இலக்கணப் பிழை திருத்தும் செயலிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2017
00:00

சென்ற ஜூன் 20, கம்ப்யூட்டர் மலரில், Grammmarly என்ற ஆங்கில மொழிப் பயன்பாட்டில் எழுத்து, சொல், இலக்கணம் மற்றும் வாக்கியப் பிழைகள் திருத்தும் செயலி குறித்து விரிவான கட்டுரை தரப்பட்டது. பல வாசகர்கள் தாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவதாக எழுதி உள்ளனர். சிலர், ''இதெல்லாம் பிழை என்றே தெரியாது. இப்படி எல்லாம் எங்களுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை'' என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆங்கில மொழிப் பயன்பாட்டினைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் கூட, இந்த செயலி மூலம் பல புதிய தகவல்களைக் கற்றுக் கொண்டு, தங்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதில் பயன்படுத்துவதாக தகவல் தந்துள்ளனர்.
ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதில் நமக்கு மட்டுமல்ல, அதனைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குக் கூட சிரமங்கள் ஏற்படுவதுண்டு. ஒரு மொழிப் பயன்பாட்டில் இது போன்ற சிக்கல்கள் ஏற்படுவது சகஜமே. இத்தகைய சிக்கல்களுக்குத் தீர்வு தருவதில் சிறந்த செயலியாக இயங்கும் Grammarly குறித்து விரிவான கட்டுரை தரப்பட்டது. அதே இலக்குடன் மேலும் பல செயலிகள் உள்ளன. அவை குறித்து இங்கு காணலாம்.
முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மொழியின் இலக்கணத்தில் எளிதாக ஒருவர் மிகப் பெரிய அளவில் புலமை பெற்றிட முடியாது. ஒவ்வொரு சொல் பயன்படுத்துவதிலும் நமக்கு சந்தேகம் ஏற்படும். அது தாய்மொழியாக இருந்தாலும் கூட. எனவே, இந்த சந்தேகங்களைத் தீர்க்கும் கம்ப்யூட்டர் டூல் இருந்தால், அது நம்மை வழி நடத்தி, நம் மொழிப் பயன்பாட்டிற்கு மெருகூட்டும். வாக்கிய அமைப்புகளைச் சீராக்கும். எழுத்துப் பிழைகள் இல்லாமல் செய்திடும். சரியான சொற்களை அமைப்பதில் வழி காட்டும். இந்த டூல்களைத் தாங்கியுள்ள தளங்களையும், அவை நமக்கு எந்த வழிகளில் உதவுகின்றன என்பதனையும் காணலாம்.

Grammarly
ஏற்கனவே தரப்பட்ட கட்டுரையில் சொல்லப்பட்ட Grammarly செயலி தான் இந்த வகையில் மிகச் சிறந்ததாகும். இது பற்றி சுருக்கமாக இங்கு தருகிறேன். நாம் ஆங்கில மொழியில் தயாரிக்கும் ஆவணங்கள், மின் அஞ்சல்கள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பதிவுகள் என அனைத்தையும் திருத்தி அமைக்கும். வேர்ட் செயலி காட்டும் பிழைகளைக் காட்டிலு பத்து மடங்கு அளவில் பிழைகளை இது சுட்டிக் காட்டுகிறது. முன் ஒட்டுச் சொற்கள் (preposition), சரியான வினைச்சொல் பயன்பாடு, பெயர்ச்சொல் பயன்படுத்தல், தவறாகப் பயன்படுத்தப்படும் சொற்கள் என அனைத்து வகைகளிலும் இது நமக்கு உதவியாக இருக்கிறது. இதனை இலவசமாகப் பயன்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: https://www.grammarly.com/. இதன் மேம்படுத்தப்பட்ட, கூடுதல் வசதிகள் கொண்ட பதிப்பு பெற கட்டணம் செலுத்த வேண்டும்.

Ginger Grammar Checker
இணையத்தில் கிடைக்கும், ஆங்கில மொழி பயன்பாட்டினை மெருகூட்டித் தரும் ஒரு டூல் 'ஜிஞ்சர்' (Ginger). மேலே சொல்லப்பட்ட 'கிராமர்லி' போலவே, இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் இதனைப் பெறலாம். இலக்கண மற்றும் சொல் பிழைகளை இது திருத்துகிறது. இதன் சிறப்பு, இதில் உள்ள 'sentence rephraser' என்னும் டூல் ஆகும். இது நீங்கள் அமைத்திடும் முழு வாக்கியத்தினைச் செம்மைப் படுத்தி அமைக்க உதவுகிறது.
இதில் கிடைக்கும் 'Text to Speech' என்ற டூலினைப் பயன்படுத்தி, ஆங்கிலத்தை எப்படி அதனை உச்சரிக்க வேண்டுமோ, அதன்படி உச்சரித்துப் பேசுவதற்குப் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். எழுத்துப் பிழை திருத்தம், ஒற்றை மற்றும் பன்மை பெயர்ச் சொற்களில் பிழை திருத்தம், தவறாகப் பயன்படுத்தப்பட்ட சொற்கள் திருத்தம் எனப் பலவகையான திருத்தங்களைச் செயல்படுத்துகிறது இந்த செயலி. இந்த வகையில், நம் தனிப்பட்ட ஆசிரியராகவே இது செயல்படுகிறது. இது ஒரு கூகுள் எக்ஸ்டன்ஷன் புரோகிராமாகவும் கிடைக்கிறது. அல்லது இணைய இணைப்பில் உங்கள் ஆவணத்தைத் திருத்திப் பெறலாம். இந்த செயலியைத் தரவிறக்கம் செய்திட http://www.gingersoftware.com/ என்ற முகவரிக்குச் செல்லவும்.

Paper Rater
இணையத்தில் கிடைக்கும் ஒரு வித்தியாசமான ஆங்கில மொழி திருத்தி Paper Rater. மற்ற செயலிகளைப் போல, இந்த செயலியும் எழுத்து, இலக்கண, சொல் மற்றும் வாக்கியப் பிழைகளைத் திருத்துகிறது. இதன் தனிச் சிறப்பு, இதில் காணப்படும் Vocabulary Builder என்னும் டூல் ஆகும். சொற்களைச் சரியாகப் பயன்படுத்த இந்த டூல் நமக்கு உதவுகிறது. இதன் இன்னொரு சிறப்பு, ஆங்கில மொழியினைப் பயன்படுத்துவதில், எழுதுபவர் அல்லது படிப்பவரின் நிலைக்கேற்ப, டெக்ஸ்ட்டைத் திருத்துவதாகும். கல்லூரி மாணவர், பட்டதாரி, டாக்டர் பட்ட ஆய்வாளர் என மூன்று நிலைகளில் எப்படி ஆங்கிலம் பயன்படுத்தப்பட வேண்டுமோ, அந்த நிலைக்கேற்ப திருத்தங்களை அளிக்கிறது. கட்டுரையின் தன்மைக்கேற்பவும் திருத்தங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், உங்களுடைய கட்டுரையினைப் படித்து, மொத்தமாக மதிப்பெண் தருகிறது. இதிலிருந்து உங்கள் கட்டுரையின் மதிப்பினை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். https://www.paperrater.com/free_paper_grader என்னும் முகவரியில் உள்ள தளம் சென்று, உங்கள் கட்டுரையை அதில் பதித்து, தளத்தின் திருத்தங்கள் மற்றும் மதிப்பெண்ணைப் பெறலாம். அல்லது, கட்டுரை கோப்பினை அப்லோட் செய்து பெறலாம்.

After the Deadline
மிக அருமையான இலக்கண பிழை திருத்தி. இதற்கு இன்னொரு பெயரும் உண்டு. PolishMyWriting எனவும் இதனை அழைக்கின்றனர். Word Press செயலியியைத் தயாரித்து வழங்கும் Automattic Inventions என்ற நிறுவனத்தினர், இதனைத் தயாரித்து வழங்கியுள்ளனர். இலக்கணப் பிழைகளைத் திருத்துவதில் மிகச் சிறந்த செயலி. இலக்கணப் பிழைகளைத் திருத்தி, பிழைகளின் இடத்தில் என்ன மாதிரியான சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்குகிறது. இந்த செயலி, Plug in / Add on ஆகக் கிடைப்பதால், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களுடன் பயன்படுத்தலாம். ஆனால், இதனை மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்புடன் இணைத்துப் பயன்படுத்த முடியாது. இந்த செயலியைப் பெற http://www.polishmywriting.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

WebSpellChecker
இந்த செயலியின் சிறப்பு, ஒரு சொல்லுக்கு அதே பொருளைத் தரும் இன்னொரு சொல்லைத் தரும். எழுத்துப் பிழைகளைத் திருத்துவதுடன், இலக்கண பிழைகளை ஆய்வு செய்து விளக்கங்களைத் தருகிறது. முதலில் குறிப்பிட்டது போல, உங்கள் கட்டுரையில் இடம் பெற்றுள்ள சொற்களுக்கான அதே பொருளைத் தரும் பிற சொற்களையும் தருகிறது. இந்த செயலியைத் திறந்தவுடன், Grammar, Spellchecker, மற்றும் Thesaurus என மூன்று டேப்களைக் காணலாம். இதில் மூன்றாவதான Thesaurus டேப்பில் கிளிக் செய்தால், சொல்லுக்கான பொருளைத் தரும் இன்னொரு சொல் (synonym) கிடைக்கும். எந்த சொற்களுக்கெல்லாம், வேறு சொற்களையும் பயன்படுத்தலாமோ, அவை எல்லாம் ஹைலைட் செய்யப்பட்டு, அவற்றைத் தேர்ந்தெடுக்கையில், அச்சொற்கள் காட்டப்படும். இந்தச் செயலியைப் பயன்படுத்த நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி: https://www.spellchecker.net/

Slick Write
இந்த Slick Write செயலி, மற்ற செயலிகள் போல இலக்கணப் பிழைகளை அவ்வளவாகத் திருத்துவது இல்லை. ஆனால், ஓர் ஆவணம் படிக்கும் அளவிற்குத் தகுதியானது தானா என்பதை Readability Score தருவதன் மூலம் காட்டுகிறது. மேலும், ஆவணத்தை நன்கு படிக்கும் அளவிற்குத் தகுதியானதாக மாற்றுவதற்குத் தேவையான அறிவுரைகளைத் தருகிறது. எனவே இலக்கணப் பிழைகளைத் திருத்திக் கொண்டு, உங்களுடைய டெக்ஸ்ட்டின் தன்மையை உயர்த்துவதற்குத் தேவையான உதவிகளைப் பெற இந்த Slick Write செயலியைப் பயன்படுத்தலாம். இதனை அதன் இணைய தளத்திலேயே பயன்படுத்தலாம். இணைய தள முகவரி: http://www.slickwrite.com/#!home

Online Correction
இந்த Online Correction டூல், உங்களின் ஆவணத்தில் எத்தனை பிழைகள் உள்ளன என்று காட்டி, அவற்றை எப்படி திருத்த வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. சொற்கள், வரிகளுக்கிடையே இடைவெளி சரியாக உள்ளதா என்பதையும் எடுத்துச் சொல்கிறது. எழுத்துப் பிழைகள் சிகப்பு கோடு இடப்பட்டு காட்டப்படுகிறது. மற்ற பிழைகள், பச்சை வண்ணத்தில் கோட்டுடன் சுட்டிக் காட்டப்படுகிறது. இதில் எட்டு மொழிகளில் (ரஷ்ய மற்றும் ஐரோப்பிய மொழிகள்) உள்ள ஆவணங்களைத் திருத்தலாம் என்பது கூடுதல் தகவல். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.onlinecorrection.com/

GramMark
GramMark செயலியை இணைய இணைப்பிலும், இல்லாத போதும் பயன்படுத்தலாம். உங்கள் ஆவணத்தை மிகத் தெளிவாக ஆய்வு செய்து, அதில் உள்ள செயப்படு / செயப்பாடு வினை பிழைகள் (active and passive voice errors), வாக்கியங்கள், வாக்கிய அமைப்புகள், எழுத்துப் பிழைகள் ஆகியவற்றை மிகச் சரியாகத் திருத்துகிறது. இந்த டூல் மிகவும் பாராட்டுகளைப் பெற்ற ஒன்றாகும். இதனைப் பெற http://grammark.org/dist/#/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
மேலே தரப்பட்டுள்ள டூல்கள் அனைத்தும், நம் ஆங்கில மொழியில் அமைக்கும் ஆவணங்களைத் திருத்தி, சிறப்பாக, உயர்ந்ததாக அமைக்க நமக்கு உதவுகின்றன. நல்ல திறமையான ஆசிரியர்களைப் போல இவை இயங்குவது இவற்றின் சிறப்பாகும். இதில் நமக்குப் பழக்கமாக, எளியதாக உள்ளவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X