இலவச ஆண்ட்டி வைரஸ் செயலிகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
00:00

விண்டோஸ் இயக்கத்திற்கென இணையத்தில் கிடைக்கின்ற இலவச வைரஸ் தடுப்பு செயலிகளை, AV Test Institute என்னும் அமைப்பு ஆய்வு செய்து, இந்த ஆண்டில் பயன்படுத்தக் கூடிய ஐந்து செயலிகளைப் பரிந்துரை செய்துள்ளது. மால்வேர் மற்றும் வைரஸ்களிடமிருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாப்பது, நல்ல இணைய தளங்களைக் கூட மால்வேர் எனக் குறிக்கும் தவறை மேற்கொள்ளாமல் இருப்பது, கம்ப்யூட்டர் செயல்பாட்டில் குறுக்கிடாமல் இருப்பது என முக்கியமான ஆறு செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த தேர்வினை நடத்தி, முடிவுகளை இந்த ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட ஐந்து வைரஸ் எதிர்ப்பு இலவச செயலிகளை இங்கு பார்க்கலாம்.

கொமடோ ஆண்ட்டி வைரஸ்
இந்த (Comodo's free antivirus) செயலியைப் பொறுத்தவரை, கட்டணம் செலுத்திப் பெறும் தொகுப்பில் என்ன அம்சங்கள் உள்ளனவோ, அதே அம்சங்கள், இலவசமாகத் தரப்படும் பதிப்பிலும் தரப்பட்டுள்ளன. எனவே, பெரும் பாலோனவர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் தரப்பட்டுள்ள இரு தொழில் நுட்பங்கள் சிறப்பானவையாகக் கருதப்படுகின்றன. அவை, Host Intrusion Prevention System மற்றும் auto-sandboxing technology ஆகும். இதன் மூலம் இதுவரை அறியப்படாத வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களை கம்ப்யூட்டர் சந்திக்கும்போது, அவை கம்ப்யூட்டரைப் பாதிக்காத வகையில் செயல்பாட்டினை மேற்கொள்கிறது. அவற்றைச் சந்திக்கையில், மிக வேகமாக இந்த தொழில் நுட்பம் செயல்பட்டு, உடனடியாக, க்ளவ்ட் சேவையில் கிடைக்கும், அண்மைக் காலத்தில் காணப்பட்ட வைரஸ்களுடன் இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கிறது. ஒப்பிட்டுப் பார்த்து, சரிபார்க்கப்பட்ட பைல்களை மட்டுமே கம்ப்யூட்டரில் நுழைய அனுமதிக்கிறது. இந்த ஆண்ட்டி வைரஸ் செயலியில் தரப்பட்டுள்ள பயர்வால் பாதுகாப்பும், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
இந்த செயலி, விண்டோஸ் இயக்க முறைமையின் விண் 7/8/8,1 மற்றும் விண் 10 ஆகியவற்றில் செயல்படுகிறது. இதனைப் பெற இணைய தளத்தில் https://antivirus.comodo.com/antivirus-for-windows-10/ என்ற முகவரிக்குச் செல்லவும்.

இசெட் என்.ஓ.டி. 32
பல்வேறு பாதுகாப்பு வளையங்களைக் கொண்டதாக ESET NOD 32 என்ற ஆண்ட்டி வைரஸ் செயலி அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். முழுமையான பாதுகாப்பினை, கொஞ்சம் கூடத் தவறு ஏற்படாமல், இது வழங்குகிறது. இதன் பல்வேறு பாதுகாப்பு அம்ச பிரிவுகள் குறிப்பிடத்தக்கவை. வைரஸ்களுக்கு எதிரான செயல்பாடுகளுடன் Antivirus and Antispyware, Antiphishing, Antispam, Network Attack Protection, Botnet Protection, Parental Control, Personal Firewall, Banking and payment Protection, மற்றும் Webcam Protection எனப் பலவகை பாதுகாப்பு வழிகளைப் பல பிரிவுகளாகத் தருகிறது. அந்த வகையில் இலவசமாகக் கிடைக்கும் இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மிகச் சிறந்ததாகும். இதனைப் பெற இணைய தளத்தில் https://www.eset.com/us/home/antivirus/download/ என்ற முகவரிக்குச் செல்லவும். ஒரு மாத காலம் இதனை இலவசமாக இயக்கிக் கொள்ளலாம். ஓராண்டுக்குப் பெற ரூ. 219 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

பிட் டிபண்டர்
தன் ஆண்ட்டி வைரஸ் செயல்பாடுகளுக்காக, அண்மையில் தங்க விருதினைப் பெற்ற செயலி Bitdefender Antivirus. விண்டோஸ் இயக்கத்திற்கு நல்ல துணையாக இது செயல்படுகிறது. 'Behavioral detection' என்று சொல்லப்படும் புதிய தொழில் நுட்பம் ஒன்றை இது பயன்படுத்துகிறது.
இதன் மூலம், வைரஸ் புரோகிராம்களின் செயல்பாட்டினைத் தொடர்ந்து கண்காணித்து, அவற்றை அறிந்து நீக்குகிறது. இதனால், வைரஸ் புரோகிராம்கள் செயல்படத் தொடங்கும் முதல் கணத்திலேயே அவை முடக்கப்படுகின்றன. இதனுடைய செயல் பிரிவுகளில் On-demand & on-access virus scanning and removal, active threat control (using an innovative technique called behavioral detection), anti-phishing, anti-fraud features ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். இதனைப் பெற இணையத்தில் http://www.bitdefender.com/solutions/free.html என்ற முகவரிக்குச் செல்லவும்.

பண்டா ஆண்ட்டி வைரஸ்
விண்டோஸ் இயக்கத்திற்கான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் Panda Anti Virus. இது இயங்க, கம்ப்யூட்டரில் மிகக் குறைந்த அளவான இடமே எடுத்துக் கொள்கிறது என்பது இதன் தனிச் சிறப்பு. கம்ப்யூட்டர் இயக்கத்தினை, இதன் செயல்பாட்டிற்காகச் சிறிது கூட குறுக்கிடுவதில்லை. க்ளவ்ட் சேவையில் இது அவ்வப்போது மேம்படுத்தப்படுகிறது. அவ்வப்போது, சிஸ்டம் பைல்களையும், பிரவுசர்களையும் சுத்தப்படுத்தும் கூடுதல் பணியையும் இது மேற்கொள்கிறது. இதனைப் பெற இணைய தளத்தில் http://www.pandasecurity.com/india/homeusers/downloads/ என்ற முகவரிக்குச் செல்லவும்.

அவிரா
அவிரா ஆண்ட்டி வைரஸ் (Avira antivirus) ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, இந்த ஆய்வு மேற்கொண்ட அமைப்பு, விண்டோஸ் இயக்கத்திற்கானதாகப் பரிந்துரை செய்துள்ளது. இந்த செயலியில், மிகச் சிறப்பாகச் செயலாற்றும் வசதிகளாக இதன் பயர்வால் பாதுகாப்பு வளையம் மற்றும் பெற்றோர் கண்காணிப்பு செயல்பாடு ஆகியவற்றைக் கூறலாம். குறிப்பாக சிறுவர், சிறுமியர்கள், சமூக வலைத் தளங்களைப் பார்வையிடுகையில் கண்காணிக்க இதில் வசதி உள்ளது. https://www.avira.com/ என்ற இணைய தளத்தில் இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
இணைய தளங்களில் இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில், விண்டோஸ் இயக்கத்திற்கானதை மட்டும் ஆய்வு செய்து மேலே குறிக்கப்பட்டுள்ள ஆண்ட்டி வைரஸ் செயலிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவை அல்லாது, மேலும் பல செயலிகள் கிடைக்கின்றன. வாசகர்கள் தாங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் செயல்பாடுகளுக்கேற்ப அவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X