விண்டோஸ் எக்ஸ்புளோரர் வடிவமைப்பு
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2016
00:00

விண்டோஸ் 10 இயக்க முறைமையில் தரப்பட்டுள்ள 'விண்டோஸ் பைல் எக்ஸ்புளோரர்' (Windows Explorer), முந்தைய பதிப்புகளில் தரப்பட்டுள்ள பலவகை வசதிகளைக் கொண்டிருக்கவில்லை என்று பலர் குறை கூறி வருகின்றனர். மிக மிக எளிமையாக உள்ளது எனக் கூறுவோரும் உண்டு. விண்டோஸ் 8 குறித்தும் இந்த குற்றச்சாட்டு உண்டு. ஆனால், உண்மை அதுவல்ல. விண் 10 கொண்டுள்ள பைல் எக்ஸ்புளோரர் செயலியிலும், நாம் பலவகை வசதிகளை மேற்கொள்ளலாம். அதில் உள்ள போல்டர்களை அவை கொண்டுள்ள பைல்களின் தன்மை அடிப்படையில் பிரித்து வகைப்படுத்திப் பார்க்கலாம். விண்டோஸ் 10 இயக்க முறைமையில், பழைய பதிப்பு வசதிகள் மட்டுமின்றிப் பல புதிய வசதிகளும் தரப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட போல்டரில், இந்த வசதிகளை வடிவமைத்து ஏற்படுத்திவிட்டால், ஸ்பெஷலாக இதில் தரப்பட்டிருக்கும் ஐந்து போல்டர் டெம்ப்ளேட்டுகளைப் பயன்படுத்தி, மற்ற போல்டர்களுக்கும் செயல்படுத்தலாம். அவற்றைப் பெறுவதற்கான குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

வழி நடத்தும் பிரிவு
விண்டோஸ் எக்ஸ்புளோரரைப் பொறுத்தவரை, நம்மை வழிநடத்தும் Navigation Pane மிக முக்கியமான ஒன்றாகும். இதனை நம் கட்டுப்பாட்டில் எளிதாகக் கொண்டு வரலாம். இது, பைல் எக்ஸ்புளோரரில், மாறா நிலையில், இடது பக்கம் தரப்பட்டிருக்கும். இதில், நாம் 'பின்' செய்து வைத்த உடனடியாகப் பெறக் கூடிய (Quick Access)வையும், போல்டரின் பெரும் பிரிவுகளான OneDrive, This PC, Network, and Homegroup ஆகியவற்றைக் கொண்டிருக்கும். நீங்கள் ட்ராப் பாக்ஸ் இன்ஸ்டால் செய்திருந்தால், அவை கூடுதல் பிரிவுகளாகக் காட்டப்படும். இதில் ஏதேனும் ஒன்றில் கிளிக் செய்தால், அந்தப் பிரிவு கொண்டிருப்பதனை, எக்ஸ்புளோரரின் வலது பக்கப் பிரிவில் காணலாம். போல்டரின் இடது பக்கம் உள்ள அம்புக்குறியில் கிளிக் செய்தால், (அல்லது போல்டரில் டபுள் கிளிக் செய்தால்) போல்டரை விரிக்கலாம் மற்றும் சுருக்கலாம்.
இந்த வழி நடத்தும் பிரிவினை நம் வசதிப்படி அமைப்பதில், முதலில் நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது “View” மெனுவாகும். பின்னர், “Navigation pane”ல் உள்ள கீழ்விரி மெனுவில் கிளிக் செய்திடலாம்.
இங்கு நான்கு வகையில் உங்கள் விருப்பப்படி அமைக்கலாம்.
1. வழி நடத்தும் பிரிவு (Navigation Pane): இதில் கிளிக் செய்தால், இந்தப் பிரிவு காணும் வகையிலும், மறைக்கப்பட்ட நிலையிலும் அமைக்கலாம்.
2. போல்டரை விரித்துக் காணல் (Expand to open folder): மாறா நிலையில், வலது புறப் பிரிவில், போல்டர்கள் ஊடாக நீங்கள் சென்றால், Navigation Pane மேலாகக் காட்டப்படும். இந்த செயல்பாட்டினை இயக்கிவைக்கவும். இதில், வலது பிரிவில் நீங்கள் பார்க்கும் போல்டர்கள் தானாக விரிந்து, அவற்றுள் உள்ள பைல்களைக் காட்டும் வகையில் அமைக்கலாம்.
3. அனைத்தும் போல்டர்களும் தெரியும்படி (Show all folders): இந்த செயல்பாட்டினை இயக்கினால், Navigation Pane அதிசயமான முறையில் காட்டப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து போல்டர்களும் இதில் காட்டப்படும். Desktop மேலாகக் காட்சி அளிக்கும். இந்தக் காட்சியில், கண்ட்ரோல் பேனல், ரீசைக்கிள் பின் ஆகியவையும் காட்டப்படுவது இதன் தனிச் சிறப்பாகும்.
4. லைப்ரேரி பிரிவுகள் காட்டப்பட (Show Libraries): விண்டோஸ் 7 இயக்கத்தில், லைப்ரேரி என்ற பிரிவு காட்டப்பட்ட நிலையில் இருந்தது. இந்த Show libraries பிரிவை இயக்கினால், அந்த காட்சி இங்கு கிடைக்கும். ஏனோ தெரியவில்லை, இந்த பிரிவு, புதிய விண்டோஸ் இயக்கத்தில் உள்ள எக்ஸ்புளோரர் விண்டோவில் மறைக்கப்பட்டே உள்ளது.
மேலே தரப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் வகையில், போல்டர்கள் காட்டப்படுவதனை அமைக்கவும்.

முன் தோற்றம் மற்றும் விவரக் கூறுகள்
எக்ஸ்புளோரரில் முன் தோற்றம் மற்றும் விபரக் கூறுகள் (Preview and Details panes) என இரண்டு பிரிவுகள் உள்ளன. இவை பைல் எக்ஸ்புளோரரின் வலது பக்கம் தோற்றமளிக்கும். ஆனால், இவற்றில் ஏதேனும் ஒன்றைத்தான் ஒரு காட்சியில் பார்க்கலாம். 'வியு' டேப்பில், “Preview pane” பட்டனில் கிளிக் செய்திடவும். உடன், இந்த 'பிரிவியு' பிரிவு விண்டோவின் வலது பக்கம் காட்டப்படும். குறிப்பிட்ட சில வகை பைல்களில் கிளிக் செய்கையில், பைல்களில் உள்ளவை ஒரு முன் தோற்றமாகக் காட்டப்படும். எடுத்துக் காட்டாக, படம் கொண்ட ஓர் இமேஜ் பைலில் கிளிக் செய்தால், அந்தப் படம் காட்சியாகத் தெரியும். இதன் மூலம், பல படங்கள் அடங்கிய பைல்களில், நாம் ஒன்றைத் தேடிப் பெற, ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்காமல், இந்த முன் தோற்றக் காட்சியை வைத்தே தேர்ந்தெடுக்க முடியும். அதே போல, டெக்ஸ்ட் பைலுக்கும் முன் தோற்றக் காட்சி கிடைக்கும்.
மற்ற வகை பைல்களைப் பொறுத்தவரை, அவை முன் தோற்றக் காட்சி தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே பார்க்க இயலும். எடுத்துக் காட்டாக, மைக்ரோசாப்ட் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள அனைத்து செயலிகளிலும் உருவாக்கப்படும் பைல்களுக்கு முன் தோற்றக் காட்சி கிடைக்கும். அதே போல, பெரும்பாலான பி.டி.எப். ரீடர் செயலிகளும் இந்த பண்பினைக் கொண்டுள்ளன.
“Details pane” என்பதில் கிளிக் செய்தால், இந்தப் பிரிவில் உள்ளாக இருப்பவற்றைக் காணலாம். இதில் உள்ள போல்டர் ஒன்றின் பைலைத் தேர்ந்தெடுத்தால், அந்த பைல் குறித்த கட்டமைப்பு தகவல்களைப் பெறலாம். இது ஒவ்வொரு வகை பைலுக்கும் வித்தியாசமாகக் காட்டப்படும். ஆனால், பொதுவாக பைல் பெயர், டாகுமெண்ட் வகை, திருத்திய நாள், பைல் அளவு போன்ற தகவல்கள் காட்டப்படும். பைல் ஒன்றின் Properties விண்டோவில் “Details” டேப் அழுத்திக் கிடைக்கும் தகவல்களில் சில இங்கு காட்டப்படும்.
எக்ஸ்புளோரரின் வலது பக்கத்தில் எந்த பிரிவும் காட்டப்பட வேண்டாம் என நீங்கள் விரும்பினால், எந்த பிரிவினைத் திறந்துள்ளீர்களோ, அதன் View பட்டனில் கிளிக் செய்தால், அந்தப் பிரிவு மறைக்கப்படும்.

வடிவமைப்பு பண்புகள் மாற்ற
எக்ஸ்புளோரரின் வியூ டேப்பில் கிடைக்கும் 'வடிவமைப்பு அல்லது கட்டமைப்பு' பிரிவில், பல்வேறு விருப்பங்களின்படி அமைத்துக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. அப்போதைய போல்டரில், பைல்கள் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதனை வரையறை செய்து அமைக்கலாம்.
ஐகான்களை நான்கு வகைகளில் காட்டும்படி அமைக்கலாம். “Small icons,” தேர்ந்தெடுத்தால், பைல் வகைக்கேற்றபடி, ஐகான்கள் காட்டப்படும். மற்ற மூன்று ஐகான்களைத் தேர்ந்தெடுத்தால், பைலில் உள்ளது காட்டப்படும். எடுத்துக் காட்டாக, படங்கள் பைலை இந்த மூன்று வகை ஐகான்களில் காட்டுமாறு அமைத்தால், படங்கள் சிறிய அளவில் காட்டப்படும். பெரிய, மிகப் பெரிய ஐகான்களில், படங்கள் அளவு சற்றுப் பெரிதாகக் காட்டப்படுவதனைக் காணலாம். 'List' கட்டமைப்பு ஏறத்தாழ சிறிய ஐகான்கள் கட்டமைப்பு மாதிரியே காட்டப்படும். “Details” அமைப்பில், பைலின் கூறுகள் நெட்டாக அமைக்கப்பட்ட பத்திகள் போலக் காட்டப்படும். பெயர், பைல் வகை, அளவு, உருவாக்கப்பட்ட நாள் போன்ற தகவல்கள் காட்டப்படும்.
இந்த வகைப் பட்டியலில் காட்டப்படும் தகவல்களை வகைப்படுத்தலாம். அவற்றின் டேப்பில் கிளிக் செய்து வகைப்படுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக, Date டேப்பில் கிளிக் செய்தால், இன்றைய நாள் முதல் படுத்தியோ அல்லது இருக்கின்ற நாட்களில், மிகப் பழைய நாளை முதல் படுத்தியோ பட்டியல் காட்டப்படும். இதே போல, பைல் அளவின் தன்மைப்படி அமைக்கலாம். பெயரை அகரவரிசைப்படி அமைக்கலாம்.
இந்த நெட்டு வரிசைப் பத்திகளை, அதன் டேப்பில் கர்சரை வைத்து, இடம் வலமாக இழுத்து, டேப்கள் வரிசையில் எந்த இடத்திலும் அமைக்கலாம். அதே போல, அவற்றின் அளவைக் குறைக்கலாம் மற்றும் அதிகப்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் பைலின் பெயரை நீளமாக அமைக்கும் பழக்கம் உள்ளவராயின், பெயர் டேப்பின் ஓரத்தில் கர்சரை வைத்து இழுத்து, சற்று கூடுதல் அகலத்தில் அந்த பத்தி தோன்றும் வகையில் அமைக்கலாம். அனைத்து நெட்டு பத்திகளும் ஒரே அளவில் அமைக்கப்பட வேண்டும் என விரும்பினால், 'வியூ' டேப்பில், “Size all columns to fit” என்பதில் கிளிக் செய்திடலாம். அனைத்து டேப்களும் ஒரே அளவில் காட்டப்படுவதால், அனைத்துத் தகவல்களையும் காணலாம்.

“Details” கட்டமைப்பில், நெட்டு பத்திகள்
பைல் எக்ஸ்புளோரரில், மாறா நிலையில் காட்டப்படும் நெட்டு பத்திகள் மட்டுமின்றி, இன்னும் பல கூடுதல் வகை தகவல்கள் காட்டப்படும் பத்திகளையும் அமைக்கலாம். இந்த கூடுதல் பத்திகளைப் பெற, “View” டேப்பில் கிடைக்கும் கீழ் விரி பட்டியலில், “Add columns” என்பதில் கிளிக் செய்திட வேண்டும். அல்லது, இருக்கின்ற நெட்டு பத்தியின் தலைப்பில் ரைட் கிளிக் செய்து இந்த மெனுவினைப் பெற்றும் தேர்ந்தெடுக்கலாம். இணைப்பது போலவே, தேவையற்ற தகவல் தரும் நெட்டு பத்திகளை நீக்கவும் செய்திடலாம். நீக்க வேண்டிய நெட்டு பத்தியின் தலைப்பில் கிளிக் செய்து கிடைக்கும் மெனு மூலம் நீக்கலாம்.
இவ்வாறு கூடுதலாக பத்திகள் அமைக்க மெனு வழியயாக நமக்குக் கிடைக்கும் பத்திகள் நமக்குப் போதாது என்றால், இந்த பட்டியலில், கீழாகத் தரப்பட்டுள்ள “Choose columns” என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது, என்ன மாதிரியான விபரங்களை நெட்டு பத்தியில் பெற விரும்புகிறோம் என்பதனை பைல் எக்ஸ்புளோரருக்குத் தெரிவிக்க, “Choose Details” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு நூற்றுக் கணக்கான, பல வகையான நெட்டு பத்திகள் கிடைக்கும். இவற்றில் நீங்கள் விரும்பும் தகவல் வரியைத் தேர்ந்தெடுத்து, அதன் அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை அமைக்கவும். இதில் காட்டப்பட்டுள்ள பலவகை தகவல் வகைகளை, மேலும் கீழுமாக இழுத்து அமைக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் தகவலுக்கான நெட்டு பத்தியின் அகலம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதனை “Width of selected column (in pixels)” என்ற பிரிவில் அமைக்கலாம். பின்னர், இதனைப் பெரிதாக்கவோ, சிறியதாக்கவோ விரும்பினால், பைல் எக்ஸ்புளோரரில் முன்பு குறிப்பிட்டபடி அமைக்கலாம்.

பைல்கள் தேர்வு
போல்டரில் உள்ள பைல்களைத் தேர்ந்தெடுக்க சில வழிகளைப் பின்பற்றுகிறோம். தொடர்ச்சியாகத் தேர்ந்தெடுக்க 'ஷிப்ட்' கீயையும், தொடர்ச்சியாக இல்லாமல் தேர்ந்தெடுக்க கண்ட்ரோல் கீயையும் பயன்படுத்துகிறோம். விண் 10ல், பைல் எக்ஸ்புளோரரில் இன்னொரு எளிய வழி உள்ளது. “View” மெனுவில், “Item check boxes” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், எந்த ஒரு பைலைத் தேர்ந்தெடுக்க கர்சரைக் கொண்டு சென்றாலும், அதன் அருகே ஒரு செக் பாக்ஸ் இடது புறமாகக் காட்டப்படும். இந்த செக் பாக்ஸில் கிளிக் செய்து டிக் அடையாளம் ஏற்படுத்திவிட்டால், அந்த பைல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். எனவே, இதற்கென, மேலே கூறப்பட்ட இரு கீகளில் ஒன்றை அழுத்தியவாறே இருக்க வேண்டியதில்லை.
மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் யாவும், விண்டோஸ் 10ல், பைல் எக்ஸ்புளோரரை எப்படி எல்லாம் நம் விருப்பப்படி பயன்படுத்தலாம் என்பதற்கான குறிப்புகளே. இதன் மூலம் பல புதிய வசதிகளைப் போல்டர் பயன்பாட்டில் நாம் பெறலாம். இன்னும் இங்கே குறிப்பிடப்படாத சில வசதிகளும் உண்டு. அவற்றை மைக்ரோசாப்ட் உதவித் தளம் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X