எல்.ஜி. பிரிமியம் ஸ்மார்ட் போன் வி 20 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
எல்.ஜி. பிரிமியம் ஸ்மார்ட் போன் வி 20
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 டிச
2016
00:00

எல்.ஜி. நிறுவனத்தின் மிக உயர்ந்த தொழில் நுட்பத்துடன் கூடிய “எல்.ஜி. வி.20” ஸ்மார்ட் போன் குறித்து முன்பு இங்கு குறிப்புகள் தரப்பட்டன. சென்ற வாரம், இந்த ஸ்மார்ட் போன் இந்தியாவில், அதிக பட்ச விலை ரூ.54,999 எனக் குறிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.
ஐபோன் 7 மற்றும் சாம்சங் கேலக்ஸி 7 ஆகிய போன்களுக்குப் போட்டியாக இது களத்தில் இறக்கப்பட்டுள்ளது. கூகுள் போன்களுக்கு அடுத்தபடியாக, ஆண்ட்ராய்ட் நகெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ள போன் ஆக இது உள்ளது. இதன் சிப் செட் Qualcomm MSM8996 Snapdragon 820. ஜி.பி.யு. Adreno 530. ராம் மெமரி 4 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி இரு மாடல்களில் 32/64 ஜி.பி. ஆக உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 256 ஜி.பி. மெமரி பெறலாம்.
2560 x 1440 பிக்ஸெல் அடர்த்தியுடன் கூடிய 5.7 அங்குல திரை எச்.டி. குவாண்டம் டிஸ்பிளேயுடன் தரப்பட்டுள்ளது. வழக்கமான திரைக்கு மேலாக, 2.1 அங்குல அளவில் டிஸ்பிளே திரை உள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 160 x 1040 பிக்ஸெல்கள். திரைக்கு கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
பின்புறமாக இரண்டு கேமராக்கள் தரப்பட்டு, அவை இணைந்து செயலாற்றுவது இதன் தனிச் சிறப்பாகும். இதன் திறன் 16 மெகா பிக்ஸெல். இன்னொரு கேமரா 8 எம்.பி. திறன் கொண்டது. பின்புறக் கேமரா Laser Detection AF, Phase Detection AF (PDAF) and Contrast AF என மூன்று வகை போகஸ் திறனுடன் செயல்படுகிறது. விடியோ பதிவிலும் இந்த தொழில் நுட்பம் செயல்பட்டு துல்லியமான பதிவுகளைத் தருகிறது. முன்புறமாக உள்ள கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. விடியோ பதிவில் நவீன தொழில் நுட்பத்துடன் ஆடியோ பதிவு கிடைக்கிறது.
இதில் இரண்டு நானோ சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 159.7 x 78.1 x 7.6 மிமீ. எடை 173 கிராம். அலுமினியம் கவசத்துடன் அழகான வடிவமைப்பில் உள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி எல்.டி.இ., டூயல் பேண்ட் வை பி, புளுடூத், ஜி.பி.எஸ்., என்.எப்.சி., டைப் சி யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு அனைத்து நவீன உயர் ரக தொழில் நுட்பங்களும் இயங்குகின்றன. Fingerprint (பின்புறமாக), accelerometer, gyro, proximity, compass, color spectrum ஆகிய சென்சார்கள் தரப்பட்டுள்ளன.
குயிக் சார்ஜ் 3 தொழில் நுட்பத்துடன் இயங்கும் லித்தியம் அயன் பேட்டரி வெளியே எடுக்கும் வகையில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் திறன் 3200 mAh.
டைட்டன், பிங்க் மற்றும் சில்வர் வண்ணங்களில் இந்த ஸ்மார்ட் போன் கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 60,000 எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், சந்தையில் ரூ. 54,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ. 18,000 மதிப்புள்ள ஹெட்செட் ஒன்று இலவசமாகத் தரப்படுகிறது. பின்புறக் கவர் ஒன்றும் பரிசாகக் கிடைக்கிறது. திரைக்கு ஆறு மாதங்கள் வாரண்டி தரப்படுகிறது.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X