அதிக சம்பளம் பெறும் 'டாப் -10' துறைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2017
00:00

சமூக அந்தஸ்து மற்றும் சம்பளம் ஆகியவை தான் வேலைகளை தீர்மானிக்கின்றன. சம்பளத்திற்காகத் தான் வேலைகளுக்கு போட்டி இருப்பதை அறிவோம். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், பின்வரும் 10 துறைகள்/பணிகளை டாப் 10 சம்பள துறைகள் என பட்டியலிடுகிறது.

1. மேனேஜ்மென்ட் புரபஷனல் : ஐ.ஐ.எம்., உள்ளிட்ட மேனேஜ்மென்ட் நிறுவனங்களில் படிப்பு முடிக்கும் மேனேஜ்மென்ட் புரபஷனல்களுக்கு ஆண்டுக்கு 20 முதல் 40 லட்சம் வரை சம்பளம் தரப்படுவதால் இது பட்டியலில் முதலிடம் பெறுகிறது.

2. இன்வெஸ்ட்மென்ட் பாங்கர்ஸ்: அனலிஸ்ட் ஆக துவங்கும் இந்த வேலையில் அசோசியேட், வைஸ் பிரசிடண்ட், டைரக்டர், எம்.டி., என கிராப் நீள்கிறது. 5 லட்சத்தில் துவங்கி 40 லட்சம் வரை செல்கிறது. கோல்ட்மேன் ஸாச், ஜெ.பி.,மார்கன், டட்ச் பாங்க், எச்.எஸ்.,பி.சி., என புகழ் பெற்ற நிறுவனங்கள் இதில் அதிகம்.

3. ஐ.டி., சாப்ட்வேர் இன்ஜினியர்: ஆண்டுக்கு ஒன்றரை முதல் 10 லட்சம் வரை பெரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் தான் அதிக எண்ணிக்கையில் வேலை பெறுகின்றனர். ஏனெனில் இவர் களுக்கான தேவை எப்போதும் அதிகம். புரோகிராம் அனலிஸ்ட், புராஜெக்ட் லீட், புரோகிராம் மேனேஜர் என பதவி உயர உயர சம்பளமும் அதிகமாகிறது.

4. சி.ஏ., ( சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்): மிக மிக அதிகமான எண்ணிக்கையில் இளைஞர்கள் நுழைய விரும்பும் இந்த துறையில் வெற்றிகரமாக சி.ஏ., வை முடிப்பவர் துவக்கத்தில் ஆண்டுக்கு ஐந்து முதல் ஏழு லட்சம் வரை சம்பளம் பெறலாம்.

5. எண்ணெய் மற்றும் நிலத்தடி வாயு துறை நிபுணர்கள்: ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி.எல்., பாரத் பெட்ரோலியம் போன்ற துறையின் முன்னணி நிறுவனங்களில் சேரும் புதியவர்களுக்கு மூன்றரை லட்சம் முதல் 5 லட்சம் வரை சம்பளம் தரப்படுகிறது.

6. மருத்துவத் துறை:
மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க, டாக்டர்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது. துறையின் சிறப்புப் பிரிவுகளில் படிப்பை முடிப்பவருக்கு கடுமையான தேவை உள்ளது. ஆண்டுக்கு 4 .5 முதல் ஆறு லட்சம் வரை சம்பளம் தரப்படுகிறது.

7. ஏவியேஷன் துறை: கடந்த சில ஆண்டுகளில் வர்த்தக ரீதியாக இந்தத் துறை பெரும் வளர்ச்சியை கண்டு வருகிறது. தனியார் மற்றும் பொதுத் துறை விமான சர்விஸ் நிறுவனங்கள் அதிகரித்துள்ளதால் குறைந்த பட்ச சம்பளம் 4 முதல் 6 லட்சம் வரை இதில் விமான பணிப்பெண், ஏர் டிராபிக் கண்ட்ரோலர் முதல் ஸ்டூவர்ட் வரை உள்ள பணியிடங்களில் சம்பளம் தரப்படுகிறது.

8. மாடலிங் மற்றும் நடிப்பு: சினிமா தவிர கடந்த 20 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்து வரும் துறை சின்னத்திரை. ஒரு நாள் நடிப்புக்கு 2000 முதல் 10000 வரை சம்பளம் பெறக்கூடிய நடிப்பு வாய்ப்பை இது கொண்டுள்ளது. இது தவிர பேஷன் ஷோ, விளம்பரம், பில்போர்ட் விளம்பரம் என பல்வேறு பணிநிலைகளை இந்தத் துறை கொண்டுள்ளது.

9. சட்டத் துறை: பொதுத் துறை, தனியார் துறை என பல்வேறு துறைகளிலும் நிறுவனங்களிலும் எண்ணற்ற வாய்ப்புகளை தரக் கூடியது இந்தத் துறை. அதிலும் தேசிய சட்டக் கல்லுாரியில் படித்து வருபவருக்கு குறைந்தது 6 முதல் 10 லட்சம் வரை சம்பளம் தரப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களிலும் இந்தத் துறை நிபுணர்களுக்கு வரவேற்பு உள்ளது.

10. வியாபார ஆலோசகர்கள்: பெஞ்ச் மார்க் அனலிஸ்ட், கன்சல்டன்ட், புராஜெக்ட் லீட் என இந்தத் துறையில் சிறப்புப் பணி புரிபவர்களை பிசினஸ் ஆலோசகர்கள் எனக் கூறுகிறோம். இவர்களுக்கு தரப்படும் சம்பளமானது 4 முதல் 7 லட்சமாக உள்ளது.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X