கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
00:00

கேள்வி: நான் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். இணையத்தில் ஒரே பொருளில் தகவல்கள் தரும் பல தளங்களைப் பார்வையிடும்போது, அவை அனைத்தையும் பின் நாளில், அடிக்கடி பார்ப்பதற்காக, புக் மார்க் செய்ய வேண்டியதுள்ளது. இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே புக்மார்க் செய்வதற்குப் பதிலாக, மொத்தமாக புக்மார்க் செய்திட முடியுமா? அதற்கான வழி உள்ளதா? நான் பயன்படுத்துவது குரோம் பிரவுசர். சிஸ்டம் விண்டோஸ் 10.
கே.சத்தியநாதன், கோவை.
பதில்
: நல்ல கேள்வி. பலருக்குப் பயன்படும். நீங்கள் குறிப்பிடும் அனைத்து தளங்களும் திறக்கப்பட்ட நிலையில், Ctrl+Shift+ D ஆகிய கீகளை ஒரு சேர அழுத்தவும். உடன் காட்டப்படும் கட்டத்தில், அனைத்தையும் ஒன்றாக மார்க் செய்திட ஆப்ஷன் தரப்படும். நீங்கள் ஆய்வு செய்திடும் பொருள் அல்லது திறக்கப்பட்ட தளங்களின் பொதுவான பொருளில் இதனை சேவ் செய்திடலாம். மீண்டும் அந்த புக் மார்க்கில் கிளிக் செய்தால், அனைத்துத் தளங்களும் திறக்கப்படும்.

கேள்வி: வழக்கமாக, டாஸ்க் பாரின் வலது ஓரத்தில் கடிகாரம் மட்டும் அதன் பின்னணியில் காலண்டர் இணைந்து காட்டப்படும். ஆனால், விண்டோஸ் 10ல், நோட்டிபிகேஷனுக்கான ஐகான் இடம் பெறுகிறது. வழக்கப்படி இந்த ஓரத்தில் கடிகாரத்தை அமைக்க விரும்புகிறேன். வழி உள்ளதா?
ஆர். மஹேஸ்வரி, திருச்சி.
பதில்:
புதிய மாற்றங்களுக்கு நாம் மெதுவாகவே தான் மாறிக் கொள்வோம். விண்டோஸ் 10 சிஸ்டம் Action Centre என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. இங்கு நமக்கான நோட்டிபிகேஷன் மற்றும் செட்டிங்ஸ் அமைப்பு மாறி மாறிக் காட்டப்படுகிறது. இதன் ஐகான் டாஸ்க் பாரில் வலது மூலையில் அமைந்துள்ளது. இது உங்களைப் போன்ற சிலருக்கு எரிச்சலைத் தருகிறது. இருப்பினும் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகளைக் கீழே தருகிறேன்.
முதலில் ஸ்டார்ட் மெனுவினைத் திறக்கவும். அங்கு 'Taskbar' என டைப் செய்திடவும். கிடைக்கும் பதில்களில் “Taskbar Settings” என்பதில் கிளிக் செய்திடவும்.
“Notification area” என்பதன் கீழ், “Turn system icons on or off” என்பதில் கிளிக் செய்திடவும்.
தொடர்ந்து Action Center தேர்ந்தெடுத்ததை மூடிவிடவும்.
இதன் பின்னர், Action Center ஐகான் இருக்காது. கடிகாரம் மூலைக்குச் சென்றுவிடும்.
இதனை இன்னொரு வழியாகவும் மேற்கொள்ளலாம். டாஸ்க் பாரில் வலது மூலையில் உள்ள நோட்டிபிகேஷன் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கட்டங்களில், கியர் படத்துடன் All Settings என்று உள்ள படத்தில் கிளிக் செய்திடவும். இது மேலே குறிப்பிட்ட விண்டோஸ் 10 செட்டிங்ஸ் பக்கத்தை திறக்கும். இங்கு, “Personalization.” என்பதைத் தேர்ந்தெடுத்து, “Turn System Icons On or Off.” என்பதில் கிளிக் செய்திடவும்.

கேள்வி: ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தன் போன் தயாரிப்பு தொழிற்சாலையைத் தொடங்க, இந்திய அரசிடம் சலுகைகளைக் கேட்டுள்ளதாகச் சென்ற ஆண்டு எழுதியிருந்தீர்கள். அரசு சலுகை வழங்கியதா? ஆப்பிள் நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து குறைந்த விலையில், ஐபோன்கள் வெளி வருமா?
ஆர். ஜெயபாலன், நாகப்பட்டினம்.
பதில்:
இல்லை. நம் அரசு ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆப்பிள் நிர்வாகம் கேட்ட வரிச் சலுகைகளைத் தர இயலாது என்று கை விரித்துவிட்டது. பெங்களூருவைச் சேர்ந்த Wistron என்னும் நிறுவனத்தின் துணையுடன், தன் தொழிற்சாலையைத் தொடங்க ஆப்பிள் திட்டமிட்டது. ஆனால், அரசு, ஆப்பிள் கேட்ட சலுகைகளைத் தரவில்லை. ஆப்பிள் நிர்வாகம் கேட்ட பல வரிச் சலுகைகளைத் தந்தால், மற்ற ஒரிஜினல் எக்விப்மெண்ட் தயாரிப்பாளர்களுக்கும் அதே போல் வழங்க வேண்டியதிருக்கும் என, மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மறுத்துவிட்டார். முன்பு, குறைகள் நீக்கி அமைக்கப்பட்ட ஐபோன்களை இந்தியாவில் விற்பனை செய்திடவும் ஆப்பிள் அனுமதி கேட்டு, அது மறுக்கப்பட்டது. தற்போது, ஆப்பிள் நிறுவனத்தின் விண்ணப்பம், வர்த்தகம், நிதி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகள் அடங்கிய கூட்டு அமைச்சக குழுவின் பரிசீலனையில் உள்ளது. என்ன முடிவு வரப்போகிறது எனப் பார்க்கலாம்.

கேள்வி: பல நேரங்களில், என் தேவைகளுக்கேற்ப, தயாரித்துக் கொண்டிருக்கும் எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், நெட்டாகவும், படுக்கையாகவும் வரிசைகளை இணைக்கும் பழக்கம் உள்ளவன் நான். அவ்வாறு இணைக்கையில், இணைத்த இடத்தில், ஒரு பிரஷ் ஐகான் காட்டப்படுகிறது. அதில் டூல் பார் ஒன்றும் மெனு ஒன்றும் காட்டப்படுகிறது. இது ஏன் ஏற்படுகிறது. வேலையிலிருந்து நம் கவனத்தை திசை திருப்பும் இதனை நீக்க முடியுமா?
கா. சுலோசனா, பழனி.
பதில்:
தேவை இல்லை என்றால் நீக்குவதற்கான வழிகளையும் எக்ஸெல் தருகிறது. நீங்கள் குறிப்பிடும் மெனு Insert Options button என அழைக்கப்படுகிறது. இது உங்கள் கவனத்தைத் திசை திருப்புவதாக நீங்கள் கருதினாலோ, அல்லது இது பயன்படுத்தப் படப்போவதில்லை என்று முடிவு செய்தாலோ, இதனைக் காட்டாதவாறு செய்திடலாம்.
1. முதலில் Excel Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும்.
2. டயலாக் பாக்ஸின் இடது பக்கம், Advanced என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கிடைக்கின்ற பல்வேறு ஆப்ஷன்ஸ் கொண்ட பட்டியலில் named Cut, Copy, and Paste என்று இருப்பது வரை ஸ்குரோல் செய்து செல்லவும்.
4. அங்கு Show Insert Options Buttons என்று இருப்பதில், செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை நீக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: பேஸ்புக்கில் என் நண்பர்களின் பதிவில் இணைத்துத் தரப்படும் விடியோ பைல்கள், பெரும்பாலும் நாம் இயக்கத் தொடங்கிய பின்னரே இயங்குகின்றன. ஆனால், சில அந்த தகவல்களைப் பார்க்கும் போதே இயங்குகின்றன. இது தேவையில்லாத வேலையாகப் பல நேரங்களில் உள்ளது. இந்த தானாக இயங்கும் தன்மையை எப்படி மாற்றுவது?
ஏ. சிவா, கூடக் கோவில்.
பதில்
: பேஸ்புக் இரண்டு வகையாக விடியோ பைலை இயக்குகிறது. உங்களுக்கு விருப்பமில்லை எனில், தானாக அது இயங்குவதை நிறுத்திவிடலாம். பேஸ்புக் திரையில், மேலாக வலது பக்கமாகக் காட்டப்படும் சிறிய அம்புக் குறி அல்லது முக்கோணத்தினை கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் செட்டிங்ஸ் (Settings) என்பதில் கிளிக் செய்து செட்டிங்ஸ் மெனு பெறவும். திரையின் இடது புறம் உள்ள பிரிவில், கீழாக Videos என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். அதில் கிளிக் செய்திடவும். பின்னர், இரண்டு பிரிவுகள் காட்டப்படும். ஒன்று மாறா நிலையில் உள்ளவை; இன்னொன்று Auto-Play Videos. பேஸ்புக் திறந்தவுடன், அதில் பதியப்பட்டுள்ள வீடியோக்கள் உடனே இயங்க வேண்டாம் என முடிவெடுத்தால், இதன் அருகில் உள்ள அம்புக் குறியை கிளிக் செய்து, அதில் Off என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

கேள்வி: கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து என் ஆண்ட்ராய்ட் போனிற்கு அப்ளிகேஷன்களை இறக்கிப் பதிகையில், ஒவ்வொன்றுக்கும் ஒரு ஷார்ட் கட், ஐகானாக அமைக்கப்படுகிறது. இதன் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது இல்லாமல், அப்ளிகேஷன்களை அமைக்க முடியுமா? அமைக்க முடியும் என்றால், அதற்கான வழி காட்டவும். நன்றி.
எஸ். பாஸ்கரன், மதுரை.
பதில்:
ஷார்ட் கட் ஐகான் அமைக்கப்படுவது, நாம் விரைவாக அப்ளிகேஷனை இயக்கிப் பயன் பெறத்தான். அது நல்லதுதானே. இருப்பினும், நீங்கள் கேட்கும் செயல்பாட்டிற்கும் வழி காட்டுகிறேன். கூகுள் பிளே ஸ்டோர் திறக்கவும். மேலாக இடது புறத்தில், மூன்று சிறிய கோடுகள் உள்ள ஐகானில் தட்டவும். பின்னர் Settings திறக்கவும். இதில் 'Add icon to Home Screen' என ஒரு ஆப்ஷன் கிடைக்கும். இதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இது, தானாக ஷார்ட் கட் அமைவதனைத் தடுத்துவிடும்.

கேள்வி: நான் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கு ஆங்கில மொழியில் டைப் செய்வதற்குக் கற்றுக் கொடுக்க விரும்புகிறேன். தற்போது, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் கீ போர்டில் எழுத்துகளையும் சொற்களையும் டைப் அடிக்கக் கற்றுக்கொண்டு விட்டாள். அடுத்து சற்று வேகமாக டைப் செய்திட பயிற்சி தரும் இணைய தளங்கள் உள்ளனவா? அவற்றின் முகவரிகளைத் தரவும்.
ஆர். காளிதாஸ், திருப்பூர்.
பதில்:
நல்ல முயற்சி. முன்பு போல இதற்கென பயிற்சி தரும் “டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட்” சென்று வர நேரம் இல்லாமல், பல மாணவர்கள் தட்டச்சு பயிற்சியினை மேற்கொள்வதே இல்லை. இன்றைய நவீன சாதனங்களில் டைப் செய்திட, பழைய தட்டச்சு இயந்திரங்களில் மேற்கொள்ளும் பழக்கமும் கை கொடுப்பதில்லை. ஆனால், இணையத்தில் இதற்கெனப் பயிற்சி அளிக்கும் புரோகிராம்களும் உள்ளன. தளங்களும் உள்ளன. அந்த வகையில், உங்கள் மகள் பயிற்சி பெற, http://thetypingcat.com/typing-speed-test என்ற தளத்தில் வேகமாக தட்டச்சு செய்திட பயிற்சி தரப்படுகிறது. இங்கு ஒரு நிமிடம், மூன்று நிமிடங்கள், ஐந்து நிமிடங்கள் என கால வரையறை செய்து கொண்டு, சிறிய திரையில் தரப்படும் சொற்களை தட்டச்சு செய்திட வேண்டும். வரிசையாக எழுத்துகளை தட்டச்சு செய்திடாமல், அந்த செயலி காட்டும் எழுத்துகளைத் தட்டச்சு செய்திட வேண்டும்.
எந்த எழுத்து, அதனை எந்த விரல் கொண்டு தட்டச்சு செய்திட வேண்டும் எனக் காட்டப்படுகிறது. இது கற்றுக் கொள்பவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. இறுதியில் மதிப்பெண் காட்டுகிறது. குழுவாகவும் சேர்ந்து போட்டியில் கலந்து கொள்ளலாம்.
தட்டச்சு வேகத்தினை சோதிக்க http://www.typingtest.com/ என்ற இணைய தளமும் உதவுகிறது. கீ போர்டில் நல்ல பழக்கம் மேற்கொண்டு, ஓரளவிற்கு விரைவாக தட்டச்சு செய்பவர்கள், இந்த தளத்தில் தரப்படும் சோதனையை மேற்கொண்டு, தங்கள் தட்டச்சு வேகத்தினை உயர்த்திக் கொள்ளலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X