உலகத்தில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் அமைப்புகளில் முதன்மையானது, ஐக்கிய நாடுகள் சபையின், குழந்தைகள் நிதியம். குழந்தை தொழிலாளர்களை மீட்பது, அவர்களுக்கு கல்வி வசதி ஏற்படுத்திக் கொடுப்பது, கொத்தடிமைகளாக இருக்கும் குழந்தைகளை மீட்பது உள்ளிட்ட பல்வேறு ஆக்கபூர்வமான செயல்பாடுகளில், இந்த அமைப்பு ஈடுபடுத்தி வருகிறது. உலக அளவில் மதிப்பு மிக்க இந்த அமைப்புக்கு, நல்லெண்ண தூதுவராக, இந்தியாவைச் சேர்ந்த, பிரியங்கா சோப்ரா சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தை தொழிலாளர்கள் அதிகமுள்ள நம் நாட்டில், அவர்களின் பிரச்னைகள் மீது இனி மஞ்சள் வெளிச்சம் விழும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.