மூடை சுமந்து படிக்கும் மாணவர்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2017
00:00

நன்றாக படிக்காவிட்டால், 'நீ எல்லாம் மூடை தூக்கத்தான் லாயக்கு...' என்று திட்டுவர் பெற்றோர். ஆனால், படிப்பதற் காகவே மூடை தூக்குகின்றனர், சில கல்லுாரி மாணவர்கள்.
விடிந்தும், விடியாத காலை வேளையிலேயே, களைகட்ட ஆரம்பித்து விடுகிறது, சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் வட்டம், கீழச்சீவல்பட்டி வாரச்சந்தை. சிறிய, பெரிய லாரிகளில் காய்கறி மூட்டைகள் சந்தைக்குள் வர, அம்மூட்டைகளை லாரிகளிலிருந்து இறக்கி, அந்தந்த கடைகளுக்கு கொண்டு செல்லும் பணியினை சுறுசுறுப்பாக செய்கின்றனர், மூடை தூக்கும் தொழிலாளர்கள்.
அவர்களில், மெக்கானிக்கல் இன்ஜீனிரிங் படிக்கும் வெங்கடேஷ் மற்றும் சூரியா; எம்.எஸ்சி., விலங்கியல் படிக்கும் விக்னேஷ், பி.எஸ்சி., மாணவர் சண்முகம் போன்றோரும் இருக்கவே, ஆச்சரியப்பட்டு அவர்களை அணுகினோம்...
'நாங்க, கஷ்டப்படுற குடும்பத்த சேர்ந்தவங்க. பள்ளிக்கல்வியை தாண்டி, மேலே படிக்க வசதியில்ல. ஆனா, கல்லுாரியில் சேர்ந்து, விருப்பப்பட்ட படிப்பை படிக்கணும்ன்னு ஆசை. அதனால, படிப்புக்கான செலவுகளை நாமே பார்த்துக்கணும்; அதுக்கு என்ன செய்யலாம்ன்னு யோசிச்ச போதுதான், மூடை சுமக்கும் கூலி வேலை இருப்பது நண்பர்கள் மூலம் தெரிய வந்தது. இதில் எந்த சங்கடமும் எங்களுக்கு இல்லை; மாறாக, எங்க உழைப்புல படிக்கிறோம்ங்ற பெருமைதான் இருக்கு...' என்றனர் ஒரே குரலில்!
'திருப்புத்தார், காரைக்குடி, கிழச்சீவல் பட்டின்னு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் வாரச்சந்தை கூடும். காலை, 4:00 மணியிலிருந்து, 8:00 மணி வரை வேலை. வேலையை பொறுத்து ஒரு நாளைக்கு, 200 ரூபாயில் இருந்து, 400 ரூபாய் வரை கிடைக்கும். இதன்மூலம், படிப்பு, உடை மற்றும் எங்கள் செலவிற்கு போக வீட்டிற்கும் கொடுக்க முடியுது; அத்துடன், காலையில் உடற்பயிற்சியாகவும் இருக்கு...' என்று குறிப்பிட்டனர்.
இவர்களை அறிமுகப்படுத்திய மூடை சுமக்கும் தொழிலாளர் அமைப்பின் தலைவர் ரமேஷ்பாபு, 'இது போல இன்னும் சில மாணவர்கள் இருக்கிறாங்க; படிப்பு முடிச்சு வேலைக்கு போகும் போது சொல்லிட்டு போவாங்க; பெருமையா இருக்கும். அவர்கள் போவதும், புதுசாய் மாணவர்கள் வருவதும் நடந்துகிட்டேதான் இருக்கு. 'நல்லா படிக்கணும்ப்பா அதுதான் முக்கியம்'ன்னு சொல்லித்தான் இங்கே வரச்சொல்வோம். அதே போல இந்த மாணவர்கள் யாருமே அரியர்ஸ் இல்லாமல் நல்லா படிக்கிறாங்க. இவர்களது படிப்பிற்கு எங்களால் இந்தளவிற்காகவது உதவ முடிகிறதே என்பதில் திருப்தி...' என்றார்.
படிக்கும் போதே ஆண்ட்ராய்டு போன், சினிமா, பப் என்று ஆடம்பரத்திற்காக காலம், பணம், உடம்பு என வாழ்க்கையை விரையமாக்கும் மாணவர்கள், இவர்களைப் பார்த்து திருந்தி, நன்றாக படித்து, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கவேண்டும்!

- எல்.எம். ராஜ்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
palaniswamy eswaran - coimbatore,இந்தியா
17-ஜன-201707:21:29 IST Report Abuse
palaniswamy eswaran நன்றி
Rate this:
Share this comment
Cancel
Johnson Ponraj - சென்னை,இந்தியா
15-ஜன-201713:13:05 IST Report Abuse
Johnson Ponraj படிக்கும் போதே ஆண்ட்ராய்டு போன், சினிமா, பப் என்று ஆடம்பரத்திற்காக காலம், பணம், உடம்பு என வாழ்க்கையை விரையமாக்கும் மாணவர்கள், இவர்களைப் பார்த்து திருந்தி, நன்றாக படித்து, வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
15-ஜன-201712:21:16 IST Report Abuse
Manian நம்ம ஊரிலே இருந்து அமெரிக்கா போற பையன்களும் எச்சில் தட்டை கழுவது போன்ற வேலை செய்கிறார்கள். இந்த மாணவர்கள் படிப்போடு மனித வள ஆற்றலையும் கற்றுக் கொள்கிறா்கள். பொருப்புணர்ந்த இவர்கள் நல்ல பணியாளர்களாக, அல்லது சுய தொழில் முதலாளிகளாக கண்டிப்பாக வருவார்கள்.காலம், நேரம், பொருள் இவற்றை இவர்கள் உணர்ந்தது போல் இவர்கள் பெற்றோர்களும் இருப்பது இன்னும் மகிழ்ச்சி தருகிறது.திரு கலாமின் கனவு நாயகர்கள் இவர்கள். போற்றப் பட வேண்டியவர்கள். எந்த தொழிலையும் தெய்வத் தொண்டாக பார்க்கும் உனக்கு,நானும் உனக்கு உதவி செய்வேன் என்கிறார் கண்ண பெருமான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X