2016ல் விண்டோஸ் 10
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
00:00

மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் இறுதியாக வெளியிட்ட விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சார்ந்து, அதிகமான முதலீடு செய்துள்ளது என்பது இந்த உலகறிந்த உண்மை.
இதனை வடிவமைப்பதில் மட்டுமின்றி, அதனைக் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் பலவிதமான செயல்பாடுகளை மேற்கொண்டது. தான் சந்தித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தினையும், விண்டோஸ் 1-0 இயக்க முறைமையினைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்திக் கொண்டது. சில வேளைகளில், கம்ப்யூட்டர்களில் கட்டாயமாக இதனை இன்ஸ்டால் செய்தது. பயனாளர் அதனை விரும்பாத போதும், இந்த செயல்பாட்டினை மேற்கொண்டது.

2016 ஆம் ஆண்டு முழுவதும் இந்த முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு முடிவடைந்துவிட்டதால், விண்டோஸ் 10 இயக்க முறைமை எந்த அளவிற்கு மக்களிடம் சென்றடைந்தது எனப் பார்க்கலாம். Net Marketshare என்னும் ஆய்வமைப்பு இது குறித்து கணிப்பு ஒன்றை மேற்கொண்டு, கிடைத்த முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தக் கணிப்பு மிகத் துல்லியமான ஒன்று இல்லை என்றாலும், விண்டோஸ் 10 குறித்த பொதுவான தகவல்களை இதிலிருந்து அறியலாம்.
2016 ஆம் ஆண்டின் இறுதியில், விண்டோஸ் 10, 24.25 சதவீத கம்ப்யூட்டர்களில், பன்னாட்டளவில் பதியப்பட்டுள்ளது. சென்ற 2015 ஆம் ஆண்டின் இறுதியில், இது 10% ஆக மட்டுமே இருந்தது. இதே காலத்தில், விண்டோஸ் 7, 55.68% லிருந்து 48.34% ஆகக் குறைந்தது. விண்டோஸ் 8.1, 3.1% குறைந்து 6.9 ஆக இருந்தது. விண்டோஸ் எக்ஸ்பி 11%லிருந்து 9% ஆக இறங்கியது. சென்ற செப்டம்பரில், மைக்ரோசாப்ட் தன் அறிக்கையில், விண்டோஸ் 10 சிஸ்டம் 40 கோடி சிஸ்டங்களில் இயங்கி வருவதாக அறிவித்தது. தற்போது நிச்சயமாக இந்த எண்ணிக்கை உயர்ந்து 5-0 கோடியைத் தாண்டி இருக்கலாம். இந்த அறிவிப்பிற்குப் பின்னர், மைக்ரோசாப்ட் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
விண்டோஸ் 10 இயக்க முறைமையுடன், மைக்ரோசாப்ட் தன் எட்ஜ் பிரவுசரையும், அதிக ஆரவாரத்துடன் இணைத்து வெளியிட்டது. விண்டோஸ் 10, சென்றடைந்த அளவிற்கு, எட்ஜ் பிரவுசர் மக்களை அடையவில்லை. 2015ல், 2.79% ஆக இருந்து, 2016 முடிவில், 5.33% ஆக இருந்தது.
ஆனால், குரோம் பிரவுசரின் பங்கு, இக்காலத்தில், 24% உயர்ந்து, 56.43% ஆக இருந்தது. இக்காலத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 26% குறைந்து 20.84% ஆக அமைந்தது.
விண்டோஸ் 10 உயர்ந்து வரும் நிலையிலும், எட்ஜ் பிரவுசர் கொஞ்சம் கூட கூடுதல் வேகம் காட்டவில்லை. எட்ஜ் பிரவுசர், தொழில் நுட்ப ரீதியாகச் சிறப்பானது என்று அனைவரும் ஒத்துக் கொண்டாலும், வசதிகளைக் கொண்டிருந்த வகையில், மக்கள் குரோம் பிரவுசரையே பயன்படுத்தி வருகின்றனர்.
இன்று இணைய உலகில் யாரும் நெருங்க முடியாத இடத்தில் குரோம் பிரவுசர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. எட்ஜ் பிரவுசர் தொடர்ந்து பல புதுமைகளைப் புகுத்தினாலும், பிரவுசர் போட்டியில் தோல்வியையே தழுவி வருகிறது. ஆனாலும், மைக்ரோசாப்ட் தன் எட்ஜ் பிரவுசர் முதல் இடத்தைப் பிடிக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளது.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X