பெண்களே உங்களோடு எப்போதும் உடனிருக்கும் கைப் பையில், எந்த அழகு சாதனப் பொருட்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், ஒரே ஒரு பொருளை மட்டும் மறந்து விடாதீர்கள்... அது, 'பெப்பர் ஸ்பிரே!' இந்த ஒரு பொருள் உங்களிடம் இருந்தால், 10 பெண்கள் உங்களை சுற்றி பாதுகாப்புக்கு இருப்பதற்குச் சமம். எதிராளி உங்களை சீண்ட வரும் போது, அவர் கண்களில் இந்த ஸ்பிரேயை அடித்தால், 10 நிமிடத்துக்கு பார்வை இழப்பு ஏற்படும்; சப்த நாடியும் ஒடுங்கி விடும். ஒரு ஸ்பிரே ஒரே நேரத்தில், 10 பேரை சமாளிக்க வல்லது. எவருக்கும் சந்தேகம் வராத வகையில், 'லிப்ஸ்டிக், பேனா, கீ செயின்' என, பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது. இந்த மிளகுத் தூள் ஸ்பிரே கைவசம் இருந்தால், எந்த எதிரி வீட்டுக்கும் செல்லலாம். 300 முதல், 3,000 ரூபாய் விலையில் கிடைக்கிறது.