"தெரிந்து கொள்ளுங்கள்” | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
"தெரிந்து கொள்ளுங்கள்”
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஜன
2017
00:00

ட்ரைவர் (Driver): விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் ட்ரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான டிரைவர்கள் தரப்படும். எனவே ட்ரைவர் புரோகிராம் அடிப்படையில், அது எந்த சாதனத்திற்காகப் பயன்படுகிறதோ, அதனைச் சேர்ந்ததாகும்.

Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.

MMC - Multimedia Card : ப்ளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலாம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் நிலையைப் பயன்படுத்துவதால் இவற்றைக் கையாள்கையில் கவனமாக இருக்க வேண்டும்.

ஹனி மங்க்கி (Honey Monkey): கம்ப்யூட்டரில் நாம் இணையத்தில் உலா வருவது போல, நம்மைப் போலவே செயல்பாடுகளை மேற்கொள்ளும் புரோகிராமிற்கு ஹனி மங்க்கி என்று பெயர். இணைய தளங்களில் ஹேக்கர்கள் தாக்கம், வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள், பாதுகாப்பினைச் சேதப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளனவா என்று இது தொடர்ந்து தேடிப் பார்த்துக் கொண்டே இருக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X