விளை நிலங்களில் நிலத்தடி நீர் அறுவடை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2017
00:00

நிலத்தடி நீர் என்பது அள்ள அள்ள குறையாத அமுதசுரபி அல்ல, அவ்வப்போது கிடைக்கும் மழை நீரை சேமித்து கொண்டே இருந்தால் தான் தேவைக்கு பயன்படுத்த முடியும். வங்கியில் சேமிக்கும் பணத்தை போலத்தான் நிலத்தடி நீரும். சேமிப்பதை நிறுத்தி விட்டு அதிகளவு தண்ணீரை உறிஞ்சுவதால் இன்று 1000 அடி அளவிற்கு ஆழ் குழாய் கிணறு அமைத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. வீடுகளில் மழை நீரை சேமிப்பது போல் நிலங்களிலும் மழை நீரை சேமிக்க வேண்டும்.

மழை நீர் அறுவடை
விளை நிலங்களில் மழை நீரை அறுவடை செய்வது தான் நிலத்தடி நீர் மட்டம் உயர முதல்படி. நிலத்தில் பெய்யும் மழை நீர் வெளியேறாமல் நிலத்திலேயே தேங்கி இருக்க, நிலத்தில் மழைக்காலத்துக்கு முன்பே நன்றாக உழவு செய்ய வேண்டும். கோடை உழவு செய்த பின் கிடைக்கும் மழை நீர் முழுவதுமாக எளிதில் உறிஞ்சப்பட்டு மண்ணில் செலுத்தப்படும். நிலச்சரிவுக்கு குறுக்கே உழவு செய்யப்படும் போது மண்ணில் மழை நீருக்கு வேகத்தடை ஏற்படுத்தப்பட்டு நிலத்திலேயே சேகரிக்கப்படுகிறது. நிலங்களில் சமச்சீர் வரப்புகள் அமைத்தல் மூலம் குறிப்பிட்ட நிலத்தில் கிடைக்கும் மழைநீர் அந்த நிலத்திலேயே தேங்கி மெதுவாக இறங்கும். இப்படி வரப்புகளை அமைக்கும் போது நீர் தேங்கும் பகுதியில் வரப்புகளை ஒட்டி இரண்டடி ஆழம், அரையடி அகலத்தில் நீளமாக வாய்க்கால்களையும் வெட்டி வைக்கலாம்.

நீர்ப்பாய்ச்சும் முறைகள்
மழை நீர் அந்த வாய்க்கால்களில் நிரம்பி முழுவதுமாக பூமிக்குள் செலுத்தப்படும். மானாவரி நிலங்களில் கோடை உழவு செய்வது போல், மரப்பயிர்களை மரத்தை சுற்றி வட்டப்பாத்தி அமைக்க வேண்டும். சரியான இடங்களில் மரங்களின் அருகே பிறை வடிவ வாய்க்கால்களை எடுத்து வைக்க வேண்டும். ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகளை அமைக்க வேண்டும். மொத்த நிலத்தின் தாழ்வான பகுதியில் பண்ணைக்குட்டைகள் அமைக்கலாம்.
தமிழகத்தில் இருக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் தரிசு நிலங்களில் கோடை உழவு செய்து வைக்கலாம். நீர் நிலைகளை தூர்வாரி, வரப்புகளை உயர்த்தி கட்டுவதன் மூலம் மழை நீரை சேகரிக்கலாம். இதனால் நிலத்தடி நீரும் உயரும். நிலங்களில் 'பூளுடிங்' முறைப்படி வெள்ளமாக நீரை பாய்ச்சும் முறை மற்றும் வாய்க்கால் மூலம் நீரைப்பாய்ச்சும் முறைகளை முழுவதுமாக நிறுத்த வேண்டும்.

நிலத்தடி நீர் உயர வழி
சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறைகளை பின்பற்ற வேண்டும். நீர் ஆவியாவதை தடுக்க பண்ணைக் கழிவுகள் மூலம் 'மூடாக்கு' கொண்டு மூட வேண்டும். தென்னந்தோப்புகளில் இரண்டு வரிசைக்கு இடையில் இரண்டு அடி ஆழத்தில் அரையடி அகலத்தில் வாய்க்கால்கள் எடுத்து தென்னைக் கழிவுகளை போட்டு பாசனம் செய்வதன் மூலம் வறட்சியான காலத்திலும் மரங்களை காப்பாற்றலாம்.
நீர் நிலைகளில் (நீர் செறிவூட்டும் தண்டு) எனப்படும் ஆழ்துளை அமைப்புகளை அமைப்பதன் மூலம் மழைக்காலத்தில் நீர் நிலைகளின் உபரி நீரினை வீணாக்காமல் மண்ணில் செலுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தினை கணிசமாக உயர்த்தலாம்.
- ந.ஜெயராஜ், வேளாண் துணை இயக்குனர்
நீர் மேலாண்மை பயிற்சி நிலையம், மதுரை

Advertisement

 

மேலும் விவசாய மலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
04-ஜன-201717:42:21 IST Report Abuse
SENTHIL NATHAN இதை எல்லாம் அரசு பொது பனி துறை தானே செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X