நம்பிக்கை விதை! | பொங்கல் மலர் | Pongalmalar | tamil weekly supplements
நம்பிக்கை விதை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

14 ஜன
2017
00:00

தண்ணீரில்லை
கைகழுவ
வேண்டியது தானா
விவசாயத்தை...?

தண்ணீருக்குள்ளேயே
தவமிருந்தோம்
அது படைப்பியல்!
தண்ணீருக்காக
தவமிருக்கிறோம்
இது அரசியல்!

கதிர் அரிவாள் போலவா
இருக்க வேண்டும்?
கழனித் தொழிலாளியின்
வாழ்க்கை...
கேள்விக்குறியாக...!

எந்தத் தறியில்
யார் நெய்தது?
கந்தல் துணியாகவே
இருக்கிறதே
நெசவாளர்களின்
சொந்த வாழ்க்கை!

எப்படி எங்கள்
வாழ்க்கை மட்டும்
வறண்டே கிடக்கிறது?
இது...
நீரிலேயே நிற்கும்
சலவைத் தொழிலாளியின்
சந்தேகம்?

வலைகளை விடவும்
சல்லடையாயிருக்கிற
வாழ்க்கை மீனவர்களுக்கு!

ஈவுகளை
தீர்மானிப்பது யார்?
உழைப்பாளிகளின்
கணக்குகளின்
வியர்வை விடையாகிறது
வறுமை மீதியாகிறது!

தயங்காதீர்!
ஓடப்பயந்த நதிகளில்
கிருமிகள் வந்து
குடி இருக்கும்!
உயரப் பறந்த நதிகளே
அருவிகள் என்று
பெயர் எடுக்கும்!

நம்புங்கள்!
கண்ணீரை விடவும்
உயர்வானது வியர்வை!
அதனால் தான்
அழுவதைப் போல்
நடிக்க முடிகிறது
வியர்ப்பதை போல்
நடிக்க முடியவில்லை!

முகத்திரி எரிந்தாலும்
முறுவலிக்கும் விளக்குகள்!

மிதிப்பட்டாலும் தம்மை
அலங்கரிக்கும் தரைகள்!

பொங்கும் போது
பூ பூக்கும் பானைகள்!

காயம் பட்டாலும்
இனிக்கும் கரும்புகள்!

நம்பச் சொல்கின்றன நம்மை!
வழி பிறக்கும்...
நடந்து வரும் தையாலும்!
நகத்திலிடும் மையாலும்!

நெல்லை ஜெயந்தா

Advertisement

 

மேலும் பொங்கல் மலர் செய்திகள்:We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X