400 வங்கி அதிகாரி காலியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2016
00:00

பொதுத்துறை வங்கிகளில் முக்கியமான சிண்டிகேட் வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. கோர் பேங்கிங் உள்ளிட்ட நவீனமய சேவைகளைக் கொண்ட இந்த வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள 400 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடியாக இல்லாமல் ஓராண்டு சிறப்பு படிப்பு முடிக்க வேண்டும். இதற்காக மணிப்பூர் ஸ்கூல் ஆப் பேங்கிங் என்ற கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இக்கல்வி நிறுவனத்தில் Post Graduate Diploma in Banking and Finance (PGDBF) என்ற ஓராண்டு படிப்பு முடிக்க வேண்டும். இதனை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு PGDBF என்ற சான்றிதழை அக்கல்வி நிறுவனம் வழங்கும். இந்த சான்றிதழ் பெற்றவர்கள் நேரடியாக சிண்டிகேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி ஆக பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
வயது : இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.10.2016 அடிப்படையில் 20 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 02.10.1988க்கு பின்பும், 1.10.1996க்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவினருக்கு சலுகைகள் உள்ளன.
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, குழுவிவாதம் மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். எழுத்து தேர்வு 2017 பிப்., 26ம் தேதி நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் : சிண்டிகேட் வங்கியின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.600/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் வாயிலாக ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை எடுத்து
பத்திரப்படுத்தவும்.
கடைசி நாள் : 2016 டிச., 28.
விபரங்களுக்கு : www.syndicatebank.in

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X