சிறு வயதில், பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகும் குழந்தைகளில், 80 சதவீதத்தினர், தங்களின் நெருங்கிய உறவினர்களாலேயே அந்த தொந்தரவுகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்கிறது ஐ.நா.,வின் புள்ளி விபரம். இந்த கொடுமைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காகவும், குழந்தைகளின் பாதுகாப்பை அதிகரிக்கவும் பல்வேறு பிரபலங்கள், சிறு வயதில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகளைப் பற்றி வெளியுலகுக்கு சொல்லி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, பாலிவுட் நடிகை, சோனம் கபூரும் தனக்கு நேர்ந்த கொடுமையை, 'இப்போது நினைத்தாலும், நெஞ்சம் நடுங்குகிறது; அந்த சம்பவம், நீண்ட காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியது...' என்றிருக்கிறார். இது, சிறு துவக்கம் தான். பெண்கள் எல்லாரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி வெளி உலகத்துக்கு சொன்னால், நம் குழந்தைகள் பாதுகாக்கப்படுவர்; கொட்டி தீர்த்து விடு நாயகியே!