விண்டோஸ் 7 உதவி நிறுத்தம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2017
00:00

பன்னாட்டளவில், அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் 7 தொடர்ந்து இயங்கி வருகிறது. விண்டோஸ் 10 சிஸ்டம் 20% கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 7 சிஸ்டம், 50% கம்ப்யூட்டர்களிலும் இயங்கி வருகின்றன. இருப்பினும், மைக்ரோசாப்ட் அதற்கு விடை கொடுக்கும் செயல்பாடுகளில் இறங்கியுள்ளது. அதன் ஜெர்மானிய வலை மனை தளத்தில், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான அனைத்து உதவிகளும், வரும் ஜனவரி 14, 2020 அன்று நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளில், விண்டோஸ் 7 பயன்படுத்துவோருக்கு எந்த உதவியும் மைக்ரோச்சாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட மாட்டாது. பாதுகாப்பு சார்ந்த மற்றும் தொழில் நுட்ப உதவிகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து கிடைக்காது.
இதற்கான முதன்மை உதவி, சென்ற 2015 ஆம் ஆண்டு, ஜனவரி 13 முதல் நிறுத்தப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதே போல, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கு முதன்மை உதவி வரும் ஜனவரி 9, 2018 அன்று நிறுத்தப்படும். மொத்த உதவிகள் ஜனவரி 10, 2023 அன்று நிறுத்தப்படும். விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு, இது அக்டோபர் 13, 2020 மற்றும் மொத்த உதவி நிறுத்தம் அக்டோபர் 14, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான உதவி நிறுத்தம் குறித்த அறிவிப்பு, அதன் பயனாளர்களுக்குக் கலவரத்தை உண்டு பண்ணுவதாக உள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டத்தின் இயக்கத்திற்கான செயல்முறைச் செலவுகள் அளவு கடந்து அதிகமாக இருப்பதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி, விண்டோஸ் 7 சிஸ்டத்தின் தற்போதைய கட்டமைப்பு, வைரஸ் மற்றும் மால்வேர் உட்புகப் பல வழிகளைக் கொண்டுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

இத்துடன், கம்ப்யூட்டர் மற்றும் துணை சாதனங்கள் தயாரிப்பவர்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கும் வகையில், தங்கள் சாதனங்களுக்கு ட்ரைவர் பைல்களை உருவாக்கித் தர மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.எம்.டி. இன்டெல் அல்லது குவால்காம் நிறுவனத்தின் புதிய சிப்களில், விண்டோஸ் 7 இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியானால், இதற்கான தீர்வு என்ன? ஒரே தீர்வு, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வதுதான். தனிப்பட்ட முறையில், விண் 1-0 சிஸ்டத்தில் பாதுகாப்பு வளையங்கள் அதிகமாகத் தரப்பட்டு, அதன் இயக்கம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பயோ மெட்ரிக் பாதுகாப்பு வசதியும் வழங்கப்படுகிற்து. பெர்சனல் அசிஸ்டன்ட் கார்டனா இதன் புதிய தனி வசதியாகும்.
பொதுவாக, மைக்ரோசாப்ட் மிக முன்னதாகவே தன் சிஸ்டங்களுக்கான உதவி நிறுத்தப்படும் நாளை அறிவித்துவிடுகிறது. இதனால், பயனாளர்கள், அடுத்த சிஸ்டத்திற்குத் தங்கள் கம்ப்யூட்டர்களை உயர்த்திக் கொள்ளலாம்.
சிஸ்டம் மாறிக் கொள்வதைப் பொறுத்தவரை, வீடுகளில் வைத்துப் பயன்படுத்துவோருக்குச் சிக்கல் இருக்காது. வர்த்தக அலுவல்களுக்கெனப் பயன்படுத்துபவர்களுக்குத் தான், சிஸ்டம் மாறுதல் ஒரு சவாலாக இருக்கும். பல மாதங்கள், ஏன், சில ஆண்டுகள் கூடத் தேவைப்படலாம்.
நிறுவனங்களுக்கென மட்டும் தயாரிக்கப்பட்ட புரோகிராம்களைப் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சார்ந்து இயங்கும் வகையில் மாற்றப்பட வேண்டும். இதற்கான காலம் மற்றும் ஹார்ட்வேர், சாப்ட்வேர் செலவினங்கள் அதிகம் தேவைப்படும்.
இருப்பினும், விண்டோஸ் 10 சிஸ்டத்தில் மைக்ரோசாப்ட் தொடர்ந்து தந்து வரும் புதிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்காக, அனைவருமே, அதற்கு மாறிக் கொள்வது நல்லது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X