக்கின்றனர். கல்லூரி கழிப்பறையில் புகைத்து தான் கற்றுக் கொள்கின்றனர். பள்ளி, கல்லூரிகளில் விற்கப்படும் போதை சாக்லேட்டுகளால், இளைஞர்களின் உடல் நலம் மட்டுமின்றி, எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடுகிறது. சிறிய அளவிலான தண்டனைகளால், பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. கல்லூரிகளில், போதை பொருட்கள் விற்பனையை தடுக்க, ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும்.
விஜயலட்சுமி, பி.காம்., இறுதியாண்டு, தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X