திருடப்பட்ட நூறு கோடி யாஹூ அஞ்சல் கணக்குகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2016
00:00

சென்ற டிசம்பர் 14 அன்று, யாஹூ மின் அஞ்சல் தளத்திலிருந்து ஒரு கோடி கணக்குகளில் உள்ள தகவல்கள் திருடப்பட்டுவிட்டன என்று யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது. இது மூன்றாவது முறையாக நடந்துள்ளது. பல ஆண்டுகளாகவே இந்த திருட்டு நடந்துள்ளது. இப்போது உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட தகவல்களைக் கொண்டுள்ள அஞ்சல்களுக்குச் சொந்தக்காரர்களில், அமெரிக்க அரசு மற்றும் பாதுகாப்பு துறையில் பணியாற்றுபவர்களும் உள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 1,50,000. எனவே, அமெரிக்க அரசின் பாதுகாப்பிற்கு பிரச்னை வருமா எனப் பலர் அச்சப்படுகின்றனர். பொதுமக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.
யாஹூ அஞ்சல் கணக்குகள் வைத்துள்ள இவர்கள் அவற்றை என்ன செய்வது என்றறியாமல் விழிக்கின்றனர். இந்த சிக்கலான நிலை ஏற்பட்ட நிகழ்வினையும், அதற்கான தீர்வையும் இங்கு காணலாம்.
சென்ற 2014 ஆம் ஆண்டில், 50 கோடி கணக்குகளை, ஹேக்கர்கள் நுழைந்து அவற்றில் இருந்த தகவல்களைத் திருடிவிட்டதாக யாஹூ அறிவித்தது. இதே போல, ஆகஸ்ட் 2013 லும் பல லட்சம் கணக்குகள் திருடப்பட்டன. பயனாளர்களின் பெயர்கள், மின் அஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், பாஸ்வேர்ட்கள், பிறந்த நாள் விபரங்கள், பாதுகாப்பு தொடர்பான கேள்வி பதில்கள் எனப் பல வகை தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
யாஹூவின் ரகசிய குறியீடு ஒன்றைக் கண்டறிந்த ஹேக்கர்கள், அதன் மூலம் பாஸ்வேர்ட் இல்லாமலே, வாடிக்கையாளர்களின் பதிவுகளில் உள்ள தகவல்களைத் திருடியுள்ளனர் என்று தெரிகிறது. யாஹூ தளத்தில் பதிந்து வைத்துள்ள தகவல்கள் கொண்ட குக்கி பைல்களும் திருடப்பட்டுள்ளன. அல்லது அவை போலவே உருவாக்கப்பட்டுப் பயன் படுத்தப் பட்டுள்ளன. இது குறித்து யாஹூ பாதுகாப்பு துறை மற்றும் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிப்பதாக அறிவித்துள்ளது.
இதனை அறிந்த பல பயனாளர்கள், தங்கள் யாஹூ அஞ்சல் கணக்கினை நீக்கிட விரும்புகின்றனர். எப்படி நீக்குவது என இங்கு பார்க்கலாம்.
யாஹூ அக்கவுண்ட்டினை நீக்கும் முன்னர், அதில் உள்ள உங்கள் அஞ்சல்கள் மற்றும் தகவல்களை, உங்கள் கம்ப்யூட்டருக்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். யாஹூ தன் அஞ்சல் தளத்தில் Post Office Protocol (POP) என்னும் முறையினைப் பயன்படுத்துகிறது. அதாவது, மின் அஞ்சல் செயலி ஒன்றைப் பயன்படுத்தி, யாஹூ மெயில் தளத்தில் உள்ள அஞ்சல்களை உங்கள் கம்ப்யூட்டருக்கு மாற்றிக் கொள்ளலாம். அதே செயலியில் அஞ்சல்களைத் தயார் செய்து, யாஹூ அஞ்சல் தளம் மூலம் அனுப்பலாம். இதற்கு மாறாக, ஜிமெயில் போன்ற அஞ்சல் தளங்கள், அவர்களுடைய சர்வரை அடைந்து அஞ்சல்களைப் பார்ப்பது, அமைப்பது மற்றும் அனுப்புவது போன்ற செயல்களை மேற்கொள்ள இயலும். Post Office Protocol (POP) அஞ்சல் வழிமுறையை, Outlook, Outlook Express, Windows Live Mail, OS X Mail, மற்றும் Thunderbird ஆகிய மின் அஞ்சல் செயலிகள் பயன்படுத்துகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
உங்கள் யாஹூ தளத்தில் உள்ள அஞ்சல்களை, உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டிற்கு மாற்றிக் கொள்வதும் எளிது. இதற்கு, உங்கள் ஜிமெயில் தளம் செல்லவும். அங்கு, மேலாக வலது பக்கம் உள்ள கியர் ஐகானை கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Settings என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, Accounts and Import என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து, Import mail and contacts என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு, யாஹூ அஞ்சல் கணக்கு குறித்த அதன் பெயர், பாஸ்வேர்ட் ஆகியவற்றைத் தரவும். உடன், உங்கள் தொடர்புகள், பழைய மெயில், மற்றும் 30 நாட்களில் வந்த புதிய மெயில்கள் அனைத்தும், ஜிமெயில் தளத்திற்கு இறக்கப்படும். வேறு எந்த ஒரு அஞ்சல் தளமும், இது போல வேறு ஒரு அஞ்சல் தளத்தின் அஞ்சல்களைத் தரவிறக்கம் செய்திடும் வசதியைக் கொண்டிருக்கவில்லை.
யாஹூ தளத்தில் உள்ள உங்களின் தொடர்புகளையும், ஜிமெயிலுக்கு மாற்ற விரும்புவீர்கள். அதற்கு, முதலில், யாஹூ மெயில் தளம் சென்று, Contacts ஐகானில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Actions என்பதில் கிளிக் செய்து, Export என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
தரவிறக்கம் செய்திட ஒரு பார்மட்டைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு Microsoft Outlook, Thunderbird, Yahoo CSV, அல்லது two vCard variants ஆகிய வழிகள் காட்டப்படும். ஏதேஉம் ஒரு பார்மட்டைத் தேர்ந்தெடுக்கலாம். இனி, Export என்பதில் கிளிக் செய்திடவும். உடன் அனைத்து தொடர்புகளும், ஜிமெயில் தளத்திற்கு வந்துவிடும்.
யாஹூவின் Flickr பிரிவில், உங்கள் போட்டோக்களை வைத்திருந்தால், அவற்றையும் தரவிறக்கம் செய்து கொள்வது நல்லது. இதனை மேற்கொள்ள, முதலில் Camera Roll செல்லவும். நீங்கள் தரவிறக்கம் செய்திட விரும்பும், போட்டோ தொகுதிகளைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், Download என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இது அந்த பக்கத்தில் கீழாகத் தரப்பட்டிருக்கும். இங்கு கிடைக்கும் பாப் அப் விண்டோவில் Download Zip என்பதிலும் கிளிக் செய்திடவும்.
தேவையானதைத் தரவிறக்கம் செய்தாயிற்றா? இனி உங்கள் யாஹூ அஞ்சல் கணக்கினை நீக்குவதற்கான வழியைப் பார்க்கலாம்.
1. முதலில் Terminating your Yahoo account என்ற பக்கத்திற்குச் செல்லவும். இது, https://edit.yahoo.com/config/delete_user என்ற முகவரியில் கிடைக்கும். நீங்கள் யாஹூ அஞ்சல் பக்கத்தில் லாக் இன் செய்திட, உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்துபவராக இருந்தால், alternative account termination page என்ற பக்கத்தினைப் பயன்படுத்தவும். இதனை, https://login.yahoo.com/account/action/delete_user என்ற முகவரியில் பெறலாம்.
2. அஞ்சல்களை அழித்துவிட்டால், மீண்டும் அவற்றைப் பெற முடியாது, இது ஓர் ஒரு வழிப் பாதையாகும். எனவே, நன்கு சிந்தித்து இந்த செயல்பாட்டில் இறங்கவும்.
3. உங்கள் அக்கவுண்ட் தளத்தில் பாஸ்வேர்ட் கொடுத்து உள் நுழையவும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள கேப்சா சோதனையை மேற்கொள்ளவும்.
4. அடுத்து, Terminate the Account என்ற லேபிளில் கிளிக் செய்திடவும்.
அவ்வளவு தான். உங்கள் அக்கவுண்ட் அழிக்கப்படும். ஆனால், உடனே அல்ல. யாஹூவிடமிருந்து நீங்கள் பிரிந்து செல்வதைச் செயல்படுத்த, யாஹூ 90 நாட்கள் வரையிலான காலத்தினை எடுத்துக் கொள்ளும். இதற்குக் காரணம், ஹேக்கர்கள் அல்லது உங்களுக்குப் பிடிக்காதவர்கள், பாஸ்வேர்டைத் திருடி, அக்கவுண்ட்டை அழித்துவிடக் கூடாது என்பதற்காகவே.
மூன்று மாதங்கள் உங்கள் அக்கவுண்ட் 'உயிரோடு' இருக்கப் போவதால், உங்கள் அக்கவுண்ட்டினை அதுவரையிலாவது பாதுகாத்து வைக்கலாம். அக்கவுண்ட் நீக்கம் வேண்டாம், இருந்துவிட்டுப் போகட்டும் என எண்னுபவர்கள், நிச்சயமாக, உங்கள் அக்கவுண்ட்டினைப் பாதுகாக்கும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான வழிகளைப் பார்ப்போம்.
முதலில், உங்கள் யாஹூ அக்கவுண்ட்டிற்கு, “உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதனைச் சரி செய்து பாதுகாத்திட கீழ்க்காணும் லிங்க்கில் கிளிக் செய்திடுங்கள் என்று அஞ்சல் வந்தால், அது ஒரு ஏமாற்று அஞ்சல் எனத் தெரிந்து கொள்க. அதில் கண்டுள்ளபடி, கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கில் கிளிக் செய்தால், உங்கள் யாஹூ மெயில், தகவல்கள் எல்லாம் ஹேக்கர்கள் வசம் சென்று விடும். எனவே, இது போன்ற அஞ்சல்களை உடனே நீக்கிவிட்டு, ட்ரேஷ் பாக்ஸிலிருந்தும் நீக்கிவிடவும்.
யாஹூ தளத்திலிருந்து இது போல தகவலுடன் அஞ்சல் அனுப்பப்பட்டால், அதன் சப்ஜெக்ட் பிரிவில் "Important Security Information for Yahoo Users" என்று இருக்கும். மற்றவை எல்லாம், ஹேக்கர்களின் அஞ்சல்கள் தான்.
அடுத்ததாக, யாஹூ அஞ்சல், ப்ளிக்கர் அக்கவுண்ட்களின் பாஸ்வேர்டினை மாற்ற வேண்டும். இதற்கு, அக்கவுண்ட் பக்கம் செல்லவும். பின்னர், Account Info என்ர பிரிவிற்குச் செல்லவும். அங்கு Account Security என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், அதே பக்கத்தில், Change password என்பதில் கிளிக் செய்து, நல்ல பாஸ்வேர்டாக, அதாவது யாரும் எளிதாக தெரிந்து கொள்ள முடியாததாக, அமைக்கவும். நீளமான பாஸ்வேர்டாகவும் இருக்கலாம். நானாக இருந்தால், “yahoopasswordisBAD” என்று கூட அமைப்பேன். இந்த பாஸ்வேர்ட் மற்ற எந்த கணக்கிற்கும் பாஸ்வேர்ட் ஆக இருக்கக் கூடாது என்பது முக்கியம். ஏனென்றால், அதனைத் தெரிந்து வைத்திருக்கும் ஹேக்கர்கள், இங்கு பயன்படுத்திப் பார்க்கலாம்.
யாஹு Yahoo account key என்று ஒரு டூலைப் பயன்படுத்துகிறது, ஒவ்வொரு முறை யாஹூ கணக்கில் நுழைகையில், ஒவ்வொரு முறையும் புதிய பாஸ்வேர்ட் ஒன்று உங்கள் ஆண்ட்ராய்ட் அல்லது ஐபோனுக்கு அனுப்பப்படும். அதனைப் பெற்று, யாஹூ கணக்கில் பயன்படுத்த வேண்டும். இது சற்று சலிப்படைய வைத்திடும் முறை என்றாலும், யாரும் இதனை அறிந்து கொள்ள முடியாது.
யாஹூ தளத்தில் பதியப்பட்டு இருந்த Secutity Questions எனப்படும் பாதுகாப்பு குறித்த கேள்வி பதில்களும் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பாஸ்வேர்ட் மாற்றிய பின்னர், Account Security பக்கத்தில், "Disable security questions" என்பதில் கிளிக் செய்து,
ஏற்கனவே பதிந்து வைக்கப்பட்ட கேள்வி பதில்களை செயல் இழக்கச் செய்திடவும்.
யாஹூ தளத்திலிருந்து தகவல்கள் திருடப்பட்ட செய்தியினால், பலர் யாஹூவை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர்.
வங்கி மற்றும் அரசு அலுவலக நடவடிக்கைகளுக்கு யாஹூ மெயில் கணக்கினைத் தந்தவர்களே, இதில் தொடர்கின்றனர். இருப்பினும், மேலே தரப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துத் தொடர்ந்து கண்காணித்து வருவது நல்லது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X