வேர்ட் டிப்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2017
00:00

படுக்கைக் கோடு அமைக்க
வேர்ட் டாகுமெண்ட்டில் ஏதேனும் ஓர் இடத்தில் படுக்கைக் கோடு அமைக்க வேண்டியதிருந்தால், அதற்கான கீயைத் தேர்ந்தெடுத்து, தொடர்ந்து அழுத்த வேண்டும் என நாம் நினைத்து செயல்படுகிறோம். அதற்கான சுருக்க வழி ஒன்று உள்ளது. ஹைபன் என்னும் இடைக்கோட்டு அமைக்கும் கீயைத் தேர்ந்தெடுத்து, மூன்று முறை அழுத்தி, பின்னர் என்டர் தட்ட, உடன் அந்த மூன்று ஹைபன்கள் இருந்த இடத்தில், படுக்கைக் கோடு ஒன்று அமைக்கப் பட்டிருப்பதனைக் காணலாம். அவ்வாறு அமையவில்லை என்றால், மாறா நிலையில் உள்ள அந்த வசதி, செட்டிங்ஸ் மூலம் முடக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

வேர்டில் எக்ஸெல் ஒர்க் ஷீட் சார்ட் பதித்திட
பொதுவாகவே, மைக்ரோசாப்ட் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள புரோகிராம்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும். எடுத்துக் காட்டாக, வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் உள்ள சார்ட் ஒன்றை அப்படியே பதித்திடலாம். இதனைக் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மூலம் மேற்கொள்ளலாம்.
வேர்ட் டாகுமெண்ட்டில் பதிக்க விரும்பும் எக்ஸெல் சார்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும். சார்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு பகுதியைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.
உடன் கண்ட்ரோல் + சி (Ctrl+C ) அழுத்தி, அதனை கிளிப் போர்டில் காப்பி செய்திடவும்.
அடுத்து வேர்ட் டாகுமெண்ட் செல்லவும்.
டாகுமெண்ட்டில் எந்த இடத்தில், காப்பி செய்த சார்ட்டினை ஒட்ட வேண்டுமோ, அந்த இடத்திற்கு கர்சரைக் கொண்டு செல்லவும்.
ரிப்பனில் ஹோம் டேப் தேர்ந்தெடுக்கவும்.
Paste டூலில் உள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். பின்னர் Paste Special என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் இப்போது Paste Special டயலாக் பாக்ஸைக் காட்டும்.
இங்கு Microsoft Office Excel Chart Object என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இதில் Paste Link ரேடியோ பட்டன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பின்னர் ஓகே கிளிக் செய்திட்டால், வேர்ட், நீங்கள் தொடர்பு படுத்திய சார்ட்டினை, டாகுமெண்ட்டில் இணைத்துக் கொள்ளும்.

எண்கள் அமையும் இடைவெளி
வேர்டில் அமைக்கும் டாகுமெண்ட்களில், வரிகளில் வரிசையாக எண்களை அமைப்போம். ஒவ்வொரு வரியிலும், எண்களுக்கும், அடுத்து வரும் டெக்ஸ்ட்டுக்கும் இடையேயான தூரம் நாம் டைப் செய்வதைப் பொறுத்து அமையும். அது போல இல்லாமல், ஒரே மாதிரியாக, இந்த இடைவெளியை அமைக்கலாம். அதற்கான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.
ரிப்பனில் Page Layout டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
Page Setup குரூப்பில் உள்ள Line Numbers என்னும் டூலில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Line Number Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Page Setup
டயலாக் பாக்ஸில் உள்ள Layout டேப்பினைக் காட்டும்.
Line Numbers பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது Line Numbers டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
அடுத்து From Text என்னும் பாக்ஸில் உள்ள அளவை, நீங்கள் வரிகளில் எந்த அளவிற்கு முன்னதாக எண்கள் இருக்க வேண்டுமோ, அதற்கேற்றார்போல் அதில் தரப்பட்டுள்ள அளவினை அமைக்கவும்.
அடுத்து ஓகே கிளிக் செய்து Line Numbers டயலாக் பாக்ஸை மூடவும்.
பின்னர், ஓகே கிளிக் செய்து Page Setup டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும். இனி நீங்கள் விரும்பியபடி எண்களை அமைக்கலாம். உங்கள் நன்றிக்கு நன்றி.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X